பண்ணை வீட்டில் நடிகைக்கு.. தங்க நகையை கிலோ கணக்கில் கொட்டி தந்த பெரிய நடிகர்? பிரபலம் சொல்வது நிஜமா?
சென்னை: நடிகை சௌந்தர்யா உயிர் பிரியும்போது 2 மாத கர்ப்பமாக இருந்தார். மிகச்சிறந்த நடிகை.. அவர் மட்டும் இந்நேரம் உயிரோடு இருந்திருந்தால், அந்த பெரிய கட்சியின் எம்.பி.யாக உயர்ந்திருப்பார்" என்று மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் கூறியிருக்கிறார்.
சமீபத்தில் Aagayam Cinema என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தந்திருந்த பேட்டி ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் நடிகை சௌந்தர்யா பற்றி பல்வேறு விஷயங்களை அவர் கூறியிருந்தார்.

அழகான பெண்: சபிதா ஜோசப் சொல்லும்போது, "கர்நாடகாவை சேர்ந்த பெண் செளந்தர்யா.. நன்றாக படிக்கக்கூடிய பெண்.. பெயருக்கேற்ற அழகான பெண்.. கல்யாணமே வேண்டாம் என்று சொல்லும் நபர்கள்கூட, சௌந்தர்யாவை கண்டால் மயங்கிவிடுவார்கள். சாமியார், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என அனைவருக்குமே சௌந்தர்யாவை பிடிக்கும்.
அவரது அப்பா ஒரு டைரக்டராக இருந்தார்.. செளந்தர்யா கன்னடத்தில் 2 படங்கள் நடித்தபிறகு, தமிழில் ஆர்.வி. உதயகுமார் இயக்கிய பொன்னுமணி படத்தில் கார்த்திக்கிற்கு ஜோடியாக அறிமுகமானார்.. கார்த்திக்கிற்கு சௌந்தர்யாவை பார்த்ததுமே, பிடித்துவிட்டது. அதனால், அந்த படத்துக்கு உடனே கால்ஷீட் தந்தாராம்.. முதல்படமே சக்சஸ் ஆகிவிட்டது.. ரஜினி, கமல், விஜயகாந்த் என பெரிய ஹீரோக்களுடன் அடுத்தடுத்து நடித்து பிஸியான நடிகையாகிவிட்டார்.
பெரிய நடிகர்: அதேபோல, பிடித்த நபர்கள் சௌந்தர்யாவை பயன்படுத்திட்டுதான் இருந்தாங்க.. அதில், ஒரு பெரிய நடிகருடன் சேர்ந்து செளந்தர்யா 2 படங்களில் நடித்திருந்தார்.. அவருக்கு செளந்தர்யாவை அதிகமாக பிடித்துவிடவும், மைசூர் பக்கத்தில் அரண்மனை போல இருக்கும் பெரிய பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறார். இந்த விஷயம் நெருங்கிய 2,3 பேருக்கு மட்டுமே தெரியுமாம்.
அந்த பண்ணை வீட்டில் 15 நாட்கள் தங்கியிருந்திருக்கிறார்கள்.. சௌந்தர்யாவுக்கு அந்த பெரிய நடிகர் பல லட்சங்களை தந்துள்ளார்.. கிலோ கணக்கான நகைகளை கொட்டி தந்துள்ளார்.. தங்கத்தாலேயே நடிகையை குளிப்பாட்டினாராம். இப்படித்தான் வேறொரு நடிகைக்கு 3 கிலோ தங்க நகையை கொட்டி தந்திருக்கிறார் அதே பெரிய நடிகர்.
பிரச்சாரம்: சௌந்தர்யா கடைசியாக என்டிஆர் பேரனுடன் இணைந்து நடித்திருந்தார்.. பிறகு ஒரு கட்சியில் இணைந்து தேர்தல் சமயத்தில், பிரச்சாரம் செய்வதற்காக ஹெலிகாப்டரில் கிளம்பினார்.. அப்போது, தன்னை அறிமுகப்படுத்திய டைரக்டர் ஆர்.வி. உதயகுமாருக்கு போன் போட்டு பேசியிருக்கிறார்.
"நீங்கதான் எனக்கு வாய்ப்பு தந்தீங்க, உங்களாலதான் இன்று இந்த உயரத்தில் இருக்கிறேன், உங்களுக்கு என் நன்றி" என்று சொல்லி உள்ளார். என்ன திடீர்னு நன்றியெல்லாம்? என்று டைரக்டர் கேட்டதற்கு, "என்னமோ சொல்லணும்னு தோணுச்சு" என்றாராம். அவரிடம்தான் கடைசியாக சௌந்தர்யா பேசியிருக்கிறார். பிறகு ஹெலிகாப்டர் பல்டி அடித்து எரிந்து சாம்பலாகிவிட்டது.
2 மாத கர்ப்பம்: சௌந்தர்யா கடைசியாக நடித்த அந்த ஹீரோவும், அடுத்த சில தினங்களில் கார் விபத்தில் இறந்துவிட்டார்.. இவர்களுக்குள் எந்தவிதமான தொடர்பும் இல்லையென்றாலும், கடைசியாக நடித்த இருவருமே விபத்தில் இறந்தது, ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்நேரம் சௌந்தர்யா உயிரோடு இருந்திருந்தால், அந்த கட்சியின் எம்.பி.யாக இருந்திருப்பாங்க.. உயிர் பிரியும்போது 2 மாத கர்ப்பமாகவும் இருந்திருக்கிறார்" என்றெல்லாம் சபிதா ஜோசப் அதில் தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications