பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் எழுத்தாளர் நான்! என் முன்பு அந்த பொண்ணுக்கு கொடுமை- பிரியா தம்பி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் எழுத்தாளராக இருக்கும் பிரியா தம்பி சமீபத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தன் முன்பு பெண்ணுக்கு நடந்த பிரச்சனை குறித்து பேசி இருக்கிறார்.

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் இரண்டிலுமே இப்போது அதிரடியான திருப்பம் வந்திருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியலில் இனியா காதல் விஷயம் குடும்பத்திற்கு தெரிய வந்திருக்கிறது. அதனால் ஈஸ்வரி இனியாவிற்கு திருமணம் செய்வதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அதேபோல பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் அரசியின் காதல் குடும்பத்திற்கு தெரிய வந்திருக்கிறது. இதனால் குடும்பத்தினர் எல்லோரும் அழுது புலம்பி கொண்டிருக்கிறார்கள்.

Baakiyalakshmi Serial vijay TV

எழுத்தாளர் கொடுத்த விளக்கம்

இப்படி இரண்டு சீரியலிலும் முக்கிய திருப்பம் வந்திருக்கிறது. இந்த சீரியலின் ரைட்டராக இருக்கும் பிரியா தம்பி சமீபத்தில் ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது அவர் பேசுகையில் மீடியான்னு எடுத்துக்கிட்டாலே சினிமா மற்றும் சீரியல் என்று எதிலும் பெண்களுடைய பிரச்சனைகளை ஆண்கள் எழுதுவாங்க. பெண்கள் எப்படி இருக்கணும் என்று ஆண்கள் விரும்புகிறார்களோ அப்படி உருவாக்குவாங்க.

Baakiyalakshmi Serial vijay TV

ஆண்கள் உருவாக்கும் பிரச்சனைகளுக்கு ஆண்களே தீர்வு சொல்லுவாங்க. அதுபோல ஒரு வேலைக்கான மீட்டிங் இரண்டு மணி நேரம் தான் என்றால் ஆண்கள் அதை 20 மணி நேரம் நடந்துவாங்க. அந்த 20 மணி நேரத்திற்கு எந்த அவசியமும் இருக்காது. ஆனால் அவர்களிடம் நிறைய நேரம் இருக்கும். ஏன்னா அவங்களுடைய வீட்டை பாத்துக்க மனைவி, அம்மா என்று யாராவது ஒருத்தங்க இருப்பாங்க. ஆனால் நமக்கு அப்படி கிடையாது.

கணவரின் கடுகடுப்பு

அதுபோல என்னுடைய வாழ்க்கையில் நான் பார்த்த ஒரு சம்பவம், ஒரு நாள் ஒரு பெண் வண்டியில் இருந்து கீழே விழுந்து இருக்காங்க. அதனால அவங்களுடைய சல்வார் கிழிஞ்சிருக்கு. அப்போ அவங்க கணவருக்கு போன் செய்து எனக்கு ஒரு டிரஸ் கொண்டுட்டு வர முடியுமா என்று கேட்கிறாங்க, அதற்கு அவர் பத்து நிமிஷமா அங்க திட்றாரு. நான் பக்கத்தில் இருக்கிறேன் எனக்கு கேக்குது.

சிலிர்த்த நிமிடம்

அந்த ஒரு சின்ன உதவிய கூட அந்த கணவர் செய்யல. கொஞ்ச நேரம் நான் இங்கே உட்கார்ந்து இருக்கிறேன் என்று அந்த பொண்ணு சொல்லிட்டு உட்கார்ந்து இருந்தாங்க. அப்போ போனில் பாக்கியலட்சுமி சீரியலை ப்ளே பண்றாங்க. எனக்கு ஒன்னே ஒன்னு தான் மேடம் என்னைக்காவது பாக்கியலட்சுமி சீரியல் பாக்யா மாதிரி ஆனா போதும் என்று என்கிட்டையே சொன்னாங்க.

நம் மீது காதல் வேண்டும்

அதுபோல நம்ம குழந்தைகள் நம்முடைய வீட்டில் சுயமா பேச முடியவில்லை என்றால் அவங்க உலகத்தில் எங்கேயும் பேச முடியாது. குழந்தைகள் பேசும் இடமாக அந்த வீடு இருக்கணும் என்பது என்னுடைய ஆசை. எனக்கு சுருள் முடி ரொம்ப பிடிக்கும் ஆனாலும் இந்த முடியை அக்செப்ட் பண்ணிக்க எனக்கு 40 வருஷம் ஆகிடுச்சு.

மோட்டிவேஷன் வார்த்தை

இந்த பங்கஷனில் கலந்து கொள்வதற்காகத்தான் இந்த ஹேர் ஸ்டைல் மாற்றி இருக்கிறேன். நம்மை நாம் கவனிக்கிறதில் தொடங்குகிறது என்று நான் நம்புறேன். யார் உன்னை தப்பா நினைப்பாங்கன்னு நீ வருத்தப்பட்டு இருக்கிற... உனக்காக யாரு இருந்தா... முதலில் அதை யோசி. உன்னை நீயே புஷ் பண்ணி எழுந்திருக்காத வரைக்கும் உன் லைஃப்ல ஒண்ணுமே நடக்காது என அந்த நிகழ்ச்சியில் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

ஆரம்ப வாழ்க்கை

அதுபோல பிரியா தம்பியை ரசிகர்கள் பலரும் Starbucks Akka என்று குறிப்பிடுவதை பார்க்க முடிகிறது. அதுபோல அவர் சில வருடங்களுக்கு முன்பு பேசிய பேட்டியும் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரியா தம்பி பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு மட்டும் ரைட்டராக இல்லை ஆரம்பத்தில் இவர் இயக்குனர் திருச்செல்வம் இயக்கிய பொக்கிஷம் என்ற சீரியலின் மூலமாகத்தான் வசனம் எழுத தொடங்கினாராம்.

திறமைக்கு இல்லை தடை

அதற்குப் பிறகு விஜய் டிவியில் தர்மயுத்தம் என்ற சீரியலில் வசனம் எழுதி இருக்கிறார். அதற்கு பிறகு தான் ஆபீஸ், 7c போன்ற சீரியல்களுக்கும் வசனம் எழுதி இருக்கிறார். அதுபோல ஒவ்வொரு சீரியலுக்கும் படப்பிடிப்புக்கு அவருக்கு முந்தைய நாள் இரவு தான் காட்சிகளை தருவாங்க அதற்கு இரவு நேரத்தில் நான் வசனம் எழுதுவேன் என்றும் கூறியிருக்கிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

முதல் தொடர்

சிங்கிள் மதர் ஆக தன்னுடைய இரண்டு குழந்தைகளை கவனிக்க வேண்டும் என்று வீட்டில் இருந்தே வேலையை தொடங்கிய பிரியா தம்பி அதற்குப் பிறகு பத்திரிக்கையில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். அதில் "நான் பேசாத பேச்செல்லாம்" என்ற தொடரை எழுதி இருக்கிறார். அந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

தொடரும் பயணம்

அதற்கு பிறகு தான் இவர் சீரியலில் திரைக்கதை, வசனம் எழுதத் தொடங்கி இருக்கிறார். அதுவும் மௌன ராகம் என்று சீரியல் மூலமாக திரைக்கதை மற்றும் வசனத்தையும் எழுதி இருக்கிறார். அந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்றதும் அதைத் தொடர்ந்து இப்போது ரசிகர்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் சீரியலில் தன்னுடைய பிரதிபலிப்பை காட்டிக் கொண்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+