அய்யய்யே... அப்போ யசோதாவோட புருஷன் வச்சது மருதாணி இல்லியா!

Subscribe to Oneindia Tamil

சென்னை:சன் டிவியின் ரோஜா சீரியலில் நேத்து ரோஜா அழுகாச்சி கொஞ்சம் தூக்கலாவே போயிருச்சு. அத்தைகிட்ட தன் சின்ன வயசு போட்டோவை அனு எரிச்சதை சொல்ல வேண்டி வந்துருது.

நீ இடது கையில பரிமாறினதை நானும் கவனிச்சேன் ரோஜா. எல்லார் முன்னாலயும் கேட்க வேணாம்னு விட்டுட்டேன். உன் தீ காயத்தை மறைக்கத்தான் அர்ஜுன் உனக்கு மருதாணி போட்டுவிட்டான்னு உன் ரூமுக்கு வந்தப்போ ரெண்டு பேரும் பேசினதை கேட்டேன்.

Yasodha gets irritated over her husbands action

கவலைப் படாத ரோஜா, உனக்கு அர்ஜுன் எல்லா உதவியும் செய்வான்னு ரோஜாகிட்ட சொல்றாங்க அத்தை. இப்படி ஒரே அழுகாச்சி.. கொஞ்சம் போர்தான்..

இதுக்கு நடுவுல புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கிட்ட கணக்கா, யசோதா புருஷன் சோடா புட்டி, தன் பொண்டாட்டி தூங்கறப்போ மருதாணி போட்டுடணும்னு சொல்லிட்டு அவளுக்கே தெரியாம அவ தூங்கினப்புறம் மருதாணி போட்டு விடறான்.

Yasodha gets irritated over her husbands action

காலையில எழுந்திரிச்சு யசோதா பார்த்துட்டு, என்னய்யா இதுன்னு கோவப்படறா..இல்லை. உன் கையில அர்ஜுன் மாதிரி நானும் மருதாணி வச்சுவிட ஆசைப்பட்டேன்.அதான்னு சோடா புட்டி நெளியறான். கையை கழுவு யசோதா.. கை எப்படி செவந்திருக்குன்னு பார்க்கறேன்னு சொல்ல, யசோதாவும் கழுவறா.

Yasodha gets irritated over her husbands action

கை சுத்தமா இருக்கு.. ஒண்ணுமே இல்லை.. என்னது இதுன்னு புருஷன் கேட்க..மாடு..மாடு.. நீ மோந்து பாருன்னு மூக்குல வைக்கறா. நீ மருதாணின்னு நினைச்சு புதினா சட்னியை வச்சிருக்க.. என் கண்ணுல பட்டு இருந்துச்சு.. கண்ணு அவிஞ்சு போயிருக்கும்யா.. லூசுன்னு.. சொல்லிட்டு இந்த வயசுல உனக்கு ரொமான்ஸான்னு கேட்டுட்டு போறா. ம்ம் இந்த வயசுல ரொமான்ஸ் பண்ணாம எந்த வயசுல பண்றதுன்னு சோடாபுட்டி மனசுக்குள்ள பேசிகிட்டு நிக்கறான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+