யோகி பாபுக்கு யோகம்.. படிப்படியான வளர்ச்சி.. தங்கமான நபர்னு புகழ்ந்த விஜய் சேதுபதி.. எகிறியடித்த ஏஸ்
சென்னை: விஜய் சேதுபதியுடன் இணைந்து யோகி பாபு நடித்துள்ள படம் "ஏஸ்".. இந்த படம் திரைக்கு வந்து, கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு இணையான வேடத்தில் யோகி பாபுவும் அசத்தியிருக்கிறார் என ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். இது யோகி பாபுவுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து கொண்டிருக்கிறதாம்.
சந்தானம், சூரி யோகி பாபு என 3 பேருமே காமெடியிலிருந்து ஹீரோவாக உயர்ந்துள்ளனர். 3 பேரின் படங்களும் தற்போது ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. அந்தவகையில், யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார்.

அபார வளர்ச்சி
நெல்சன் இயக்கிய 'கோலமாவு கோகிலா' படபடத்தில் யோகி பாபுவின் நடிப்பு பட்டிதொட்டி எங்கும் பரவியது.. ரஜினியின் 'ஜெயிலர் 2' படத்தில் முக்கிய கேரக்டர் நடித்திருக்கிறார்..
இந்நிலையில், இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஏஸ்.. இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து யோகி பாபு, ருக்மணி வசந்த், பி.எஸ். அவினாஷ், பப்லூ பிரித்திவிராஜ், திவ்யா பிள்ளை உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்த 'ஏஸ்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது.. அப்போது பேசிய நடிகர் விஜய் சேதுபதி "யோகிபாபுதான் இந்த படத்தின் இன்னொரு ஹீரோ.. அவரின் சிந்தனையை நினைத்து ஆச்சரியப்படுவேன்... இத்தனை படங்களில் நடித்து வருகிறார். ஆனால் அப்படி உழைக்கிறார்..
தங்கமான மனிதர்
படத்தின் டப்பிங் நேரத்தில் கூட காட்சியை மேம்படுத்த முயற்சி செய்வார். இந்த படத்தின் முக்கிய தூண் என்றால் அது யோகிபாபு தான். சமீபத்தில் யோகி பாபு பற்றி சில செய்திகளை கேள்வி பட்டேன். அவரிடம் பழகியதை வைத்து கூறுகிறேன் அவர் அப்படிப்பட்ட மனிதர் கிடையாது, தங்கமான மனிதர்" என்று புகழாரம் சூட்டியிருந்தார்.
தற்போது திரையரங்குகளில் ஏஸ் படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.. விஜய் சேதிபதியின் ஸ்டைலிஷான தோற்றம், யோகி பாபுவின் லேடி கெட்டப் இரண்டுமே கலக்கலாக இருப்பதாக கூறப்படுகிறது.. முழுக்க முழுக்க கலகலப்பான நகைச்சுவையான படமாக ஏஸ் படம் உள்ளதாகவும், முதல் பாதியை விட இரண்டாம் பாதி இன்னும் விறுவிறுப்பாக உள்ளதாகவும் விமர்சனங்கள் வருகின்றன. அதாவது, லாஜிக் என்ற ஒன்றை மறந்துவிட்டு , இந்த படத்தை வயிறு குலுங்கி ரசித்து சிரிக்கலாம் என்கிறார்கள்.
மகிழ்ச்சியில் யோகி பாபு
ஆனால், விஜய் சேதுபதி, யோகி பாபு இரண்டு கேரக்டர்களை தவிர, மற்ற கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்றாலும், விஜய் சேதுபதி, யோகி பாபு இருவருமே படத்தை தாங்கி பிடித்திருக்கிறார்கள் என்றும் அதிலும், யோகி பாபுவின் நறுக் காமெடிகள் தியேட்டரையே அதகளப்படுத்துவாகவும் விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளன.. அதேசமயம், ஏஸ் படத்தில் உருவக்கேலியை யோகி பாபு தவிர்த்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றன.
மொத்தத்தில், விஜய் சேதுபதிக்கு இணையான வேடத்தில் யோகி பாபுவும் ஏஸ் படத்தில் கலக்கியிருப்பதாக வரும் பாராட்டுக்களுல் யோகி பாபு மகிழ்ச்சியில் உள்ளாராம்..!!












Click it and Unblock the Notifications