மீம்ஸ்களில் ஜாலியாக வலம் வந்த இர்பான்.. விரக்தியில் எடுத்த திடீர் முடிவு.. தத்துவம் வேற லெவல்
சென்னை: திருமணத்தை நிறுத்திய பிறகு இர்பான் எடுத்த அதிரடி முடிவு ரசிகர்களின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
யூடியூப் பிரபலமான உணவு விமர்சகர் இர்பான் தற்போது தத்துவத்தை கூறி ரசிகர்களை மோட்டிவேஷன் செய்திருக்கிறார்.

உணவு விமர்சகர்
தற்போதைய சூழ்நிலையில் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தாதவர்கள் இல்லை என்று சொல்லுமளவிற்கு தான் நாளுக்கு நாள் சமூக வலைத்தளத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதில் அனைவருக்கும் ஃபேவரைட் சாப்பாடு என்பதாக இருந்து வருகிறது. அதை பற்றி ரிவ்யூ செய்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்த இர்பான் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கும் போட்டோக்கள் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

மீம்ஸ்களில் வைரல்
இர்பான் ஒரு உணவு விமர்சகராக இருந்தாலும் பல்வேறு நாடுகளுக்கும் பல்வேறு இடங்களுக்கும் சென்று அவர் உணவினை ரிவ்யூ செய்து வருவதை வைத்து ரசிகர்கள் பலர் மீம்ஸ்களில் அவருடைய புகைப்படத்தை வைத்து கலாய்த்து வருவார்கள். தொடர்ந்து இவருடைய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டு வந்தாலும் அதைப்பற்றி இவர் கவலைப்படுவதில்லை. தன்னைப் பார்த்து பலர் சந்தோஷப்படுவது தனக்கு மகிழ்ச்சிதான் என்று இவர் கூறியிருக்கிறார்.

திருமணத்தை நிறுத்த காரணம்
ஒரு சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் ரசிகர்கள் பலர் தொடர்ந்து திருமணம் எப்போது என்று கேட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் அதற்கு அவர் தன்னுடைய திருமணத்தை பற்றி கேட்க வேண்டாம் திருமணத்தை நிறுத்தி விட்டோம். எனக்கும் அந்தப் பெண்ணுக்கும் கருத்துவேறுபாடுகள் அதிகமாக இருந்தது. அதனால் இப்போது அனைவரிடமும் பேசி அவர்களுக்கு புரியவைத்து அனைவரின் சம்மதத்தோடு திருமணத்தை நிறுத்தி விட்டேன். இனி என்னுடைய துறையில் கவனத்தைச் செலுத்துவேன் என்று கூறியிருந்தார்.

தொடரும் தத்துவங்கள்
திருமணத்தை நிறுத்திய பிறகு இவர் தற்போது மீண்டும் வெளிநாடுகளுக்கு பறந்து சென்று உள்ளார். அங்கே சென்று இவர் வழக்கம்போல எடுக்கும் போட்டோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து இருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் பலர் இவருக்கு ஆறுதல் சொல்லும் விதமாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பல ரசிகர்கள் எப்போது இந்தியாவுக்கு திரும்பி வருவீர்கள் என்று கேட்டு வருகின்றனர். ஆனால் அவர் அதற்கு விரைவில் என்று மட்டும் கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் தன்னுடைய புகைப்படங்களுக்கு ஒவ்வொன்றுக்கும் இவர் வெளியிட்டிருக்கும் கேப்ஷன் ரசிகர்களை மேலும் குழப்பம் அடையச் செய்திருக்கிறது. அந்த மாதிரிதான் தற்போதைய புகைப்படத்திற்கு கூட உங்கள் வாழ்க்கையை வாழ உங்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். இப்பொழுது இங்கே இரு என்று கூறியிருக்கிறார். இந்த வார்த்தைகளை அகிரோக் புரோஸ்டேட் என்பவர் கூறியதாக கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications