Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவாங்க.. இப்போ மகா சங்கமம் வேற.. ரசிகர்கள் பரவசம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த லாக்டோன்க்கு பிறகு சீரியல்கள் முன்ன மாதிரி டிஆர்பியை கூட்டுவதற்காக சேனல்களில் அதிரடியாக பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார்கள்.

அது மட்டுமல்ல சில சீரியல்களில் கேள்விகளை கேட்டு பரிசுகளை வழங்கி ரசிகர்களை இம்பிரஸ் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த மாதிரிதான் ஜீ தமிழ் இப்போ களமிறங்கி இருக்குது.

முன்னணி சீரியல்கள் இரண்டு சீரியல்களை ஒன்றிணைத்து மகா சங்கமம் என்கிற பெயரில் ஒரு மணி நேரம் ஓடவிட்டு அவர்களின் அலப்பறைகள் ரசிகர்களுக்கு விருந்து ஆக்குகிறார்கள். அதுமட்டுமல்ல அதில் இருந்து ஒரு சில கேள்விகளும் கேட்டு அதற்கு பரிசுகளும் வழங்குகிறார்கள் அதுவும் தங்கம் தர்றாங்களாம் தங்கம்!.

 2,2 சீரியல்களைச் சேர்த்து

2,2 சீரியல்களைச் சேர்த்து

ஜீ தமிழில் முன்னணி சீரியல் களான யாரடி நீ மோகினி சீரியலும் கோகுலத்தில் சீதை சீரியல் இரவு எட்டு மணியிலிருந்து 9 மணிவரை ஒரு மணி நேரம் மகாசங்கமம் ஆக ஒளிபரப்ப போகிறார்களாம். இந்த இரண்டு சீரியல்களையும் ஒன்றாக இணைத்து ஒரே சீரியலாக ஒளிபரப்ப போகிறார்கள். யாரடி நீ மோகினி சீரியல் ஸ்வேதாவுக்கு பழசு எல்லாம் மறுத்துவிட்டதாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

 ஐஸ்வர்யாவுக்கு பிறந்த நாள்

ஐஸ்வர்யாவுக்கு பிறந்த நாள்

இந்த சீரியலில் ஐஸ்வர்யாவுக்கு பர்த்டே பார்ட்டியும் கொண்டாடப் போகிறார்கள். இந்த நிலையில் கோகுலத்தில் சீதை சீரியல் வசுந்தராவை வில்லன் கடத்தி வைத்திருப்பதை அர்ஜுன் காப்பாற்றி கூட்டிக்கொண்டு வந்து இருக்கும்போது வசுந்தராதேவின் அப்பாவின் நெஞ்சு வலியோடு ஆஸ்பிட்டல் இருக்கிறார். இப்படி இரண்டு சீரியலும் வெவ்வேறு நிலையில் இருக்கும்போது இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து நடிக்கப் போகிறார்கள்.

 ஆகஸ்ட் 3 முதல்

ஆகஸ்ட் 3 முதல்

இந்த மகா சங்கமம் ஆகஸ்ட் 3ம் தேதியிலிருந்து ஒளிபரப்ப போகிறது . என்னதான் இருக்குன்னு பொறுத்திருந்து பார்த்ததா தெரியும். அதுமட்டுமல்ல சத்யா சீரியலும் ஒரு ஊர்ல ராஜகுமாரி சீரியலும் இணைந்து ஒன்பது முப்பதுக்கு முதல் பத்து முப்பது வரை ஒளிபரப்பப்படுகிறது இந்த சீரியலிலும் வெவ்வேறு கதைக்களம் தான் இருக்கிறது. நம்ம சத்யா சொல்லவே வேண்டாம் ஒல்லியா கில்லியாக இருக்கிறார்.

 அமுல் பேபி சத்யா

அமுல் பேபி சத்யா

அவருக்கும் அவருடைய அமுல் பேபிக்கும் சண்டையில் அமுல் பேபி சத்யாவை சமாதானப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் எல்லாமே தோல்வியில் முடிந்து கொண்டிருக்கும்போது ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி சீரியலில் நம்ம ராசாத்தி ஹாஸ்பிடல்ல சீரியஸாக இருக்கும்போது ஹீரோ இனியன் கோவில் கோவிலாக விரதம் இருந்து பக்தர்களுக்கு தர்மம் வைக்கிறார் இப்படி வேறு வேறு கதையோடு போய்கிட்டு இருக்கிற நம்ம சீரியல்கள் அடுத்த வாரத்துல ஒரு கதையாக மாறி வரப்போகிறது.

 மாத்த மாத்தி காட்டுவாங்க

மாத்த மாத்தி காட்டுவாங்க

அது மட்டும் இல்லைங்க இந்த சீரியல்கள் ஒளிபரப்பாகும் போது இந்த சீரியல்கள் முடிந்ததும் இந்த சீரியலில் இருந்து இரண்டு கேள்வி கேட்க போறாங்களாம். அதுல ஒரு கேள்விக்கு பதில் சரியா சொல்லி இருந்தா ஒரு கிராம் தங்கமும் இரண்டு கேள்விகளுக்கும் சரியாக பதில் சொல்லியிருந்தால் ஒரு பவுன் தங்கமாம்.

 ஐடியா சூப்பருங்கோய்!

ஐடியா சூப்பருங்கோய்!

இது அங்க இங்க மக்களை போக விடாம இந்த சீரியலில் கவருவதற்காக இப்படி ஒரு பிடிச்சிருக்காங்க அதுவும் ஒரு நாள் ரெண்டு நாளில் இல்லங்க இனிவரும் காலம் புல்லா இப்படி கொடுக்கப் போறாங்களாம். ஏற்கனவே சன் டிவியில் இதேபோல தினமும் 500 பேருக்கு அஞ்சு லட்சம் பரிசு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில்ஜி தமிழும் களமிறங்கி இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+