Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கெட்டி மேளம் சீரியலில் வேகமாக நகரும் கதை.. எதிர்பாராத திருப்பம்.. இன்றைய எபிசோட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு மணி நேரமான தொடர் கெட்டி மேளம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மகேஷ் நாளைக்கு நிச்சயதார்த்தத்தை வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, அஞ்சலி நிச்சயதார்த்தத்திற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. மகேஷ் விலை உயர்ந்த நெக்லஸை அஞ்சலிக்கு கிப்டாக பிஏவிடம் கொடுத்து அனுப்புகிறான். மறுபக்கம் கவின் கண்கலங்கியபடி இருக்க நண்பர்கள் என்னாச்சு, அஞ்சலி என்ன சொன்னா என்று விசாரிக்க, அஞ்சலிக்கு நாளைக்கு நிச்சயதார்த்தம் நான் இங்கே இருந்தா ஏதாச்சும் பண்ணிக்குவேன் நான் ஊருக்கு கிளம்புறேன் என்று கிளம்புகிறான்.

zee Tamil Chayasingh Gettimelam serial

இந்த சமயத்தில் அஞ்சலி அவனுக்கு போன் செய்து நாளைக்கு எனக்கு நிச்சயதார்த்தம் நீ முதல் ஆளா வந்து எல்லா வேலையும் பார்க்கணும் என்று சொல்ல கவின் கண்கலங்கியபடி எனக்கு என் அம்மாவை பார்க்கணும் போல இருக்கு. அதனால நான் ஊருக்கு போறேன் என்று சொல்லி ஃபோனை வைத்து விடுகிறான்.

அடுத்த நாள் காலையில் துளசி தியாவை நினைத்து வருத்தத்தில் இருக்க, அஞ்சலி உனக்கு முன்னாடி எனக்கு கல்யாணம் ஆவதனால் வருத்தமா இருக்கா அக்கா என்று கேட்க, துளசி அப்படியெல்லாம் இல்லை எனக்கு என் வாழ்க்கை விட உனக்கு நல்ல வாழ்க்கை அமைகிறது ரொம்ப சந்தோஷம்தான் என்று சொல்கிறாள்.

zee Tamil Chayasingh Gettimelam serial

பிறகு அஞ்சலி கவினுக்கு வாய்ஸ் மெசேஜ் செய்கிறாள். கவின் அதை கேட்டுவிட்டு ரிப்ளை செய்யாமல் அவளோட நினைவுகளை நினைத்து வருத்தப்படுகிறான். பிறகு அஞ்சலியை நிச்சயதார்த்தத்திற்கு ரெடியாக சொல்லி பாலமுருகன் திட்டி அனுப்ப அவள் நிச்சயத்திற்கு ரெடியாகிறாள்.

zee Tamil Chayasingh Gettimelam serial

அடுத்ததாக கவின் அம்மா என்னடா ஆச்சு எதுக்கு வருத்தமா இருக்க என்று கேட்க அவன் அமைதியாகவே இருக்கிறான். இந்த சமயத்தில் கவின் நண்பன் போன் செய்து கவின் காதலித்த பெண்ணுக்கு நிச்சயதார்த்தம் என்று சொல்ல அதைக் கேட்டு அதிர்ச்சி அடையும் அவள், காதலால் குடும்பம் பிரிந்தது போதும்.. திரும்பவும் ஒரு பிரிவு வேண்டாம் அந்த பெண்ணை மறந்து விடு என சத்தியம் வாங்குகிறாள்.

இங்கே மகேஷ் வந்துவிட அஞ்சலியையும் அழைத்து வந்து நிச்சயதார்த்தம் மேடையில் உட்கார வைக்கின்றனர். இருவருக்கும் நல்லபடியாக நிச்சயம் நடந்து முடிய மகேஷ் இந்த குடும்பத்துக்காக தான் அஞ்சலியை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்பட்டேன். இனிமே இது என்னுடைய குடும்பம் என சொல்கிறான். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+