கெட்டி மேளம் சீரியலில் ஆரம்பமே அசத்தல்.. தொடங்கியது காதல் காட்சி! இன்றைய அப்டேட்
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கெட்டிமேளம். இந்த சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் அஞ்சலி பாட்டு போட்டி உட்பட எல்லா போட்டியிலும் ஜெயித்து விருதுகளை வென்ற நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, பிடிக்க முடியாத அளவிற்கு விருதுகளை வாங்கி கொண்டு அஞ்சலி வெளியே வருகிறாள். இன்னொரு பக்கம் நண்பர்கள் கவினின் காதல் கடிதத்தை தூக்கி சென்று விட கவின் அவர்களிடம் இருந்து லெட்டரை எடுக்க முயற்சி செய்கிறான்.

பிறகு வெளியே வந்த மகேஷ் வாங்க கார்ல ஏறுங்க, நான் உங்களை வீட்டில் விட்டு விடுகிறேன் என்று சொல்ல அஞ்சலி நான் யாருனு தெரியாதவங்க கூட எல்லாம் வர மாட்டேன் என்று சொல்கிறாள். நான் உங்க காலேஜுக்கு வந்திருக்க சீஃப் கெஸ்ட்டுங்க.. என் மேல நம்பிக்கை இல்லையா? என்று பேசி அஞ்சலியை அழைத்து கொண்டு கிளம்புகிறான்.
காரில் செல்லும் போது மகேஷ் உங்களை பத்தி சொல்லுங்க, ஏன் அமைதியாகவே இருக்கீங்க என்று கேட்க அஞ்சலி அதையெல்லாம் சொல்ல மாட்டேன் என்று சொல்ல மகேஷ் இந்த விருது யாருக்கு என்று ஒவ்வொரு விருதையும் ஒவ்வொருத்தருக்காக பிரித்து சொல்லும் போது மகேஷ் அஞ்சலியின் குடும்பத்தார் பற்றி அறிந்து கொள்கிறான்.
அஞ்சலி வீட்டிற்கு கொஞ்சம் தூரம் இருக்கும் போதே இறங்கி கொள்கிறாள். எல்லாவற்றையும் எடுத்து கொண்டு வீட்டிற்கு செல்ல திடீரென ஏதோ தோன்றி திரும்பி பார்க்க கேட் அருகே மகேஷ் நிற்க அதிர்ச்சி அடைகிறாள்.
பிறகு 5 பாடி கார்ட்ஸ் வருகின்றனர். ஒருவன் தாம்பூல தட்டில் பூ, பழம் ஆகியவற்றை கொண்டு வருகிறான். பிறகு வீட்டிற்குள் நுழைந்த மகேஷ் தன்னை அறிமுகம் செய்து கொண்டு அஞ்சலி குடும்பத்தார் ஒவ்வொருவரிடமும் உங்களை பத்தி அஞ்சலி சொல்லி இருக்கா என்று அஞ்சலி சொன்னதை அப்படியே திருப்பி கூறுகிறான்.
எல்லோரிடமும் ஆசிர்வாதம் வாங்கி விட்டு உங்க பொண்ணை எனக்கு பார்த்ததுமே பிடிச்சு போச்சு என்று பெண் கேட்க எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். தனது விசிட்டிங் கார்டை கொடுத்து விட்டு பேசிட்டு நல்ல முடிவா சொல்லுங்க என்று கிளம்பி செல்கிறான்.
அஞ்சலியின் அண்ணன்கள் பெரிய பிசினஸ் மேன் என்று சொல்ல துளசியும் இந்த கம்பெனி பற்றியும் மகேஷ் பற்றியும் தெரியும், நல்ல மனுஷன் இனி அஞ்சலி தான் முடிவு எடுக்கணும் என்று சொல்கிறாள்.
கார் ஓட்டிக்கொண்டே யாருக்கோ மெசேஜ் செய்தபடி வருகிறான். அடுத்து வெற்றி தனது ஏரியா மக்களுக்கு பென்ஷன் வரவில்லை என்று ஆபிசரை சந்தித்து விசாரிக்க ஆபிசர் திமிராக பேச வெற்றி அவரை அறைந்து நீதி கேட்கிறான். இதை துளசி பார்த்து தவறாக புரிந்து கொள்கிறாள். வெற்றி துளசியை பார்த்ததும் கோவிலில் கெட்டிமேளம் சத்தம் கேட்க அவனது காதல் மேலும் வலுவாகிறது.
அடுத்து லாயர் மோனிகாவிற்கு போன் செய்து குழந்தை யாரிடம் இருக்கிறதோ அவங்களிடம் தான் சொத்துக்களின் பவர் ஆப் அட்டர்ணி இருக்கும் என்று உயில் எழுதி இருப்பதாக ஷாக் கொடுக்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications