கெட்டிமேளம் சீரியலில் தொடங்கிய வேகத்தில் நடந்த அதிரடி சம்பவம்.. இன்றைய அப்டேட்
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு மணி நேரம் மெகா தொடர் கெட்டிமேளம். இந்த சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் மகேஷ், அஞ்சலி திருமணத்திற்காக எல்லோருக்கும் பத்திரிக்கை கொடுக்கும் வேலைகள் தொடங்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, கவிதா எல்லாருக்கும் நேர்ல போய் பத்திரிக்கை கொடுக்குறீங்க ஆனா எங்க அம்மாவ கண்டுக்காம விட்டுட்டீங்க என்று லஷ்மியிடம் கவலை கொள்கிறாள். கொஞ்ச நேரத்தில் கவிதாவின் அம்மா வீட்டுக்கு வருகிறாள்.

உன் மாமியார் தான் என்னை நேரில் சந்தித்து புடவை எல்லாம் எடுத்துக் கொடுத்து கல்யாணத்துக்கு அழைத்ததாக சொல்ல கவிதாவுக்கு லட்சுமியின் மீதான மரியாதை அதிகம் ஆகிறது.
அடுத்ததாக எல்லோரும் மண்டபத்திற்கு வந்து விடுகின்றனர். அஞ்சலியின் தோழிகள் வர கவின் குறித்து விசாரிக்க கவின் எங்களது ஃபோனையும் எடுக்கவில்லை. காலேஜுக்கும் வரவில்லை என சொல்கின்றனர்.

பிறகு தீபா அம்மாவுக்கு போன் போட்டு எங்க இருக்க என்று விசாரிக்க உங்க அப்பா மீட்டிங் போய் இருக்காரு வந்துடறேன் என சொல்கிறாள்.. பிறகு வெற்றி வர, உங்க அக்காவோட நாத்தனாருக்கு கல்யாணம் என்ன மண்டபத்துல விடுறியா என்று கேட்க வெற்றி கோபப்படுகிறான்.
பிறகு வெற்றியின் அம்மா ஆட்டோவில் கிளம்பி கல்யாணத்திற்கு வருகிறாள். வெற்றி கோபமாக இருக்கும் விஷயத்தை சொல்ல தீபா அப்பா மனசு மாறியது போல வெற்றியும் ஒருநாள் மனசு மாறுவான் என்று சொல்கிறாள்.

மகேஷ் மண்டபத்திற்கு வர அவனை ஆரத்தி எடுத்து வர வரவேற்கின்றனர். அதைத்தொடர்ந்து அஞ்சலிக்கு நலங்கு வைக்கும் நிகழ்வுகள் நடக்கிறது. கவிதாவின் அம்மா மற்றும் தீபாவின் அம்மா என இருவரும் சந்தித்துக் கொண்டு நண்பர்களாகின்றனர். கவிதாவின் அம்மா உனக்கு இப்படி நலங்கு வச்சி எல்லாம் பண்ணனும் என்று ஆசைப்பட்டதாக வருந்துகிறாள்.
பிறகு அஞ்சலி கவினை திட்டி வாய்ஸ் மெசேஜ் அனுப்ப அதைக் கேட்ட கவின் வருத்தப்படுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications