கெட்டி மேளம்: குடும்பத்தோடு கைது செய்யப்படும் துளசி.. பிரிந்து செல்லும் தியா - இன்றைய எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு மணி நேரம் மெகா தொடர் கெட்டி மேளம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மோனிகா மற்றும் ஜெகன் என இருவரும் போலீஸ் ஸ்டேஷனில் குழந்தையை கடத்தி விட்டதாக சொல்லி துளசி மீது கம்ப்ளைன்ட் கொடுத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது துளசி வீட்டுக்கு வரும் போலீஸ் இங்கே துளசி யாரு என்று கேட்டு உன்னையும் குழந்தையும் இன்ஸ்பெக்டர் கூட்டிட்டு வர சொன்னாரு என்று சொல்ல சிவராமன் மற்றும் லட்சுமி ஆகியோர் எங்க பொண்ணை தனியாக அனுப்ப முடியாது என அவளுடன் கிளம்பி வருகின்றனர்.

ஸ்டேஷனுக்கு வந்ததும் இன்ஸ்பெக்டர் இது யாரு உன் குழந்தையா என்று கேட்க துளசி ஆமாம் என்று சொல்ல நீ பெத்த குழந்தையா என்று கேட்க சிவராமன் இல்ல ஸ்ரீகாந்த்தோட குழந்தை.. என் பொண்ணுக்கும் அவருக்கும் கல்யாணம் ஏற்பாடு பண்ணியிருந்தோம் ஆனால் கல்யாணத்து அன்று ஏற்பட்ட விபத்துல மாப்பிள்ளை இறந்துட்டாரு அதனால குழந்தையை நாங்க கொண்டு வந்து வளர்க்கிறோம் என்று சொல்கிறார்.
இன்ஸ்பெக்டர் அப்படி எல்லாம் உங்க இஷ்டத்துக்கு கொண்டு போய் வளர்க்க முடியாது.. உங்க மேல இப்போ குழந்தையோட உறவினர்கள் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க என்று சொல்ல மோனிகா மற்றும் ஜெகன் ஆகியோர் என்ட்ரி கொடுக்கின்றனர். சொத்துக்காக ஆசைப்பட்டு குழந்தையை கூட்டிட்டு போய் விட்டதாக சொல்ல இன்ஸ்பெக்டர் குழந்தையை இவர்களிடம் இருந்து பிரித்து மோனிகா, ஜெகனிடம் ஒப்படைக்கிறார்.

பிறகு லட்சுமி மற்றும் சிவராமனை சிறைக்குள் அடைக்கின்றனர். இனிமே அந்த குழந்தைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அந்த குழந்தையை பார்க்க மாட்டேன், பேசமாட்டேன் என எழுதி கையெழுத்து போட்டால் தான் உங்க அப்பா அம்மாவை விடுவேன் என இன்ஸ்பெக்டர் துளசிக்கு அதிர்ச்சி கொடுக்கிறார். வேறு வழியில்லாமல் துளசி கையெழுத்து போட்டு கொடுக்கிறாள்.

இருந்தும் இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் சிவராமனை வெளியே விடாமல் போட்டு அலைக்கழிக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications