கெட்டிமேளம் சீரியலில் எதிர்பாராத திருப்பம்.. உடைக்கப்படும் உண்மை.. இன்றைய எபிசோட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது ஒருமணி நேர மெகாத்தொடர் கெட்டி மேளம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வெற்றி கோவிலில் வைத்து துளசியை சந்தித்து சந்தோஷமடைந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, அடுத்த நாள் காலையில் வெற்றி துளசியை பஸ் ஸ்டாப்பில் வைத்து பார்க்க அவளை பச்சை கலர் சுடிதார் என கூப்பிட துளசி என்னவென்று கேட்க என் அத்தை பொண்ணு என நினைத்து கூப்பிட்டதாக சமாளிக்கிறான்.

zee Tamil Chayasingh Gettimelam serial

அடுத்து ஆபீஸ் வரும் துளசி ஸ்ரீகாந்த் ரூமுக்கு சென்று போட்டோவை பார்த்து வருத்தப்பட அப்போது அங்கு வந்த ஜெகன் நீங்க மெயில் பார்க்கலயா? உங்களை டெர்மினேட் பண்ணியாச்சு, இனிமே உங்களுக்கு இங்கே வேலை இல்லை என்று ஷாக் கொடுக்கிறான்.

துளசி ஒரே முறை தியாவை பார்க்க அனுமதி கேட்க அதெல்லாம் பார்க்க முடியாது, வெளியே போறியா? செக்யூரிட்டி கிட்ட சொல்லி கழுத்தை பிடித்து தள்ளவா என்று துரத்தி விடுகிறான். மறுபக்கம் சிவராமனை போன் போட்டு அழைக்கும் பைனான்சியர் உங்க மேல எனக்கு நம்பிக்கை இல்லை, கொடுத்த பணத்தை திருப்பி கொடுங்க இல்லனா அந்த இடத்தை என் பேருக்கு மாத்தி எழுதுங்க என்று சொல்லி ஷாக் கொடுக்கிறார்.

zee Tamil Chayasingh Gettimelam serial

துளசி வீட்டிற்கு வந்து வேலை போன விஷயத்தை சொல்ல சிவராமன் பைனான்சியர் பணத்தை கேட்ட விஷயத்தை சொல்ல எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர். சிவராமனின் பிள்ளைகள் அந்த இடத்துல எங்களுக்கும் பங்கு இருக்கு, எங்களை கேட்காமல் எப்படி அடமானம் வைக்கலாம் என்று சத்தம் போடுகின்றனர்.

இந்த சமயத்தில் பதறி போய் வீட்டிற்கு வரும் பைனான்சியர் டாகுமெண்ட்டை கொடுத்து ஐயா மன்னிச்சுருங்க, நீங்க பெரிய பாஸோட ஆளுனு சொல்லி இருக்கலாமே என்று சொல்கிறார். நீங்க பொறுமையா பணத்தை கொடுங்க, பெரிய பாஸ் கிட்ட நான் மன்னிப்பு கேட்டேன்னு மட்டும் சொல்லிடுங்க என்று கிளம்பி செல்கிறார்.

zee Tamil Chayasingh Gettimelam serial

வீட்டில் இருக்கும் பாட்டி எல்லா அந்த பையன் வந்து அஞ்சலியை பொண்ணு கேட்டுட்டு போன பிறகு தான் நல்லதாவே நடக்குது, அந்த தம்பியை பார்த்து பேசி முடிக்க வேண்டியது தானே என்று சொல்ல சிவராமன், லட்சுமி மகேஷை பார்க்க கிளம்பி வருகின்றனர்.

அப்போது மகேஷ் பணக்கார பையனாக இருந்தாலும் எல்லாருக்கும் உதவும் குணம் கொண்டவர் என அறிந்து கொள்கின்றனர். இந்த சமயத்தில் மீண்டும் போன் செய்யும் பைனான்சியர் பெரிய பாஸ் கிட்ட மட்டும் சொல்லிடுங்க என்று கெஞ்ச சிவராமன் விசிட்டிங் கார்டில் இருக்கும் மகேஷ் நம்பருக்கு போன் செய்து நன்றி சொல்கிறார்.

அப்போது தான் அந்த பெரிய பாஸ் மகேஷ் என்பது தெரிய வருகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+