கெட்டிமேளம்: துளசிக்கு போனில் வந்த மெசேஜ்.. இக்கட்டான சூழ்நிலையில் அஞ்சலி.. பரபரப்பான தருணம்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒருமணி நேர மெகாத்தொடர் கெட்டி மேளம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வெற்றி துளசியை பாலோ செய்து பஸ்ஸில் ஒய் பிங்க் கலர் புடவை என்று கூப்பிட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, துளசி திரும்பி பார்த்து என்ன என்று கோபப்பட என் அத்தை பொண்ணு கமலி மாதிரி இருந்தது, அதான் கூப்பிட்டேன் என்று சொல்லி சமாளிக்க துளசி அங்கிருந்த லேடி போலீஸ் ஒருவரிடம் அவன் என்கிட்ட வம்பு செய்கிறான் என்று மாட்டி விட்டு செல்கிறான்.

அடுத்து அந்த லேடி போலீஸ் தம்பி நீங்க எம்.எல்.ஏ பையன் தானே என்று சொல்லி கேட்க ஆமாம் அவங்க என் அத்தை பொண்ணு தான் என்று சொல்லி அங்கிருந்து கிளம்பி செல்கிறான்.
அடுத்ததாக சிவராமன் மற்றும் லட்சுமி என இருவரும் மகேஷை பார்க்க வந்திருக்க அவன் எப்பவும் எல்லாருக்கும் உதவி செய்பவன் என புரிந்து கொள்கிறார்கள். மஹேஷும் அஞ்சலியை முதல் முறையாக காலேஜில் தான் பார்த்தேன். ரொம்ப பிடித்து போச்சு. எனக்கு குடும்பம்னு யாரும் இல்ல.. அஞ்சலியை கல்யாணம் பண்ணிக்கிட்டா எனக்கும் உங்க குடும்பத்தோட சேர்ந்து வாழுற வாய்ப்பு கிடைக்கும் என சொல்கிறான்.
இந்த சமயத்தில் மகேஷை பார்த்து நன்றி சொல்ல 10 பேர் கம்பெனிக்கு வருகின்றனர். இதையெல்லாம் வைத்து சிவராமன், லக்ஷ்மிக்கு மகேஷ் பற்றி நல்ல புரிதல் உருவாகிறது. இதையடுத்து வீட்டிற்கு போய் பேசிட்டு நல்ல முடிவாக சொல்வதாக சொல்லி வருகின்றனர்.

மறுபக்கம் அஞ்சலி காலேஜில் லைப்ரரியில் உட்கார்ந்து பாட்டு கேட்டு கொண்டே எதையோ எழுதி கொண்டிருக்க அங்கு வந்த கவின் தனது மனதில் இருக்கும் காதலை சொல்கிறான், ஆனால் அஞ்சலி இதை எதுவும் கேட்காத நிலையில் போன் வந்ததும் வீட்டிற்கு கிளம்புகிறாள். கவின் நான் சொன்னதை கேட்டாயா என்று கேட்க அஞ்சலி அவசரத்தில் தலையாட்டி விட்டு கிளம்பி செல்கிறாள்.
அடுத்ததாக நைட் எல்லாரையும் கூப்பிட பாலமுருகன் தட்டை தட்டி எல்லாரையும் கூப்பிடுகிறான். இதையடுத்து எல்லாரும் ஒன்று கூட மகேஷ் நல்ல பையனாக தான் இருக்காரு.. எல்லாருக்கும் உதவி பண்றாரு என்று சொல்ல இதை கேட்டதும் ரகுராம் மற்றும் கேசவன் ஆகியோர் அப்போ உடனே கல்யாணத்தை வச்சிடலாம் என்று சொல்கின்றனர்.
அஞ்சலி என்கிட்ட ஒரு வார்த்தை கேட்க மாட்டாங்களா என்று புலம்ப துளசி இரு பேசிக்கலாம் என்று சொல்கிறாள். பிறகு பாட்டி இன்னொரு முறை நல்லா விசாரிங்க என்று சொல்ல ரகுராம், கேசவன் ஆகியோர் நாங்க போய் விசாரிக்கிறோம் என்று சொல்கின்றனர்.
நைட் துளசி தூங்காமல் தியாவை பற்றி யோசித்தபடி இருக்க மறுபக்கம் தியா யாருக்கும் தெரியாமல் ஜெகன் போனில் இருந்து என்ன உங்க கூடவே கூட்டிட்டு போய்டுங்க மா.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு என்று இங்கு நடப்பதை வாய்ஸ் மெஸேஜ் அனுப்ப துளசி இதை கேட்டு அதிர்ச்சி அடைகிறாள்.
உடனே தியாவை கூட்டிட்டு வந்துடுறேன் என்று கிளம்ப அஞ்சலி இப்போ நீ போய் தியாவை பார்த்தால் அது அவளுக்கு தான் பிரச்சனையாகும்.. லீகலாக இதை டீல் பண்ணிக்கலாம் என சமாதானம் செய்கிறாள். அடுத்த நாள் காலையில் கேசவன் இன்டர்வியூவுக்கு வருவது போல் மகேஷ் கம்பெனிக்கு வந்து போனில் மகேஷ் பற்றி மரியாதை இல்லாமல் பேசுகிறான்.

இதை பார்த்து வேலை செய்பவர்கள் எல்லாரும் அவனை அடிக்க வருகின்றனர். அடுத்து டீ கடையில் ரகுராம் உங்க பாஸ் எப்படி என மகேஷ் ஆபிசில் வேலை செய்பவர்களிடம் விசாரிக்க அவர்களும் நல்ல விதமாக சொல்கின்றனர். அடுத்து சிவராமன் மகேஷ் வளர்ந்த சர்ச் பாதரிடம் விசாரிக்க அவரும் மகேஷ் நல்ல பையன் என பேசுகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications