டாப் சீரியலில் இருந்து விலகிய கதாநாயகன்.. இனி இவருக்கு பதில் இவர்தான்! மாற்றப்பட்ட கதை
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சந்தியா ராகம் சீரியல் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தான் துவங்கப்பட்டது. தொடர்ந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் சந்தியா, ராஜீவ் பரமேஸ்வர், அந்தாரா, லஸ்யா, சுர்ஜித், குரு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இப்ப வரைக்கும் இந்த சீரியல் சுமார் 300 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. அக்கா தங்கைகளின் பாசத்தை பேசும் கதையாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து சீனு என்ற கதாபாத்திரத்தில் சுர்ஜித் நடித்து வந்த நிலையில் கடந்த மாதம் அவர் இந்த சீரியலில் இருந்து வெளியேறினார்.

அது குறித்து சுர்ஜித் குமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ள பதிவில் "கடவுள் எல்லாவற்றையும் ஒரு காரணத்திற்காகவே செய்கிறார். என் சந்தியா ராகம் குடும்பத்தை விட்டு விலக உள்ளேன். என்னுடைய நிஜ குடும்பத்திற்காக எடுக்கப்பட்ட முடிவு இது.
ஜீ தமிழ் நடிகைக்கு அம்மாவாக மாறிய நடிகர் விஜய்யின் அம்மா.. நெகிழ வைத்த வார்த்தை.. குவியும் பாராட்டு
இயக்குனர், தயாரிப்பாளர், ஜீ தமிழ், என்னுடன் பணியாற்ற நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் அனைத்து ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். என்னை நம்பி என்னை இந்த கதாபாத்திரமாகவே உணர வைத்து நடிக்க அனுமதித்த அனைத்து ரசிகர்களுக்கும் மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
புது படத்தில் பிக் பாஸ் ஜனனிக்கு ஜோடியாகும் ஜீ தமிழ் சீரியல் ஹீரோ.. இவர் அந்த சீரியல் நடிகையின் கணவர்!
நான் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். உங்களிடமிருந்து இது மாதிரி ஒரு அன்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். சுர்ஜித் இந்த பதிவு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திந்தது.

இதுவரை சீனு வெளியூர் சென்றிருப்பதாக சொல்லி கதை நகர்த்தப்பட்டு வந்த நிலையில் தற்போது சீனு கதாபாத்திரத்தில் நடிக்க புதிய நடிகர் கமிட் செய்யப்பட்டுள்ளார். ஆமாம் வரும் நாட்களில் சீனு என்ற கதாபாத்திரத்தில் மனோஜ் பிரபு என்பவர் நடிக்க உள்ளார். இவர் இதற்கு முன்பாக யூ ட்யூப் தொடர்களில் நடித்துள்ளார். விரைவில் சீனுவாக இவரது காட்சிகள் சந்தியா ராகம் சீரியலில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications