ஜீ தமிழ் நடிகைக்கு அம்மாவாக மாறிய நடிகர் விஜய்யின் அம்மா.. நெகிழ வைத்த வார்த்தை.. குவியும் பாராட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு ரியாலிட்டி ஷோவும் மக்கள் மத்தியில் தனித்துவமான வரவேற்பை பெற்று வருகின்றன.

அந்த வகையில் வாரந்தோறும் ஞாயிறு இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மகாநடிகை நிகழ்ச்சியும் மாபெரும் வரவேற்புடன் ஒளிபரப்பாகி வருகிறது. புதுமுக நடிகர்களுக்கான தேடலாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தம் 10 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது 5 போட்டியாளர்களுடன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

zee tamil zee tamil serials apa season 4

வரும் ஞாயிறு அன்று நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நிகழ்ச்சி குறித்து அடுத்தடுத்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வருகிறது.

அந்த வகையில் 5 போட்டியாளர்களில் ஒருவரான ஹேமதி காதலை மறுக்க அந்த நபர் ஆசிட் வீசி அவளது முகத்தை சிதைப்பது போன்ற காட்சியில் நடித்து நடுவர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளார். இறுதியாக தளபதி விஜயின் தயார் ஷோபா
சந்திரசேகர் உங்களை நான் பெரிய நடிகையாக பார்க்கணும்னு ஒரு அம்மாவாக வாழ்த்துறேன் என்று வாழ்த்து சொல்லி சர்ப்ரைஸ் செய்துள்ளார்.

ஆர்.ஜே விஜய் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் தேசிய விருது பெற்ற நடிகை சரிதா, இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர் என பன்முக திறமை கொண்ட விஜய் ஆண்டனி மற்றும் பிரபல நடிகையான அபிராமி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று
வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாநடிகை நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு போட்டியாளர்களும் கிடைத்த இந்த மேடையை சரியாக பயன்படுத்தி மக்களை கவர்ந்து வருகின்றனர். இந்த சமயத்தில் மகாநடிகைக்கு பெருமை சேர்க்கும் விதமாக போட்டியாளர்களில் ஒருவரான
ஐஸ்வர்யா ரகுநாத் என்பவருக்கு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் சமயத்திலேயே வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஐஸ்வர்யாவின் திறமை அடுத்தகட்டத்துக்கு செல்வதை புரிந்து கொண்ட நிகழ்ச்சி குழுவினர் அவரது வளர்ச்சிக்கு வழி கொடுத்து வாழ்த்தி திரைப்படத்தில் நடிப்பதற்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் மற்ற போட்டியாளர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐஸ்வர்யா ரகுநாத்தின் ரியல் திறமையை உலகறிய செய்த மகாநடிகை நிகழ்ச்சி குழுவிற்கும் சேனலுக்கும் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். இதற்கு முன்னதாக சரிகமப நிகழ்ச்சி மூலமாக போட்டியாளர் தர்ஷினியின் சொந்த ஊரில் பஸ் வசதியை ஏற்படுத்தி தர ஜீ தமிழின் சரிகமப முக்கிய பங்காற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+