LIVE: கர்நாடகா சட்டசபை தேர்தல் : 10ஆம் தேதி வாக்குப்பதிவு.. பலத்த ஏற்பாடுகள்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர் : 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக வரும் மே 10ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் 8ஆம் தேதியுடன் ஓய்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 13ஆம் தேதி நடைபெறுகிறது.

கடந்த 2018ல் நடைபெற்ற கர்நாடகா சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி அமைந்தது. பின்னர், இந்த இரு கட்சி எம்.எல்.ஏக்களில் பலர் பாஜகவுக்கு தாவியதால் ஓராண்டுக்குப் பிறகு பாஜக ஆட்சி அமைத்தது.

இந்நிலையில், இந்த முறை பா.ஜ.க - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் ஆட்சி அமைப்பதில் ஜேடிஎஸ் முக்கியப் பங்கு வகிக்கலாம் எனத் தெரிகிறது. இதனால், களத்தில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

கர்நாடகாவில் இந்த முறை காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் என பல்வேறு கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. எனினும், மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று பாஜக கடுமையாக தேர்தல் பணியாற்றி வருகிறது. வாக்குப்பதிவு பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.'

karnataka assembly election 2023: live updates and election highlights

May 07, 2023, 11:39 pm IST

கர்நாடகா 224 சீட்

கர்நாடக சட்டசபையில் உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கை 224. பெரும்பான்மை பெற 113 இடங்கள் தேவை. காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பிடித்தாலும்,பெரும்பான்மை கிடைக்காது என பல்வேறு கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
May 07, 2023, 11:38 pm IST

மே 13ல் தேதி வாக்கு எண்ணிக்கை

மே 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், மே 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது. அன்றைய தினம் மதியத்திற்குள் ஆட்சியமைக்கப்போவது யார் என்ற விவரம் தெரியவரும், மாலைக்குள் அனைத்து தொகுதிகளின் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
May 07, 2023, 11:38 pm IST

பாஜக vs காங்கிரஸ் vs மஜத

பாஜகவும் காங்கிரஸும் மொத்தமுள்ள 224 இடங்களிலும் போட்டியிடுகின்றன. குமாரசாமியின் ஜேடிஎஸ் 148 இடங்களில் போட்டியிடுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+