காதலனை மறக்க வந்த வீட்டில்.. 16 வயது சிறுவனிடம் அத்துமீறிய 19 வயது பெண்.. இறுதியில் ட்விஸ்ட்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லத்தை அடுத்த சங்கரமங்கலத்தை சேர்ந்த 19 வயது பெண், ஒரு இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்த காதலை தடுக்க அவரது பெற்றோர், உறவினரின் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.. அந்த உறவினருக்கு 16 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் காதலை தடுத்த உறவினரின் 16 வயது மகனை , 19 வயது கடத்தி சென்றுவிட்டாராம். மேலும் அந்த பெண், 16 வயது சிறுவனிடம் அத்துமீறியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
டீன் ஏஜ் பருவத்தில் வரும் காதலும் சரி, அதன்பின்னர் எடுக்கும் முடிவுகளும் சரி ஒரு முறைக்கு பல முறை யோசிக்க வேண்டும். ஏனெனில் 16 வயதில் ஒருவரை நமக்கு ஈர்ப்பால் பிடிக்கும். அவருடன் காதல் தொடரும்.. ஆனால் அவர் படிக்காமல் வீணாகி வாழ்க்கையை தொலைத்து இருந்தால், நீங்கள் படித்து உயரத்திற்கு வந்திருந்தால், நிச்சயம் பின்னாளில் அது சிக்கலாக முடியும்.

அதேபோல் 16 வயதில் வந்த காதல், 22 வயதை கடந்தும் இருந்தால், அவரது நடவடிக்கைகள் பிடித்தால் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் டீன்ஏஜ் காதலால் பலர் படிப்பை தொலைத்து, எதிர்காலத்தை தொலைத்துவிடுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் கேரள மாநிலம் கொல்லத்தில் நடந்துள்ளது. ஆனால் இந்த காதல் கொஞ்சம் விவகாரமானது.
கேரள மாநிலம் கொல்லத்தை அடுத்த சங்கரமங்கலத்தை சேர்ந்தவர் 19 வயதுடைய இளம்பெண் ஒருவர், தங்கள் ஊரைச் சேர்ந்த இளைஞரை காதலித்து வந்தார். இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் பெற்றோருக்கு ஒரு கட்டத்தில் தெரிய வந்தது. வழக்கம் போல் காதலுக்கு பெற்றோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் தங்கள் மகளை கண்டித்தனர். அத்துடன் காதலனை சந்திக்காமல் இருக்கவும், காதலை தடுக்கவும் இளம்பெண்ணை பரணிக்காவு பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு இளம்பெண் வசித்து வந்தார்.
அந்த வீட்டில் உள்ள உறவினருக்கு 16 வயது சிறுவன் இருக்கிறார். அந்த 16 வயது சிறுவனுடன் இளம்பெண் மிகவும் சகஜமாக பழகி வந்தார். இருவரும் உறவினர்கள் என்பதால் இதனை பெற்றோர் பெரிதாக எடுத்து கொள்ளாமல் இருந்தனர். இதனிடையே 16 வயது சிறுவனை காதலிக்க தொடங்கிய 19 வயது பெண், திடீரென சிறுவனுடன் கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி மாயமானார். அவர்கள் இருவரையும் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து சிறுவனின் தாயார் கொல்லம் மாநைலம் வள்ளிக்குளம் காவல் நிலையத்தி புகார் கொடுத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் சிறுவனை இளம்பெண் கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவரையும் போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் பத்தனம்திட்டா பேருந்து நிலையத்தில் இளம்பெண்ணும், சிறுவனும் நிற்பதை போலீசார் பார்த்தனர். உடனே அவர்களை மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் 19 வயது இளம்பெண், 16 வயது சிறுவனை மைசூரு, பாலக்காடு, பழனி உள்பட பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றாராம். அங்கு விடுதியில் வைத்து சிறுவனிடம் பல முறை அத்துமீறியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து சிறுவனை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அத்துடன் அவரை கடத்தி சென்ற இளம்பெண்ணை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 16 வயது சிறுவன் மைனர் என்பதால், அந்த பெண் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. அதேபோல் காதலித்தாலும் 16 வயது பெண்ணிடம் அத்துமீறினால் கண்டிப்பாக இளைஞர்கள் கைது செய்யப்படுவார்கள். இதற்கு தண்டனை மிக கடுமையாக இருக்கும்..












Click it and Unblock the Notifications