இந்தியாவின் இளம் வயது மேயர்... 21 வயதில் திருவனந்தபுரத்தின் மேயராகும் சட்டக் கல்லூரி மாணவி...
திருவனந்தபுரம்: கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தின் மேயராக 21 வயதான கல்லூரி மாணவி ஆர்யா ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரள மாநிலத்தில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் ஆளும் இடதுசாரிகள் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்றது.

அதேபோல மாநில தலைநகர் திருவனந்தபுரத்தையும் இடதுசாரிகளே கைப்பற்றினர். இருப்பினும், மேயராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கருதப்பட்ட இரு இடதுசாரி வேட்பாளர்கள் எதிர்பாராத வகையில் தோல்வியடைந்தனர்.
அடுத்தகட்டமாக பெரூர்கடா வார்டில் வெற்றிபெற்ற மூத்த வேட்பாளர் ஜமீலா ஸ்ரீதரனின் பெயர் மேயர் ரேஸில் பரிசிலினை செய்யப்பட்டது. இருப்பினும், இளைஞர் ஒருவரை மேயராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கருத்து தலைநகர் முழுவதும் எழுந்தது.
அதைத்தொடர்ந்து, 21 வயதான கல்லூரி மாணவி ஆர்யா ராஜேந்திரன் மேயராக நியமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கேரள உள்ளாட்சித் தேர்தலில் முடவன்முகல் வாட்டில் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், நாட்டிலேயே இளம் வயது மேயர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
ஆர்யாவின் திருவனந்தபுரத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் இளங்கலை படித்து வருகிறார். அரசியல் களத்தில் மிகவும் தீவிரமாகச் செயல்பட்டு வரும் அவர், இந்திய மாணவர் கூட்டமைப்பின் மாநில குழு உறுப்பினராகவும் உள்ளார். மேலும், அவர் தற்போது சிபிஎம்மின் குழந்தைகள் பிரிவான பாலசங்கத்தின் கேரள மாநில தலைவராகவும் உள்ளார்.
தான் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து ஆர்யா கூறுகையில், "கட்சி எனக்கு அளித்துள்ள பொறுப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன். எனது படிப்பையும் அரசியல் பணிகளையும் ஒரு சேர மேற்கொள்ளவுள்ளேன்" என்றார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications