திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2 கைகளையும் இழந்த 21 வயது இளைஞர்.. காலில் தடுப்பூசி செலுத்திய நர்ஸ்கள்.. கேரளாவில்..!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: 2 கைகளும் இல்லாத ஒரு மாற்று திறனாளி இளைஞனுக்கு காலில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது..!

கேரளாவில் கொரோனா பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வரவில்லை... நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் உள்ளது.. அந்த மாநில அரசு எத்தனையோவிதமான கட்டுப்பாடுகளை விதித்து கொண்டுதான் உள்ளது..

அதேசமயம் தளர்வுகளையும் அவ்வப்போது அறிவித்து கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் பாதிப்பு அடங்கவே இல்லை.. கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 17,466 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது...

உச்சக்கட்ட பீதி.. 10 லட்சத்தை தாண்டியது கொரோனா கேஸ்கள்.. திணறும் மலேசியா..!உச்சக்கட்ட பீதி.. 10 லட்சத்தை தாண்டியது கொரோனா கேஸ்கள்.. திணறும் மலேசியா..!

கோழிக்கோடு

கோழிக்கோடு

66 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.. குறிப்பாக மலப்புரம், கோழிக்கோடு, திருச்சூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.. அதற்கேற்றபடி உயிரிழப்புகளும் தினமும் 2 ஆயிரத்திற்கும் மேல் பதிவாகி வருவது அம்மாநில அரசை கவலைகொள்ள வைத்து வருகிறது.. எனவே, கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி

தடுப்பூசி

இதற்காகவே ஏகப்பட்ட சிறப்பு முகாம்களும் தொடங்கப்பட்டுள்ளன.. அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகிறது.. மாநில மக்களும் தடுப்பூசியை செலுத்த ஆர்வம் காட்டியபடியே உள்ளனர்.. தடுப்பூசி வழக்கமாக அனைவருக்கும் கைகளில்தான் செலுத்தப்பட்டு வருகிறது... ஆனால் கேரளாவில் 2 கைகளும் இல்லாத ஒரு இளைஞனுக்கு காலில் செலுத்தப்பட்டுள்ளது.

 இளைஞர்

இளைஞர்

பாலக்காடு பகுதியை அடுத்த ஆலத்தூரைச் சேர்ந்தவர் பிரனவ்.. இவருக்கு 22 வயதாகிறது..
பிறவியிலேயே 2 கைகளையும் இழந்தவர்.. எப்போதுமே பிரனவ், தன்னுடைய கால்களையே கைகளாக பயன்படுத்தி கொள்வாராம்.. காலில்தான் டிராயிங் வரைவாராம்.. சைக்கிள் ஓட்டுவாராம்.. இந்நிலையில், தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று ஆர்வமாக இருந்துள்ளார்..

நர்ஸ்கள்

நர்ஸ்கள்

அதனால், ஆலத்தூர் பகுதியில் உள்ள ஸ்பெஷல் முகாமுக்கு பிரனவ் தடுப்பூசி போட சென்றார்... தனக்கு கைகள் இரண்டுமே இல்லை... அதனால் தனக்கு காலில் தடுப்பூசி போடும்படி அங்கிருந்த நர்ஸ்களிடம் சொன்னார்.. இதுவரை அப்படி யாருக்கும் காலில் தடுப்பூசிகளை செலுத்தியதில்லை என்பதால், நர்ஸ்களும் அங்கிருந்த மருத்துவத்துறை அதிகாரிகளிடம் இதை பற்றி கருத்து கேட்டனர்..

பேட்டி

பேட்டி

காலில் தடுப்பூசியை செலுத்தி கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று அவர்கள் தெளிவுபடுத்தியதையடுத்து, பிரணவ் காலில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பிரனவ் பேசும்போது, கொரோனாவை கட்டுப்படுத்த எல்லாருமே தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம். இதனால் தான் நான் கைகள் இல்லாத பிறகும் கால்களில் செலுத்திக் கொண்டேன் என்றார்.

English summary
22 year old young man who received the corona vaccine in his leg
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X