நாய்கள் குரைக்கவில்லை.. செஃபி செய்த "அந்த" சர்ஜரி.. அபயா வழக்கில் பக்காவாக காட்டி கொடுத்த ஆதாரம்
திருவனந்தபுரம்: கேரளா கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் வெளியான 229 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் அவர் வேண்டுமென்றே கொலை செய்யும் நோக்கில் கடுமையாக தாக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் கிடைத்த ஆதாரங்கள் என்ன என்பதும் வெளியாகியுள்ளன.
கேரளாவின் கோட்டயத்தில் செயிண்ட் பியஸ் கான்வென்ட்டில் கன்னியாஸ்திரியாக இருந்தவர் அபயா (21). 28 ஆண்டுகளுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டார். இது குறித்த வழக்கில் ஒரு பாதிரியாரும், கன்னியாஸ்திரியும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த வழக்கின் தீர்ப்பு 229 பக்கங்களை கொண்டதாகும். அபயாவின் உச்சந்தலையிலும் பின்புறத்திலும் கோடாரியால் கடுமையாக தாக்கப்பட்டிருந்தார். தலையில் ஏற்பட்ட காயங்களே அவர் உயிரிழக்க காரணமாயிற்று. அவரை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

கன்னியாஸ்திரி
ஆதாரங்களை அழிப்பதற்காக கன்னியாஸ்திரியின் உடலை கிணற்றில் வீசியுள்ளனர். மேலும் கிணற்றில் விழுந்ததால் அவரது தலையில் காயம் ஏற்பட்டதை போல் சித்தரிக்கவே இந்த முயற்சி நடத்தப்பட்டது. இந்த கொலை வழக்கில் மிகவும் முக்கியமானது. கொலை நடந்த இடம் கான்வென்ட். அந்த கான்வென்டில் ஆண்கள் வருகை என்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

பாதிரியார்
அவ்வாறிருக்கையில் அந்த கான்வென்டில் பாதிரியார் தாமஸ் கோட்டூர் நுழைந்திருந்தது அவரது தவறான நடத்தையையே காட்டுகிறது. இந்த வழக்கில் பாதிரியார் தாமஸும் கன்னியாஸ்திரி செஃபியும்தான் கொலையாளி என்பதை நிரூபிக்கும் ஆதாரம் எது என்பதும் வெளியாகியுள்ளது.

விசாரணை
1. கான்வென்டில் அபயாவுடன் இருந்தவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அபயா மகிழ்ச்சியான ஒரு வாழ்வை வாழ்ந்து வந்தார். இதனால் அவர் நிச்சயம் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்பது நிரூபணமானது.
2. இந்த கான்வென்ட்டை குற்றம்சாட்டப்பட்ட இரு பாதிரியார்களும் அவ்வப்போது வந்து சென்று கொண்டிருந்தனர். பெண்கள் மட்டுமே இருந்த கான்வென்டில் பாதுகாப்புக்காக நாய்கள் இருந்தன. கொலை நடந்த போது அந்த இடத்தில் நாய்கள் ஏதும் குரைக்கவில்லை என அந்த கான்வென்ட்டின் சமையல் பெண் கூறியிருந்தார். ஏனெனில் கான்வென்ட்டிற்குள் நுழைந்தவர்களை நாய்களுக்கு ஏற்கெனவே பரீட்சயமானவர்கள்.

கான்வென்ட்டில்
3. கொலை நடப்பதற்கு முன்னர் கான்வென்டில் இருந்தவர்கள் இரு ஆண்களை மட்டுமே அந்த பகுதியில் பார்த்தனர். அதிலும் அடக்கு ராஜு என்பவரின் சாட்சியம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அவர் ஒரு திருடன். சம்பவத்தினத்தன்று கான்வென்ட்டில் எதையாவது திருட முடியுமா என்பதற்காக உள்ளே நுழைந்திருந்தார்.

கன்னியாஸ்திரி ஒப்புதல்
4. பாதிரியார் தாமஸ் கன்னியாஸ்திரி செஃபியுடன் உல்லாசமாக இருந்ததை ஒப்புக் கொண்டார். அது போல் செஃபியும் ஒப்புக் கொண்டார். செஃபி கன்னித்தன்மையுடன்தான் இருக்கிறார் என்பதற்காக அவராகவே ஹைமன்பிளாஸ்டி எனப்படும் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தது தெரியவந்தது.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications