ஆவணி கடைசி ஞாயிறு.. ரெக்கார்டு அடிச்ச குருவாயூர் கோயில்.. ஒரே நாளில் 356 திருமணங்கள்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம், குருவாயூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் இன்று ஒரே நாளில் 356 திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன. பொதுவாக ஆவணி மாதத்தில் குருவாயூரில் அதிக அளவில் திருமணம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இன்று ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான திருமணங்கள் நடந்ததால் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூரில் அதிக அளவில் திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். உலகிலேயே திருமணங்கள் அதிகம் நடைபெறும் கோயில்களில் ஒன்றாக விளங்குகிறது குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயம். இக்கோயிலில் வைத்து திருமணம் செய்ய பொதுமக்களிடையே அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

கேரளத்தில் குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில்தான் அதிக அளவில் திருமணங்கள் நடக்கின்றன. இக்கோயிலில் கேரளத்தில் இருந்து மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் குருவாயூரை தங்களது திருமணத் தலமாக தேர்வு செய்கின்றனர். திரை பிரபலங்கள் பலரும் குருவாயூர் கோயிலில் திருமணம் செய்துள்ளனர். இக்கோயிலில் திருமணங்கள் மட்டுமல்லாமல் சோறூனு எனும் கைக்குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டும் நிகழ்வும் இங்கு பிரபலமானதாகும்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இக்கோயிலுக்கு குழந்தைகளுக்கு சோறூட்டும் நிகழ்வுக்காக வருவதும் வழக்கமாகும். இக்கோவிலின் கிழக்கு நுழைவு வாயிலில் திருமணம் செய்வதற்காக நான்கு திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. திருமணங்கள் குறைவாக இருந்தால் ஒரு மண்டபம் மட்டுமே திருமணத்திற்காக திறக்கப்படும். அதிக திருமணங்கள் இருந்தால் மற்ற மண்டபங்கள் அதற்கேற்ப திறக்கப்படும். சாதாரண சுப நாட்களில் 50 முதல் 100 திருமணங்கள் நடக்கும். விஷேச முகூர்த்த நாட்களில் 200க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடத்தி வைக்கப்படுகின்றன.
ஆண்டிலேயே அதிக திருமணங்கள் நடக்கும் மலையாளத்தில் சிங்க மாதம் என்று அழைக்கப்படும் ஆவணி மாதத்தில் இந்த ஆலயத்தில் அதிக திருமணங்கள் நடத்தப்படும். கடந்த 2017 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி மட்டும் 277 திருமணங்கள் நடந்துள்ளன. 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி 264 திருமணங்கள் நடந்துள்ளன.
2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதி 244 திருமணங்கள் நடந்துள்ளன. இந்நிலையில், நடப்பு ஆண்டில் இன்று ஒரே நாளில் 356 திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலில் திருமணம் செய்ய விரும்புவோர் திருமணத்துக்கான முகூர்த்த நேரம் எதுவும் பார்ப்பதில்லை. திருமணத்திற்கு முன்பதிவு செய்யும்போது குருவாயூர் தேவசம் போர்டு ஒதுக்கும் நேரத்தில் திருமணம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு முன்பதிவு செய்யப்படும் திருமணங்கள் கோவிலின் முன்புறம் உள்ள நான்கு கதிர் மண்டபங்களில் நடத்தப்படும். ஆவணி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை மற்றும் சோதி எனும் சுவாதி நட்சத்திரம் கொண்ட நாள் என்பதால் இன்று ஒரே நாளில் 356 திருமணங்கள் நடத்த முன்பதிவு செய்யப்பட்டு நடத்தி வைக்கப்பட்டுள்ளன.
முகூர்த்த நாட்களில் வழக்கமாக 5 மணி முதல் திருமணம் நடத்தி வைக்கப்படுவது வழக்கம். ஆனால், இன்று அதிக திருமணங்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டிருந்ததால் 4 மணி முதலே திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன. இதனால், குருவாயூர் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
-
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2!












Click it and Unblock the Notifications