கேரளாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்.. 3ம் அலை தொடங்கிவிட்டதா? என்ன நடக்கிறது?

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா கேஸ்கள் குறைந்தாலும் கேரளாவில் இன்னும் கேஸ்கள் குறையாமல் உள்ளது. இதனால் கேரளாவில் மூன்றாம் அலை தொடங்கிவிட்டதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

கேரள மக்களிடையே மூன்றாம் அலை குறித்த அச்சம் நிலவினாலும் கேரள மருத்துவ வல்லுனர்களும், rd கொரோனா தடுப்பு குழுவினரும் இன்னும் மூன்றாம் அலை தொடங்கிவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். கேரளாவில் கேஸ்கள் உயர வேறு காரணம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் தற்போது 1,17,709 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 15637 கேஸ்கள் பதிவாகி உள்ளது. அங்கு கடந்த சில நாட்களாக புதிய கேஸ்கள் குறையாமல் அதிகரித்து வருகின்றன.

 கேஸ்கள்

கேஸ்கள்

கேரளாவில் புதிய கேஸ்களின் எண்ணிக்கை கடந்த மூன்று வாரமாக 15.2% உயர்ந்துள்ளது. இது சராசரி தேசிய அளவை விட அதிகம். கடந்த இரண்டு வாரங்களில் புதிய கேஸ்களின் எண்ணிக்கை 11,357ல் இருந்து 14 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அதோடு ஆக்டிவ் கேஸ்கள் 4,084 ஆக தினமும் உயர்கிறது.

தேசிய அளவில் கேஸ்கள்

தேசிய அளவில் கேஸ்கள்

தேசிய அளவில் எங்கும் ஆக்டிவ் கேஸ்கள் 4 இலக்கங்களில் உயரவில்லை. கேரளாவில் மட்டுமே இந்த நிலை உள்ளது. கேரளாவில் இப்படி கேஸ்கள் குறையாமல் இருக்க மூன்றாம் அலை காரணம் இல்லை என்கிறார்கள். மூன்றாம் அலை இன்னும் தொடங்கவில்லை, கேஸ்கள் இங்கு குறையாமல் இருக்க வேறு நிறைய காரணம் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

காரணம் 1

காரணம் 1

அதன்படி கேரளாவில் செரோ சர்வே எனப்படும் ஆண்டிபாடி உள்ள மக்களை கணக்கெடுக்கும் சர்வேயில் மிக குறைந்த மக்களே இதுவரை பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. தேசிய அளவோடு ஒப்பிடும் போது கேரளாவில் குறைந்த மக்களே இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இன்னும் பலர் பாதிக்கப்படாமல் இருப்பதால், தொடர்ந்து புதிய கேஸ்கள் அதிகரித்து வருகின்றன.

காரணம் 2

காரணம் 2

அங்கு கொரோனா ஆண்டிபாடி உள்ள மக்கள் குறைவாக இருப்பதால் இன்னும் பாதிப்பு முடியவில்லை. அதோடு கேரளாவில் டெல்டா வகை கொரோனா தீவிரம் இன்னும் குறையவில்லை. அங்கு கொரோனா R0 number இன்னும் அதிகமாக உள்ளது. அதாவது ஒரு கொரோனா பாதித்த நபர் எத்தனை பேருக்கு கொரோனாவை பரப்புகிறார் என்ற எண்ணிக்கையே R0 number ஆகும் இது. கேரளாவில் இந்த எண்ணிக்கை 1ஐ விட அதிகம் உள்ளது.

காரணம் 3

காரணம் 3

அதாவது ஒரு நபருக்கு கொரோனா வந்தால் அவர் பலருக்கு கொரோனாவை பரப்புகிறார். இதுவும் அங்கு கேஸ்கள் குறையாமல் இருக்க காரணம். மூன்றாவதாக கேரளாவின் டிபிஆர் எனப்படும் கொரோனா பாசிட்டிவ் சதவிகிதம் இன்னும் 10%க்கு கீழ் குறையவில்லை.

ஏன் குறைவு

ஏன் குறைவு

அதாவது 100 பேரை சோதனை செய்தால் இப்போதும் 10 பெருகும் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். பொதுவாக கொரோனா டிபிஆர் சதவிகிதம் 5% க்கும் கீழ் இருக்க வேண்டும். ஆனால் கேரளாவில் இது 10% என்ற அளவிலேயே இன்னும் உள்ளது.

தளர்வு

தளர்வு

லாக்டவுன் தளர்வுகள் காரணமாக மக்கள் வெளியே செல்வது, டெஸ்ட்கள் தொடர்ந்து அதிகரிக்கப்படுவதுமே கேஸ்கள் குறையாமல் இருக்க காரணம். மக்கள் அதிகம் வெளியே செல்வது மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கண்டிப்பாக இது மூன்றாம் அலை இல்லை, கேஸ்கள் விரைவில் குறையும் என்று கேரள மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+