திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேரளா ஆர்.எஸ்.எஸ். தொண்டர் படுகொலை வழக்கு- ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் 9 பேருக்கு ஆயுள் தண்டனை

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் கடவூர் ஜெயன் படுகொலை வழக்கில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த 9 பேருக்கு கொல்லம் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

2012-ம் ஆண்டு கடவூர் ஜெயன் என்ற ஆர்.எஸ்.எஸ். தொண்டர் படுகொலை செய்யப்பட்டார். ஜெயனின் உடலில் 50 இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன.

9 RSS Cadres sentenced to life in RSS worker Kadavoor Jayan murder case

கடவூர் ஜெயன் படுகொலை சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படுகொலை தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இருந்து ஜெகன் விலகியதால அவர் படுகொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இந்த வழக்கில் வினோத், கோபக்குமார், சுப்பிரமணி, பிரியராஜ், பிரணவ், அருண் உள்ளிட்ட 9 பேருக்கு கொல்லம் கூடுதல் குற்றவியல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

என்னய்யா நடக்குது.. 100 வருட ரெக்கார்ட் பிரேக்.. பாம்பனில் புரட்டி எடுத்த மழை.. வெதர்மேன் ஆச்சர்யம்!என்னய்யா நடக்குது.. 100 வருட ரெக்கார்ட் பிரேக்.. பாம்பனில் புரட்டி எடுத்த மழை.. வெதர்மேன் ஆச்சர்யம்!

இதனை எதிர்த்து 9 பேரும் கேரளா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இதனையடுத்து இவ்வழக்கு கொல்லம் குற்றவியல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

தற்போது இந்த 9 பேருக்கான ஆயுள் தண்டனையை கொல்லம் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்திருக்கிறது. அத்துடன் 9 பேருக்கும் தலா ரூ71,500 அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது.

English summary
Kollam Principal Sessions court sentenced to life the accused in the case of hacking to death RSS activist Kadavoor Jayan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X