பிரியாணியா சமைக்க போறா.. குக்கரில் எட்டிப்பார்த்த நாகப்பாம்பு.. அதிர்ந்த இளம்பெண்
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள சாலக்கரா என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பாம்பொன்று சமையலறையில் இருந்த பிரஷர் குக்கரில் பதுங்கி இருந்திருக்கிறது. இதுகுறித்த தகவலறிந்து வந்த பாம்புபிடி வீரர், பத்திரமாக அதை மீட்டுச்சென்று காட்டுப்பகுதியில் விடுவித்தார்.
கோழிக்கோடு மாவட்டம் சாலக்கரையில் உள்ள தாமரச்சேரி பகுதியில் ஒர குடும்பத்தினர் வசதித்து வருகின்றனர் இவர்களது வீட்டில் சமையல் அறைக்குள் நாகப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது.. வீட்டின் சமையலறைக்கு சென்ற பாம்பு, அங்கிருந்த பிரஷர் குக்கரில் ஏறி பதுங்கி கொண்டது. சமையல் அறைக்கு சென்ற அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சமையல் செய்ய விரும்பினார்.அப்போது பிரஷெர் குக்கரில் பதுங்கி இருந்தது அதிக விஷமுள்ள நாகப்பாம்பு என்பதை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார். நல்ல வேளையாக பாம்பு அவரை கடிக்கவில்லை. அமைதியாகவே இருந்தது.

பாம்பு குக்கரில் சுருண்டு கிடந்ததை கண்ட அவர் உடனடியாக தீயணைப்புதுறைக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் பாம்பு பிடிக்கும் பயிற்சி பெற்ற கோரங்காட்டை சேர்ந்த எம்.டி.ஜம்ஷீத் என்பவருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் வீட்டிற்கு வந்த பாம்பு பிடி வீரர், விஷமுள்ள நாகப்பாம்பை பத்திரமாக பிடித்து காட்டுப்பகுதியில் விடுவித்தார்.
நல்ல வேளையாக பாம்பும் தப்பியிருக்கிறது. குக்கரில் பாம்பு இருப்பதை கவனிக்காமல் தண்ணீரை பிடித்து அடுப்பில் வைத்திருந்தால், பாம்பும் சமையல் ஆகியிருந்திருக்கும்.. பாம்புக்கும் பாதிப்பு ஏற்பவிடவில்லை.. பாம்பை பார்த்த பெண்ணுக்கும் அதிர்ஷ்டவசமாக எதுவும் ஏற்படவில்லை..
குக்கரில் மட்டுமல்ல கழிவறை ஓட்டைகளில், ஏசி துவாரங்களில், இருசக்கர வாகனத்தின் டிக்கியிலும் பாம்புகள் பதுங்கியிருந்த சம்பவங்கள் நடந்தள்ளது. முன்னதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஈரோட்டில் ஒரு இருசக்கர வாகன்த்தில் கோதுமை நாகம் பதுங்கி இருந்தது. அதை பாம்பு வீரர் ஒருவர் பத்திரமாக பிடித்தார். ஈரோட்டில் யுவா ஸ்டோர்ஸ் என்ற கடையின் அருகே நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தில் நாகப்பாம்பு பதுங்கியிருந்தது. இதை கண்ட கடையின் உரிமையாளர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார்.
தீயணைப்பு துறையினரின் அழைப்பின் பேரில் பாம்பு பிடிவீரர் யுவராஜ் அங்கு வந்தார். அவர் இருசக்கர வாகனத்தில் சத்தம் வந்ததை வைத்து எங்கு பாம்பு பதுங்கியுள்ளது என்பதை கண்டுபிடித்தார் விஷமுள்ள கோதுமை நாகம் இருசக்கர வாகனத்தின் சீட்டிற்கு அடியில் பதுங்கி இருந்தது. அந்த பாம்பை நீண்ட நேர போராட்டத்திற்கு பின் சீட்டை கழற்றி பிடித்த பாம்பு பிடிவீரர் யுவராஜ், அதனை பத்திரமாக வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications