நடிகைகளுக்கு மட்டுமல்ல.. நடிகர்களுக்கும் பாலியல் தொல்லை! பிரபல மலையாள நடிகர் பரபர புகார்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: மலையாள திரையுலகில், வாய்ப்பு தேடி வரும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கப்படுகிறது என்று நீதிபதி ஹேமா கமிட்டி, அறிக்கை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி இருந்தது. இதனையடுத்து பல்வேறு நடிகைகளும், தாங்கள் எதிர்கொண்ட கசப்பான அனுபவத்தை புகார்களாக தெரிவித்து வருகின்றனர். இப்படி இருக்கையில், மலையாள நடிகர் ஒருவர், தான் எதிர்கொண்ட பாலியல் சீண்டல் குறித்து குற்றம்சாட்டியுள்ளார்.

மலையாள சினிமாக்கள் சமீப காலமாக தேசிய அளவில் பெரும் கவனம் பெற்று வருகிறது. ஆனால் இந்த சினிமா துறையில், நடிகைகள் கடுமையான பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்று அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து விசாரிக்க நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. ஹேமா கமிட்டி, நடிகைகள் எதிர்கொள்ளும் பாலியல் தொந்தரவுகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தி, இதனை அறிக்கையாக கடந்த 2017ம் ஆண்டு தயார் செய்தது.

malayalam cinema kerala

ஆனால், இந்த அறிக்கை வெளியானால் எங்கு தங்களுடைய பெயர் வெளி வந்துவிடுமோ என்று பயந்து, திரைத்துறையில் உள்ள பெரும் புள்ளிகள், நீதிமன்றத்தை அணுகி, அறிக்கையை வெளியிடாமல் பார்த்துக்கொண்டனர். ஆனால், சமீபத்தில் நீதிமன்றம் அறிக்கையை வெளியிட அனுமதி அளித்தது. இதனையடுத்து கடந்த 19ம் தேதி அறிக்கை வெளியானது.

இதில், நடிகைகள் சினிமாவில் நடிக்க படுக்கைக்கு அழைக்கப்படுகிறார்கள், நிர்வாணமாக நடிக்க கட்டாயப்படுத்தப் படுகிறார்கள், மீறும் பட்சத்தில் அவர்கள் மிரட்டப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக மலையாள சினிமா சில மாஃபியாக்களின் கைகளில் சிக்கியுள்ளது என்பதையும் அறிக்கை தெளிவாக கூறியிருந்தது. கேரள மாநில அரசே இந்த விவகாரம் குறித்து விசாரித்து, தீவிர நடவடிக்கையை எடுக்க களத்தில் இறங்கியுள்ளது.

இதனையடுத்து பல்வேறு நடிகைகள் தாங்கள் எதிர்கொண்ட கசப்பான சம்பவங்கள் குறித்து வெளிப்படையாக பேச தொடங்கியுள்ளனர். குறிப்பாக நடிகை ரேவதி சம்பத், தான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது குறித்து வெளிப்படையாக பேசியிருந்தது, மலையாள சினிமா உலகில் பெரும் பூகம்பத்தை கிளப்பியிருக்கிறது.

அதாவது நடிகரும், மலையாள நடிகர்கள் சங்கத்தின் (அம்மா) பொதுச்செயலாளருமான சித்திக் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று கூறியிருந்தார். அதேபோல மற்றொரு நடிகர் ரியாஸ் கானும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டையடுத்து, பொதுச்செயலாளர் பதவியை சித்திக் ராஜினாமா செய்தார்.

மறுபுறும் பெங்காலி நடிகையான ஸ்ரீலேகா மித்ரா, கலாச்சித்ரா அகாதெமியின் தலைவரும், பிரபல மலையாள சினிமா இயக்குநருமான ரஞ்சித் மீது பாலியல் புகாரை எழுப்பினார். இதனை தொடர்ந்து ரஞ்சித்தும் ராஜினாமா செய்தார். இப்படி பல முக்கிய நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் மீது, நடிகைகள் தொடர்ந்து புகார்களை எழுப்பி வருகின்றனர்.

இது மோகன்லாலுக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது. அதாவது மோகன்லால் மலையாள நடிகர்கள் சங்க தலைவராக இருந்தார். இதன் பொதுச் செயலாளர் நடிகைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது இவருக்கு தெரியாதா? அல்லது தெரிந்தும் நடிகர்களை இவர் காப்பாற்றுகிறாரா? அப்படி தெரியவில்லையெனில், சக நடிகைகள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்கள் கூட தெரியாமல் எதற்காக சங்க தலைவராக இருக்கிறார்? என்று கேள்வி எழுந்தது.

இதனையடுத்து மோகன்லால் உட்பட 17 முக்கிய நிர்வாகிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். பல்வேறு நடிகைகள் தாங்கள் எதிர்கொண்ட கசப்பான அனுபவம் குறித்து வெளிப்பாடையாக புகார் அளித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ஒருவர் தான் வாய்ப்புகாக பாலியல் சீண்டலை எதிர்கொண்டதாக கூறியுள்ளார்.

மலையாள மனோரமா செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த பிரபல இளம் நடிகர், நடிகர் நவஜீத் நாராயணன், "வாய்ப்பு கேட்டு இயக்குநர்(இயக்குநர் பெயரை குறிப்பிடவில்லை) வீட்டிற்கு சென்றபோது உட்காரவைத்து, என் தொடையை பிடித்து இழுத்து, வாய்ப்பு கொடுத்தால் தனக்கு என்ன கிடைக்கும்? என்று கேட்டார். அவர் கேட்டதை புரிந்து கொண்ட நான், கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டு அங்கிருந்து வெளியேறிவிட்டேன்" என கூறியுள்ளார்.

மலையாள திரைத்துறையில் பெண்கள் மட்டுமல்ல.. ஆண்களும் கூட பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது தெரிய இதன் மூலம் வந்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+