நிர்வாண புகைப்படம்.. பாலியல் துன்புறுத்தல்.. இயக்குநர் ரஞ்சித் மீது நடிகர் புகார்
திருவனந்தபுரம்: இயக்குநர் ரஞ்சித் மீது ஏற்கனவே பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆடைகளை கழட்டச் சொல்லி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாகவும், தனது நிர்வாண புகைப்படங்களை நடிகைகளுக்கு அனுப்பியதாகவும் ரஞ்சித் மீது ஆண் நடிகர் ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் சர்ச்சையால் மலையாள திரையுலகமே அரண்டு போயுள்ளது. தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. கடந்த 2017 ஆம் ஆண்டில் மலையாள நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்ட வழக்கில் நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவை கேரள அரசு அமைத்தது. இந்நிலையில், இந்தக் குழுவின் அறிக்கை கடந்த வாரம் வெளியாகியது.

ஹேமா அறிக்கை மலையாள திரையுலகையே ஆட்டம் காண வைத்துள்ளது. மலையாள திரையுலகில் பெண்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் சீண்டல்கள் அளித்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஹேமா குழு அறிக்கையைத் தொடர்ந்து மலையாள நடிகைகள் பலரும் தொடர் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.
இந்நிலையில், ஆடைகளை கழட்டச் சொல்லி பாலியல் துன்புறுத்தல் அளித்ததோடு, தன்னுடன் நிர்வாண புகைப்படங்களை எடுத்துக் கொண்டு அதனை சக நடிகைகளுக்கு அனுப்பியதாக மலையாள இயக்குநர் இரஞ்சித்துக்கு எதிராக இளைஞர் புகார் அளித்துள்ளார். இளைஞரின் வாக்குமூலத்தை சிறப்பு விசாரணைக் குழுவினர் பதிவு செய்துகொண்டனர்.
இயக்குநர் ரஞ்சித் மீது நடிகை ஒருவர் ஏற்கனவே பாலியல் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இயக்குநர் ரஞ்சித் தன்னை நிர்வாணப்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக தற்போது ஆண் நடிகர் ஒருவரும் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து, இளைஞர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அந்தப் புகாரில், பெங்களூரில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் தான் கடந்த 2012 ஆம் ஆண்டு இயக்குநர் ரஞ்சித்தை சந்தித்தேன். அப்போது, தனது உடைகளை கட்டாயப்படுத்தி கழட்டச் சொல்லி புகைப்படம் எடுத்துக் கொண்டார், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தியதாக அதில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, இளைஞர் விசாரணைக் குழுவிடம் கூறியுள்ளதாவது: பெங்களூருவில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதிக்கு வருமாறு ரஞ்சித் கூறியிருந்தார். இதையடுத்து, அங்கு சென்றபோது என்னை மது அருந்துவதற்கு வற்புறுத்தினார். பின்னர், ஆடைகளைக் கழட்ட சொல்லி பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். மேலும், நிர்வாணமாக எடுத்த எனது புகைப்படங்களை ரஞ்சித் தனது தோழியும், நடிகையுமான ஒரு பெண்ணுக்கு அனுப்பியுள்ளதாக ரஞ்சித் தெரிவித்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதுதொடர்பான அனைத்து ஆதாரங்களையும் விசாரணைக் குழுவிடம் அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதேபோல, மலையாள திரையுலகைச் சேர்ந்த எடவேல பாபு தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக துணை நடிகை ஒருவர் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரையும் சிறப்பு விசாரணைக் குழு பதிவு செய்துள்ளது.
பாலியல் புகார்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள காவல் துறை அதிகாரிகள் 7 போ் அடங்கிய சிறப்புக் குழுவை கேரள அரசு சமீபத்தில் அமைத்திருந்தது. இந்த சிறப்புக் குழுவினர் பாலியல் புகார் அளித்த நடிகைகள் மற்றும் இளைஞரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களது வாக்குமூலங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications