இப்படியும் நடக்குமா.. ஊரே பார்க்க.. கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு.. உயிருக்கு போராடிய முதியவர்
திருவனந்தபுரம்: தூங்கிக்கொண்டிருந்த முதியவரின் கழுத்தை மலைப்பாம்பு ஒன்று திடீரென இறுகி சுற்றியுள்ள சம்பவம் கேரளாவில் நடந்திருக்கிறது. கடந்த 2019ல் இந்த சம்பவம் நடந்திருந்தாலும் இது தொடர்பான வீடியோ இப்போது சோஷியல் மீடியாக்களில் வேகமாக ஷேராகி வருகிறது.
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ம் தேதியன்று திருவனந்தபுரம் நெய்யாரில் உள்ள கேரளா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் கல்லூரியின் மைதானத்தை சிலர் சுத்தப்படுத்தியிருக்கின்றனர். இந்த குழுவில் 58 வயதான புவச்சந்திரன் நாயர் என்பவரும் இருந்துள்ளார். அப்போது துணி போன்ற ஒன்றை அவர் பார்த்திருக்கிறார். மைதானத்தில் சம்பந்தமே இல்லாமல் துணி எப்படி வந்தது என்று யோசித்தவாறு அதை எடுக்க சென்றிருக்கிறார்.

அப்போதுதான் அது துணி இல்லை, மலைப்பாம்பு என்பது தெரிய வந்திருக்கிறது. உடனே தன்னுடன் வேலை பார்ப்பவர்களுக்கு தகவலை சொல்லி அந்த பாம்பை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றிருக்கிறார். கோணிப்பையுடன் பாம்பை நெருங்கிய புவச்சந்திரன், அதை பிடித்து பையில் போட முயன்றிருக்கிறார். ஆனால் உஷாரான பாம்பு சட்டென அவரது பிடியிலிருந்து விலகி, அவர் கழுத்தை சுற்ற தொடங்கியுள்ளது.
இதை பார்த்த மற்றவர்கள் அலற தொடங்கியுள்ளனர். பாம்பு தனது பிடியை மேலும் இறுக்கியுள்ளது. 10 அடி நீளம் கொண்ட பாம்பை புவச்சந்திரனால் விடுவிக்க முடியவில்லை. தொண்டை நெறிக்க, கண்கள் பிதுங்க தொடங்கியது. இருமலும், மூச்சுத்திணறலும் ஏற்பட புவச்சந்திரன் நிலைத்தடுமாறியுள்ளார். பாம்பின் நீளத்தை பார்த்த மற்றவர்கள் பயத்தில் அப்படியே உறைந்துபோயுள்ளனர். இருப்பினும் இரண்டு பேர் மட்டும் புவச்சந்திரனை விடுவிக்க முயன்றனர்.
ஒருவர் பாம்பின் தலையை பிடித்துக்கொண்டும், மற்றொருவர் பாம்பின் வாலை பிடித்துக்கொண்டும் புவச்சந்திரனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் பாம்பு தன்னுடைய பிடியை விடவில்லை. இதனையடுத்து பாம்பின் கண்களை கருப்பு துணிக்கொண்டு மூடி மீண்டும், புவச்சந்திரனை அதன் பிடியிலிருந்து விடுவிக்க முயன்றிருக்கின்றனர். இறுதியில் பாம்பு தனது பிடியை தளர்த்தியுள்ளது. இதனையடுத்து புவச்சந்திரன் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கிறார்.
மலைப்பாம்பு கோணிப்பையில் போடப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. வனத்துறையினர் இதனை அருகில் உள்ள காட்டு பகுதியில் விடுவித்திருக்கின்றனர். இருப்பினும் 2019ல் நடந்த சம்பவத்தின் வீடியோ இப்போது மீண்டும் ஷேராகி வருகிறது.
கடந்த சில நாட்களாக வெளிநாடுகளில் மலைப்பாம்புகள் மனிதர்களை விழுங்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
மத்திய இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசி பகுதியில் ஒரு பெண்ணை மலைப்பாம்பு அப்படியே உயிருடன் விழுங்கியுள்ளது. கடந்த 2ம் தேதியன்று 36 வயதான சிரியாட்டி எனும் பெண் தனது குழந்தைகளுக்காக மருந்து வாங்க மெடிக்கல் ஷாப் சென்றிருக்கிறார். ஆனால் அன்றிரவு அவர் வீடு திரும்பவில்லை. எனவே கணவர் அடியன்சா போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். போலீசார் அருகில் உள்ள அனைத்து மெடிகல் ஷாப்களிலும் விசாரித்திருக்கிறார்கள். ஆனால், சிரியாட்டி எந்த கடைக்கும் போகவில்லை.
எனவே போலீசார் ஆள் கடத்தில் கோணத்தில் விசாரணையை தொடங்கினர். மத்திய இந்தோனேசியா முழுவதும் உள்ள காவல் நிலையத்திற்கு சிரியாட்டியின் போட்டோ அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இரண்டு நாட்களாக தீவிர தேடுதல் வேட்டை நடந்திருக்கிறது. ஆனால் எங்கு தேடியும் சிரியாட்டி கிடைக்கவில்லை.

மறுபுறம் போலீசை நம்பினால் வேலைக்கு ஆகாது என்று கணவர் அடியன்சா தன்னுடைய உறவினர்களை அழைத்துக்கொண்டு தேடுதல் பணியில் இறங்கினார். அப்போது இவர் வீட்டிற்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் மனைவியின் செருப்பு மற்றும் உடைகள் கிடந்திருக்கின்றன. இதனையடுத்து தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அப்போதுதான் 10 மீ தூரத்தில் பெரிய மலைப்பாம்பு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
வழக்கத்திற்கு மாறான சைஸில் வயிறு வீங்கிய நிலையில் அப்பாம்பு நகர முடியாமல் தவித்திருக்கிறது. சந்தேகத்தின் பேரில் காவல்துறைக்கு கணவர் தகவல் கொடுத்திருக்கிறார். பின்னர் போலீசார் முன்னிலையில் பாம்பு வெட்டப்பட்டிருக்கிறது. அதன் வயிற்றிற்குள் சிரியாட்டி சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்.
கடந்த மாதம் இதேபோல சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணை மலைப்பாம்பு ஒன்று விழுங்கியிருந்தது. இதே தெற்கு சுலவேசி மாகாணத்தில்தான் இந்த சம்பவமும் நடந்திருந்தது.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications