Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிஜமாக நடந்த ‘கேங்’ ரேப்? சார்மிளா சொல்வது நிஜம்! வாக்குமூலம் தந்த நடிகர் விஷ்ணு

Subscribe to Oneindia Tamil

கேரளா: மலையாள இயக்குநர் ஹரிஹரன் தன்னை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக நடிகை சார்மிளா கூறியிருந்த நிலையில், அந்தச் சம்பவம் நடந்தது உண்மைதான் என்று நடிகர் விஷ்ணு வாக்குமூலம் அளித்துள்ளார்.

நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை மலையாள சினிமா துறையைக் கதிகலங்க வைத்துள்ளது. அதன் எதிரொலியாகக் கடந்த வாரம் 'அம்மா' சங்கத் தலைவர் பதவியிலிருந்து மோகன்லால் விலகினார். அவருடன் சங்க செயற்குழு உறுப்பினர்கள் 17 பேர் ராஜினாமா செய்தனர். இந்த கமிட்டியின் அறிக்கை பற்றி கடந்த சில நாட்களாக மவுனம் காத்து வந்த மம்மூட்டி இரண்டு நாட்கள் முன்னதாக தனது கருத்தை வெளியிட்டிருந்தார்.

hema committee report malayalam cinema

மலையாள திரைத்துறையில் பணிபுரியும் பல பெண்கள் நீதிபதி ஹேமா கமிஷன் முன் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். சொல்லப் போனால், இந்த விவகாரத்தில் கேரள நடிகர்கள் சங்கம் பெண்களுக்குப் பாதுகாப்பு தர தவறி இருக்கிறது என்றே கமிஷன் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த அறிக்கை பற்றிய செய்தி வெளிவந்ததிலிருந்து மலையாள நடிகைகள் சிலர் வெளிப்படையாக தாங்கள் சந்தித்த பிரச்சினைகள் பற்றிப் பேச தொடங்கி உள்ளனர்.

இந்த விவகாரம் தமிழ் சினிமாவையும் விட்டுவைக்கவில்லை. யாராவது நடிகைகளிடம் அப்படி நடந்துகொண்டால் 'செருப்பைக் கழற்றி அடிக்க வேண்டும்' என்று காட்டமாக நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் கூறியிருந்தார். மேலும் ஊர்வசி, ஷகீலா, ராதிகா, குட்டி பத்மினி எனப் பலரும் பல புகார்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் மலையாள நடிகை சார்மிளா தன்னை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யச் சிலர் முயன்றதாகப் பேசிய விவகாரம் கேரளாவில் பெரும் புயலைக் கிளப்பி வருகிறது. சுமார் 35க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்தவர் நடிகை சார்மிளா. இவர் பல ஆண்டுகள் முன்னதாக நடந்த ஒரு சம்பவம் பற்றி பேசியுள்ளார். சார்மிளா பேசுகையில், "1997ஆம் ஆண்டு 'அர்ஜுனன் பிள்ளையும் அஞ்சு மக்களும்' படப்படப்பிடிப்பின்போது தயாரிப்பாளர் எம்.பி. மோகனன், தயாரிப்பு மேலாளர் சண்முகன் மற்றும் இவர்களது நண்பர்கள் அனைவரும் சேர்ந்து என்னைக் கூட்டுப் பலாத்காரம் செய்ய முயன்றனர். உடனே ஹோட்டல் அறையிலிருந்து எப்படியோ தப்பித்து வந்தேன்.

ஆனாலும் அவர்கள் எனது சேலையைப் பிடித்து இழுத்துக் கழற்ற முயன்றனர்" என்று சிலரின் பெயரைக் குறிப்பிட்டே குற்றஞ்சாட்டியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "ஹரிஹரன் என் நண்பரும் நடிகருமான விஷ்ணுவிடம் நான் 'அட்ஜஸ்ட்மெண்ட்' செய்வேனா என்று கேட்டார். நான் 'இல்லை' என்று சொன்னதும், ஹரிஹரன் தனது 'பரிணயம்' படத்திலிருந்து எங்கள் இருவரையுமே நீக்கிவிட்டார்" என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் இப்போது இந்த விவகாரத்தின் ஒரு பகுதியாக இருந்த விஷ்ணு இப்போது சார்மிளா சொன்னது உண்மைதான் என்று கூறியுள்ளார். இது பற்றிப் பேசிய விஷ்ணு,"இப்படி ஒரு விருப்பம் தன் முன்பாக வைக்கப்பட்டது உண்மைதான். அதற்கு ​​சார்மிளா மறுப்பு தெரிவித்துவிட்டார். நான் சார்மிளாவின் மறுப்பை ஹரிஹரனிடம் சொன்னேன். உடனடியாக ​சார்மிளா பெயர் 'பரிணயம்' படத்திலிருந்து அவர் நீக்கிவிட்டார். அது உண்மை" என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

மனோரமா பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியின்படி, ​​சார்மிளா, "அவர்கள் எனது உதவியாளரையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்கள். மேலும் எனது ஆண் உதவியாளர் ஒருவர் தாக்கப்பட்டார். நான் தங்கியிருந்த ஹோட்டல் வரவேற்பாளரும் இதில் ஈடுபட்டிருந்தார். ஒரு ஆட்டோ டிரைவர்தான் எங்களைக் காப்பாற்றினார். நான் தப்பித்தாலும், படத்தில் பணிபுரியும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஒருவரை அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

நான் நான்கு மொழிகளில் பணியாற்றியுள்ளேன். இந்தப் பிரச்சனைகள் முக்கியமாக மலையாள இண்டஸ்ட்ரியில்தான் இருக்கிறது. நான் ஒரு தாயாக இருந்ததால் சில பொறுப்புகள் இருந்தன. அதன் காரணமாகப் புகார் கொடுப்பதிலிருந்து விலகி இருந்தேன். இதுபோன்ற கோரிக்கைகளை ஏற்க மறுத்ததால் எனக்குக் குறைந்த வாய்ப்புகளே கிடைத்தன" என்று கூறியுள்ளார்.

மலையாள திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் சவாலான சூழ்நிலைகளைப் பற்றி நீதிபதி ஹேமா ரிப்போர்ட் அம்பலப்படுத்தியுள்ளது. கடந்த மாதம் மலையாளத் திரையுலகில் பெண்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பது பற்றிய திடுக்கிடும் தகவலைக் கொண்ட ஹேமா கமிட்டி அறிக்கையை வெளியிட்ட இருந்தது. அதைத் தடுத்து நிறுத்தியதற்காகக் கேரள அரசு கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அதை மீறி இந்த அறிக்கையானது கடந்த ஆகஸ்ட் 18 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.

கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல நடிகை ஒருவரின் பாலியல் வன்கொடுமைக்குப் பதிலளிக்கும் வகையில் இக்குழு அமைக்கப்பட்டது. அதனை ஒட்டி பாலியல் துன்புறுத்தல், பாலின அடிப்படையிலான பாகுபாடு. பணியிடங்களில் நடைபெறும் சீண்டல்கள், மலையாளத் திரைப்படத்துறையில் பெண்கள் சந்திக்கும் கடுமையான சிக்கல்கள் ஆகியவற்றை இந்தக் குழு ஆராய்ந்து வந்தது. இந்த மாதிரியான துன்புறுத்தல்கள், பாகுபாடுகளை எதிராகப் பேசத் துணியும் பெண்களை மலையாள சினிமா துறை அவர்களை திட்டமிட்டு நிராகரிப்பதாக இக்குழு கண்டறிந்துள்ளது. இந்நிலையில்தான் இப்போது இயக்குநர் ஹரிஹரன் மீது நடிகை சார்மிளா கூறிய குற்றச்சாட்டை நடிகர் விஷ்ணு உறுதி செய்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+