கேரளத்தில் பரவும் குரங்கு அம்மை.. இரண்டாவது நபருக்கு தொற்று உறுதி.. தீவிர கண்காணிப்பு
திருவனந்தபுரம்: உலக அளவில் குரங்கு அம்மை தொற்று நோய் பொது சுகாதார அவசர நிலையாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், கேரள மாநிலத்தில் இரண்டாவது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய மற்றும் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில்,குரங்கம்மை தொற்று (எம் - பாக்ஸ்) வேகமாகப் பரவி வரும் நிலையில், உலகளவில் குரங்கு அம்மை தொற்றை பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் அண்மையில் அறிவித்திருந்தது. காய்ச்சல், குளிர் காய்ச்சல், தலைவலி, வீக்கம், உடல் வலி, தசைவலி போன்றவை குரங்கு அம்மையின் அறிகுறிகள் ஆகும். இந்த நோய் பாதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு முகம், கைகள், மார்பு மற்றும் பிறப்புறுப்புகளில் புண்கள் ஏற்படும்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த 38 வயது நபருக்கு குரங்கம்மை தொற்று செப்டம்பர் 18 ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், எடவன்னா பகுதியைச் சேர்ந்த இவர் துபாயில் இருந்து அண்மையில் தனது சொந்த ஊரான கேரளத்துக்கு வந்துள்ளார். அவருக்கு குரங்கம்மை அறிகுறிகள் தென்பட்ட நிலையில் செப்டம்பர் 17 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டார்.
மருத்துவமனையில் அவருக்கு ரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டன. அந்தப் பரிசோதனையில் அவருக்கு குரங்கம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. மலப்புரம் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார். இதைத்தொடர்ந்து, கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழ்நாட்டு எல்லைப் பகுதிகளில், கோவை மாவட்ட எல்லைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மத்திய அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்தியது.
இந்தியாவில் ஏற்கனவே ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த தொற்று கிளேடு 2 வகை தொற்றாக இருப்பதால் அச்சம் கொள்ள தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு 26 வயது இளைஞர் ஒருவர் வந்துள்ளார். அவரது மாதிரிகள் ஆலப்புழாவில் உள்ள ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்ட நிலையில் அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த இளைஞர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து, கேரளத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இரண்டாக உயர்ந்துள்ளது. அதேபோல, இந்தியாவில் இந்த எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. குரங்கு அம்மை பாதிப்பு காரணமாக ஏற்கனவே கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நோய் பரவாமல் தடுக்கும் வகையில் மாநில எல்லைப் பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications