Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அன்று நிலச்சரிவில் குடும்பம்.. இன்று விபத்தில் காதலன்.. கேரள பெண்ணுக்கு அடுத்தடுத்த துயரம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த நிலச்சரிவில் ஸ்ருதி என்ற பெண் தனது குடும்பத்தினர் 9 பேரை இழந்த நிலையில், தற்போது தனது வருங்கால காதல் கணவரையும் விபத்தில் இழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் உள்ள முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் கடந்த ஜூலை 30 ஆம் தேதி அடுத்தடுத்து நடந்த நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் தங்களது குடும்பங்கள், வீடுகள், உடமைகள் என அனைத்தையும் இழந்து நிற்கதியாக நின்றனர். இந்த இயற்கை பேரிடர் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலச்சரிவில், ஸ்ருதி என்பவரது தாய், தந்தை, தங்கை என தனது குடும்பத்தினர் 9 பேரை இந்த நிலச்சரிவில் இழந்தார்.

wayanad landslide lovers

நிலச்சரிவின்போது, ஸ்ருதி கோழிக்கோட்டில் பணியாற்றி வந்ததால் உயிர்தப்பினார். நிலச்சரிவில் ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழந்து என்ன செய்வதென்று தெரியாமல் நின்ற ஸ்ருதிக்கு அவரது காதலர் ஜென்சன்தான் அச்சமயத்தில் துணையாக நின்றார். இந்நிலையில், தற்போது காதலன் ஜென்சனையும் ஸ்ருதி விபத்தில் இழந்துள்ள சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கேரள மாநிலம், அம்பலவயல் அருகேயுள்ள ஆண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜென்சன். ஜென்சனும், ஸ்ருதியும் சிறுவயதில் இருந்தே காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக் கொடி காட்டவே, 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் குடும்பத்தினரின் ஆசியுடன் இவர்களது நிச்சயதார்த்தம் கோலாகலமாக முடிந்துள்ளது. இந்நிலையில், ஜென்சன் மற்றும் ஸ்ருதியின் திருமணம் வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெற இருந்தது.

இதற்கிடையே வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் தாய், தந்தை, தங்கை என தனது குடும்பத்தினர் 9 பேரை பறிகொடுத்தார் ஸ்ருதி. மீளா துயரத்தில் இருந்த ஸ்ருதியை கடந்த ஒன்றரை மாதங்களாக பல்வேறு விஷயங்களை செய்து அவரைத் தேற்றி வந்துள்ளார் ஜென்சன். இந்நிலையில், இருவரின் திருமணத்தையும் அவர்களது குடும்பத்தினர் நினைத்தது போலவே டிசம்பர் மாதத்தில் முடித்து விடலாம் என்று முடிவெடுத்துள்ளார்.

தங்களுடைய இந்தத் திருமணம் நிலச்சரிவில் உறவுகளை இழந்த அனைவரும் மீள்வதன் அடையாளமாக இருக்கும் என்றும் ஜென்சன் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, நிலச்சரிவில் உயிரிழந்தோர் புதைக்கப்பட்ட இடத்திற்கு ஜென்சன் மற்றும் ஸ்ருதி இருவரும் சென்று அங்கு ஆகஸ்ட் 29 ஆம் தேதி மரியாதை செலுத்தினர். அங்கு அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகின.

இந்நிலையில், திருமண ஏற்பாடுகளுக்கான ஜென்சன், ஸ்ருதி மற்றும் அவர்களது குடும்பத்தினர் நேற்று வேனில் சென்றுள்ளனர். அப்போது, கல்பெட்டா அருகே உள்ள வெள்ளரம்குன்னு என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது இவர்களது வேனும், எதிரே வந்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ஜென்சன் பலத்த காயமடைந்தார்.

இதையடுத்து, அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு, மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவால் ஜென்சனின் உடல் மருந்துகளுக்கு ஒத்துழைக்காமல் போயுள்ளது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஜென்சன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ருதியும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நிலச்சரிவுக்குப் பின்னர் ஜென்சன் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பேசியபோது, ஸ்ருதியை என்ன ஆனாலும் நான் தனியாக மட்டும் விடவே மாட்டேன். ஆனால், எனக்கு எதாவது ஆனால் என்ன செய்வதென்று மட்டும் எனக்கு பயமாக உள்ளதென்று கூறியிருந்தார். அப்போது, நான் தனியாக இல்லை என்பதை நினைத்து என்னுடைய பெற்றோர் மகிழ்ச்சி அடைவார்கள் என்று ஸ்ருதி கூறியிருந்தார். ஆனால், ஜென்சனின் பயம் உண்மையாகி ஸ்ருதியை தனிமரமாக்கியுள்ள சம்பவம் அனைவரது மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+