Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வந்தே பாரத் ரயில் மேல இத்தனை கம்ப்ளைண்ட்டா?.. பரோட்டாவில் புழுக்கள்.. கேரளா பயணி புகார்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடுக்கு செல்லும் வந்தே பாரத் ரயிலில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட பரோட்டாவில் புழு இருந்ததாக புகார் எழுந்துள்ளது.

கடந்த மாதம் 25 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடுக்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். வந்தே பாரத் ரயிலின் பெட்டிகள் முழுக்க முழுக்க இந்தியாவில் அதுவும் சென்னை பெரம்பூர் லோகோ ஃபேக்ட்ரியில் தயாரிக்கப்படுகிறது. இது மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்ல கூடியது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிவேக ரயில்களளை ரயில்வே அமைச்சகம் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் அறிமுகம் செய்தது. இந்த ரயிலில் என்ஜினானது தனியாக இல்லாமல் ரயிலின் மற்ற பெட்டிகளுடனேயே இணைந்திருக்கும்.

A worm found in food given in Vande Bharat Express

ரயிலில் தானியங்கி கதவுகள், குளிர்சாதன வசதி, வைஃபை வசதி, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் என பல அதிநவீன வசதிகள் உள்ளன. இவை சென்னையில் உள்ள பெரம்பூர் ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன.

இந்தியா முழுவதும் சுமார் 14 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன் முதல் சேவை டெல்லி- வாரணாசி வழித்தடத்தில் தொடங்கியது. இதன் 15ஆவது சேவையாக திருவனந்தபுரம்- காசர்கோடு வரை இயக்கப்படுகிறது. இந்த வந்தே பாரத் ரயில்கள் "ரயில் 18" என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ரயிலின் வேகமானது மணிக்கு 180 கிமீ வேகத்தில் செல்லும்.

இதில் 14 ஏசி சேர்களும் இரு எக்ஸிகியூட்டிவ் சேர் கோச்சுகளும் உள்ளன. ஏசி சேர் கோச்சுகள் அக்குவா நிறத்திலும் ஏசி எக்ஸிகியூட்டிவ் சேர்கள் பிங்க் நிறத்திலும் குறியிட்டு காட்டப்பட்டுள்ளது. இந்த ரயில் இந்தியாவின் 15 ஆவது சூப்பர்ஃபாஸ்ட் ரயிலாகும். இந்த ரயில் கேரளாவின் முதல் நீல நிற மற்றும் வெள்ளை நிறத்தினாலான ரயிலாகும்.

திருவனந்தபுரம்- காசர்கோடு இடையே 501 கி.மீ. தூரத்தை கடக்கும். இதன் வழியே நிறைய நீர் நிலைகள், தென்னை மரங்கள், மேற்கு தொடர்ச்சி மலைகள் உள்ளிட்ட இயற்கை எழில் கொஞ்சம் இடங்களை தாண்டி செல்லும். 501 கி.மீ. தூரத்தை 7.5 மணி நேரத்தில் கடக்கும். திருவனந்தபுரம்- காசர்கோடு இடையே 6 நிறுத்தங்களில் ரயில் நிற்கும். அவை கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம் டவுன், திரு்சூர், ஷோரனூர் ஜங்ஷன், கோழிக்கோடு, கண்ணனூர், காசர்கோடு ஆகியவை ஆகும்.

A worm found in food given in Vande Bharat Express

இந்த ரயிலில் ஆரம்பத்திலிருந்தே புகார்கள் எழுந்தன. கடந்த 29ஆம் தேதி கேரளாவில் கனமழை பெய்த நிலையில் ஒரு பெட்டியில் மழை நீர் ஒழுகியது. ஏசி வென்டிலேட்டர் வழியாக இந்த மழை நீர் உள்ளே வந்ததாக ரயில்வே துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அது போல் கடந்த மே 1 ஆம் தேதி கேரளாவில் மல்லப்புரம் மாவட்டத்தில் திருநவ்யா டூ திருர் இடையே சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

இதில் சி4 பெட்டி மீது கற்களை வீசி கடுமையாக தாக்குதல் நடத்தினர். இந்த ரயிலின் கண்ணாடி ஜன்னல்களில் விரிசல் ஏற்பட்டது. இதனால் வந்தே பாரத் ரயிலுக்கு அடுத்த 15 நாட்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதே ரயிலில் இ1 பெட்டியில் பயணி ஒருவருக்கு காம்ப்ளிமென்ட் பிரேக்ஃபாஸ்ட்டாக பரோட்டா வழங்கப்பட்டது.

அவரும் பரோட்டாவை சாப்பிட முற்பட்ட போது அதில் புழுக்கள் இருந்ததை கண்டார். உடனடியாக அதிர்ச்சி அடைந்த அவர் அந்த புழுக்கள் நெளிவதை சக பயணிகளிடமும் காட்டிவிட்டு அவரும் வீடியோ எடுத்துக் கொண்டார். இதையடுத்து காசர்கோடு ரயில்நிலையத்தை ரயில் அடைந்தவுடன் அந்த பயணி காசர்கோடு ரயில் நிலையத்தில் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். இதையடுத்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க புகாரானது பாலக்காடு ரயில்வே கோட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+