கஞ்சா போதை.. ரஷ்ய பெண்ணுக்கு ஸ்கெட்ச் போட்ட இளைஞர்! கடைசியில் நடந்த ட்விஸ்ட்.. என்னாச்சுனு பாருங்க

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் ரஷ்ய நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோழிக்கூடு மாவட்டம் கூராச்சுண்டு பகுதியை சேர்ந்தவர் இளைஞர் முகமது ஆகில். இவர் அரபு நாட்டில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் ரஷ்யாவை சேர்ந்த ஒரு பெண்மணிக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடக்கத்தில் ஆகில் அரபு நாட்டை சேர்ந்தவர் என்று அப்பெண்மணி நினைத்திருக்கிறார். ஆனால், அவர் சொந்த ஊர் கேரளா என்பது ஒரு கட்டத்தில் தெரிய வந்துள்ளது. இது அப்பெண்ணுக்கு ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது.

தானும் கேரளாவை சுற்றப்பார்க்க வேண்டும் என்று நீண்ட நாள் யோசித்திருந்ததாகவும், ஆனால் கேரளாவில் தனக்கு யாரையும் தெரியாது என்றும் கூறியுள்ளார். இதை கேட்ட ஆகில், நான் கேரளாவை சுற்றி காட்டுகிறேன் என்று கூறியுள்ளார். இதனையடுத்து ஆகில் கேரளா திரும்பியுள்ளார். பின்னர் 2 நாட்கள் கழித்து அப்பெண்மணி ரஷ்யாவிலிருந்து கேரளா வந்திருக்கிறார். இருவரும் ஒருவரையொரு நேரில் சந்தித்து நிறைய விஷயங்களை பேசியிருக்கின்றனர். பின்னர் கேரளா முழுவதும் அப்பெண்மணிக்கு ஆகில் சுற்றிக்காட்டியுள்ளார்.

 சுற்றுப்பயணம்

சுற்றுப்பயணம்

இதை எதிர்பார்க்காத அப்பெண்மணி நெகிழ்ச்சியடைந்துள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து நேபாளம், கத்தார் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். இந்த பயணமும் திருப்தியாக இருந்திருக்கிறது. இருவரும் நட்பாக இருந்த நிலையில், அப்பெண்மணி இவரிடம் நெருங்கி பழகுவதாக தவறாக நினைத்துள்ளார். இந்நிலையில் மீண்டும் கேரளா திரும்பியவுடன் தனது சில்மிஷங்களை தொடங்கியுள்ளார். ஆனால் இதற்கு அப்பெண் ஒப்புக்கொள்ளவில்லை. இருப்பினும் ஆகில் கட்டாயப்படுத்தியுள்ளார். அப்போதுதான் தான் பயன்படுத்திய கஞ்சாவை புகைத்துப்பார்க்க சொல்லி கொடுத்திருக்கிறார்.

 கஞ்சா போதை

கஞ்சா போதை

அப்பெண்ணும் இதனை சாதாரண பீடி என்று நினைத்து இழுத்து பார்த்துள்ளார். ஆனால் கஞ்சா அப்பெண்ணை ஆழ்ந்த போதையில் ஆழ்த்தியிருக்கிறது. பின்னர் ஆகில் தனது சில்மிஷத்தை தொடங்கியுள்ளார். அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். போதையில் அப்பெண் எவ்வளவு கெஞ்சியும் அதனை ஆகில் கண்டுக்கொள்ளவில்லை. பின்னர் போதை தெளிந்த பின்னர் அடுத்த நாள் இந்த சம்பவம் குறித்து அப்பெண் கேள்வியெழுப்பியுள்ளார். பதலுக்கு ஆகிலும் அப்பெண்ணிடம் சண்டையிட்டுள்ளார். இப்பிரச்னை பெரியதாக வெடித்த நிலையில், வாக்குவதம் கைகலப்பாக மாறியிருக்கிறது. அப்போது ஆகில் தனது வீட்டின் மாடியிலிருந்து ரஷ்ய பெண்ணை கீழே தள்ளி விட்டுள்ளார்.

பலாத்காரம்

பலாத்காரம்

கீழே விழுந்து துடித்த ரஷ்ய பெண்ணை ஆகிலே மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இந்த விஷயம் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. ரஷ்ய பெண்ணிடம் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினருக்கு பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. அதாவது ஆகில் அப்பெண்ணை கட்டாயப்படுத்தி கஞ்சா கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அடுத்த முறையும் இவ்வாறு முயற்சி செய்தபோது அதற்கு அப்பெண் ஒப்புக்கொள்ளவில்லை. மட்டுமல்லாது காவல்துறையில் புகார் அளிப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆகில் அப்பெண்ணை மாடியிலிருந்து கீழே தள்ளி விட்டுள்ளார்.

 கைது

கைது

இதனையடுத்து காவல்துறையினர் ஆகிலை கைது செய்தனர். அவரிடம் தங்களது பாணியில் விசாரணை மேற்கொண்டர். ஆகில் விசாரணையில் அனைத்து உண்மையையும் ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கொயிலான்டி சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+