ஐயோ முடி போச்சே.. புருவமுமா.. அவசரப்பட்டு தற்கொலை செய்த வாலிபர்.. சிக்கிய சோக கடிதம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் தலைமுடி, புருவமுடிகள் உதிர்ந்ததால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோழிக்கோட்டை சேர்ந்தவர் பிரசாந்த், இவருக்கு தலை முடி உதிர தொடங்கியது, வழுக்கையும் வந்துவிட்டது. இதனால் அவர் பலரது கேலி கிண்டலுக்குள்ளானது தெரிகிறது. மேலும் வழுக்கைத் தலையாக இருந்தால் எந்த பெண்ணும் திருமணம் செய்து கொள்ள மாட்டார் என கவலையும் அவருக்கு ஏற்பட்டுவிட்டது.

இதனால் எப்படியாவது முடியை சரி செய்து வழுக்கையான இடத்தில் முடி வளர வேண்டும் என கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பிரசாந்த் சிகிச்சை பெற்று வருகிறார். வழுக்கையை நீக்க மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை உட்கொண்டு வந்தார்.

வழுக்கை

வழுக்கை

எப்படியும் வழுக்கை சரியாகி தன் தலையில் முடிமுளைத்துவிடும் என மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார் பிரசாந்த். ஆனால் அவர் நினைத்ததற்கு நேர் மாறாகத்தான் எல்லாமே நடந்தது. மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை உட்கொண்ட போதிலும் அவருக்கு முடி வளரவில்லை.

முடி கொட்டியது

முடி கொட்டியது

மாறாக இருந்த முடியும் கொட்டியது. புருவம் மற்றும் மூக்கில் உள்ள முடிகளும் கொட்டியது. எனினும் தலைமுடி உதிர்வானது நின்றுவிடும் என்ற நம்பிக்கையில் அவர் இருந்தார். ஆனாலும் தலைமுடி உதிர்வது மட்டும் நின்றபாடில்லை. இதனால் மிகவும் மனவேதனையில் பிரசாந்த் இருந்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை

தற்கொலை

இந்த வேதனை அதிகரித்ததால் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீஸார் பிரசாந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிரசாந்த் எழுதியதாக ஒரு கடிதத்தை கைப்பற்றினர். அதில் "வழுக்கையால் என்னால் வீட்டை விட்டே வெளியில் வர முடியவில்லை.

தலைமுடி உதிர்வு

தலைமுடி உதிர்வு

தலைமுடி உதிர்வுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்தான் என்னுடைய இறப்பிற்கு காரணம் என கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து டாக்டர் ரபீக் குறித்து பிரசாந்தின் உறவினர்கள் புகார் அளித்தனர். இதுகுறித்து பிரசாந்தின் உறவினர்கள் கூறுகையில் 2014 ஆம் ஆண்டு முடி உதிர்வு சிகிச்சைக்காக மருத்துவர் ரபீக்கை பிரசாந்த் அணுகினார். அப்போது அவருக்கு லேசாக முடி உதிர்தல் பிரச்சினை இருந்தது.

தலைமுடி உதிர்வு அதிகம்

தலைமுடி உதிர்வு அதிகம்

ஆனால் சிகிச்சைக்கு பிறகு தலைமுடி அதிகமாக கொட்ட தொடங்கிவிட்டது, புருவம், மூக்கில் உள்ள முடிகளும் கொட்டிவிட்டன. இதுகுறித்து பல முறை ரபீக்கிடம் பிரசாந்த் கூறியும் அவர் தொடர்ந்து ஒரே மருந்துகளை கொடுத்து வந்தார். முடி உதிர்வு அதிகரித்ததால் ஒரு கட்டத்தில் பிரசாந்தால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. இதனால்தான் அவர் இத்தகைய முடிவை எடுத்துள்ளார். எனவே மருத்துவர் மீது உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+