Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Actor Dileep: 8 ஆண்டு வழக்கு..நடிகர் திலீப்பின் தலை தப்பியது! நடிகை பலாத்கார வழக்கில் திலீப் மீதான புகார்கள் என்ன?

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: 2017ஆம் ஆண்டு கேரளாவில் பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 8வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் திலீப் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் என்னென்ன? என்பது குறித்து பார்க்கலாம்..

கடந்த 2017-ம் ஆண்டு கடத்தப்பட்டு கடும் பாலியல் அத்துமீறலுக்கு ஆளானார். சினிமா படபிடிப்பு முடிந்து காரில் திரும்பிய கேரளத்தின் பிரபல நடிகை ஒருவர். மலையாளம் மட்டுமல்லாது, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிப் படங்களிலும் அவர் நடித்திருந்தார்.

இதனால் இந்திய திரையுலகமே பெரும் அதிர்ச்சியடைந்த நிலையில், நீண்ட கால முன்விரோதம் காரணமாக பிரபல நடிகரான திலீப் நடிகையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யவும், அதனை வீடியோவாக எடுத்து தனக்கு பகிருமாறு சொன்னதாக புகார் எழுந்தது.

Actor Dileep kerala thiruvananthapuram

கேரள நடிகை

இதனையடுத்து பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி உட்பட 6 பேர் கைதாகினர். மேலும் நடிகைக்கு பாலியல் வன்கொடுமை கொடுக்கப்பட்டபோது உடந்தையாக இருந்ததாக நடிகையின் கார் ஓட்டுநர் பல்சன் சுனில் என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பாதிக்கப்பட்ட நடிகை கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் நேரில் அடையாளம் காட்டினார். இந்த வழக்கில் நடிகர் திலீப்புக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது . இதையடுத்து இந்த வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

நடிகர் திலீப்

வழக்கின் விசாரணை மந்தமாக நடந்து கொண்டிருந்தபோது, இயக்குநர் பாலசந்திரகுமார், நடிகர் திலீப் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இந்த விவகாரத்தில் மீண்டும் பரபரப்பை கிளப்பினார் மலையாள இயக்குனரான பாலச்சந்திரன். பாலச்சந்திரன். தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மலையாள இயக்குனரான பாலச்சந்திரன், நடிகையை பலாத்காரம் செய்யப்பட்ட காட்சிகளை குற்றவாளிகள் செல்போனில் வீடியோ எடுத்ததாகவும் அந்த காட்சிகளை மலையாள நடிகர் திலிப் உள்ளிட்ட அவருக்கு நெருக்கமான சிலர் பார்த்ததாக கூறியிருந்தார்.

நடிகையின் வீடியோ

மேலும் இந்த வீடியோ முக்கிய பிரபலங்கள் பலருக்கு அனுப்பப்பட்டதாகவும், அவர்கள் யார் யார் என்று எனக்கு தெரியும் என அவர் கூறியிருந்தார். இதுதொடர்பாக மீண்டும் விசாரணை தீவிரமடைந்த நிலையில், நடிகையை பலாத்காரம் செய்த காட்சிகள் நடிகர் திலீப் வசம் இருப்பதாக இயக்குநர் பாலச்சந்திர குமார் கூறிய குற்றச்சாட்டை நிரூபிக்கும் ஆதாரங்கள் கிடைத்ததாக கேரள குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

வீடியோ ஆதாரம்

இதற்கிடையே நடிகர் திலீப் தனது மொபைல் போன்களை ஆய்வுக்கு அனுப்பியதாக கூறிய நிலையில் அதிலிருந்த தரவுகளை அழித்துள்ளார் எனவும், திலீப் மற்றும் அவரது மைத்துனர் சூரஜ் ஆகியோர் பயன்படுத்திய போன்களில் இருந்து வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளது. நடிகர் திலீப் கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 6 போன்களில் இருந்து ஆயிரக்கணக்கான பதிவுகள் மீட்கப்பட்டுள்ளன. ஃபோன் உரையாடல்கள் மட்டும் 200 மணிநேரத்திற்கு மேல் இருக்கும் எனவும் போலீசார் கூறினர்.

நடிகர் திலீப் விடுதலை

இந்த நிலையில் தான் நடிகர் திலீப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு நிரூபிக்கவில்லை என நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இந்த வழக்கை பொறுத்தவரை நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளியான பல்சர் சுனிலை நடிகர் திலீப் தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இந்த சம்பவத்தை அரங்கேற்றுவதற்காக சுனில் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு திலீப் ஒன்றரை கோடி ரூபாய் பணம் கொடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

நடிகை மேல்முறையீடு

இதற்கிடையே கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்திருக்கிறது. நடிகர் திலீப்பும் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார். இத்தனை ஆண்டுகள் தனக்கு பக்கபலமாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் திலீப். அதே நேரத்தில் இந்த வழக்கு தொடர்பாக மேல்முறையீடு செய்யப்படும் என நடிகை தரப்பு கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+