Dileep Net worth:மிமிக்ரி ஆர்டிஸ்ட் டூ ரியல் எஸ்டேட் அதிபர்! திலீப்பின் மொத்த சொத்து மதிப்பு என்ன?

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இருந்து நடிகர் திலீப் விடுதலையான நிலையில் அவர் குறித்த தகவல்களை இணையத்தில் ரசிகர்கள் தேடி வருகிறார்கள். அவரது சொத்து மதிப்பு என்ன என்பதை பார்க்கலாம்.

Dileep Cinemas

கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திலீப் உள்ளிட்ட 10 பேரும் வழக்கு நடைபெற்ற எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இதில் நடிகர் திலீப் உள்ளிட்ட 4 பேர் குற்றவாளிகள் இல்லை என கோர்ட் தெரிவித்தது. அதே சமயம் பல்சர் சுனி உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிமன்றம் வரும் 12 ஆம் தேதி அவர்களுக்கான தண்டனை விவரங்களை அறிவிக்கிறது.

இந்த தீர்ப்பால் நிம்மதி அடைந்த திலீப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தெய்வத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இன்று சத்தியம் வென்றுள்ளது. இந்த வழக்கில் கிரிமினல் கூட்டுச் சதி உள்ளதாகவும் அதை பற்றி விசாரிக்க வேண்டும் என மஞ்சு வாரியர் கூறியதைத் தொடர்ந்துதான் எனக்கு எதிரான கூட்டுச் சதி தொடங்கியது.

கடந்த 9 ஆண்டுகளாக எனக்காக ஆத்மார்த்தமாக துணையாக இருந்த நண்பர்கள், உறவினர்கள், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அது போல் எனக்காக வாதாடிய வழக்கறிஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என திலீப் பூரிப்புடன் தெரிவித்தார்.

நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் திலீப்பிற்கு தொடர்பிருக்கிறது என்பதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

யார் இந்த திலீப்

கேரளாவின் ஆலுவா பகுதியில் பத்மநாபன் பிள்ளை- சரோஜம் தம்பதியின் மகன்தான் திலீப். இவரது இயற்பெயர் கோபாலகிருஷ்ணன். சிறு வயது முதலே இவருக்கு மிமிக்ரி நன்றாக வந்தது. கல்லூரி படிக்கும் காலத்தில் கூட மிமிக்ரிதான் இவருக்கு அடையாளமாக இருந்தது.

இவரது நண்பர்களான நாதிர்ஷா, அபி ஆகியோருடன் இணைந்து "தே மாவெளி கொம்பத்து" என்ற நகைச்சுவை ஆல்பத்தை உருவாக்கினர். இது பயங்கர ஹிட்டடித்தது. கேரளாவின் புகழ்பெற்ற "கலாபவன்" எனும் அமைப்பில் சேர்ந்து மிமிக்ரி செய்தார்.

அப்போது நடிகர் ஜெயராம் உதவியுடன் சினிமாவில் உதவி இயக்குநராக அடியெடுத்து வைத்தார். இயக்குநர் சுனில் இயக்கிய "மனதே கொட்டாராம்" எனும் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அந்த படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் திலீப். படமும் வெற்றி பெற்றதால் அந்த பெயரே அவருக்கு நிலைத்து நின்றது.

பின்னர் "மீசை மாதவன்" எனும் படத்தில் நடித்ததன் மூலம் ஒரே இரவில் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். அடுத்ததாக தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினார். இதுவரை 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள திலீப்பின் படங்களில் 90 சதவீத வணிக ரீதியாக வெற்றி பெற்றவை.

மலையாள திரையுலகில் மோகன்லால், மம்மூட்டிக்கு பிறகு 3ஆவது இடத்தை பிடித்தார் திலீப். 2010 ஆம் ஆண்டு மலையாள நடிகர் சங்கமான அம்மா (AMMA) கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தது. அப்போது திலீப் புத்திசாலித்தனமாக ஒரு முடிவை சொன்னார்.

அதாவது "அம்மா" சங்கத்திற்காக தானே ஒரு படம் தயாரிப்பதாக திலீப் அறிவித்தார். அதில் மூத்த நடிகர்கள் முதல் அறிமுகமான நடிகர்கள் வரை எல்லாரும் நடிப்பார்கள் என்றார். மேலும் அந்த படத்தில் கிடைக்கும் வருமானம் முழுவதும் சங்கத்திற்கே சொந்தம் என்றார். இதையடுத்து அந்த படம் வெற்றி பெற்றது. சங்கத்தின் பொருளாதார நெருக்கடியை தீர்த்தார்.

திலீப் சினிமாவில் மட்டுமில்லை, "தே புட்டு" எனும் ரெஸ்டாரன்ட்டை நடத்தி வருகிறார். அது போல் ரியல் எஸ்டேட், ஹவுஸ் போட் வரை உள்ளிட்ட பிசினஸ் செய்து வருகிறார். 2017ஆம் ஆண்டு திலீப் , பாலியல் வழக்கில் கைதான போதே அவருக்கு சொத்து மதிப்பு ரூ 300 கோடிக்கும் மேல்.

'D Cinemas' என்ற தனது பெயரிலேயே, கேரளாவின் முக்கிய நகரங்களில் தியேட்டர்களை வைத்து நடத்தி வருகிறார். ஒரு முறை தியேட்டர் அதிபர்கள் சங்கம் ஸ்டிரைக் போராட்டத்தை அறிவித்ததும் அந்த சங்கத்தை உடைத்து தனது தலைமையில் புதிய சங்கத்தை தொடங்கினார். அது முதல் அவர் ரியல் ஹீரோ என்றே அழைக்கப்பட்டு வந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+