நடுநடுங்க வைத்த மரணம்.. ஒரே மர்மம்.. மொத்தம் 3 பெண்கள்.. மோகன்லால் போட்ட வீடியோவால் பரபரப்பு
3 இளம்பெண்கள் மரணங்கள் குறித்து மோகன்லால் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார்
திருவனந்தபுரம்: மோகன்லால் வெளியிட்ட 3 பெண்கள் குறித்த வீடியோக்கள் பற்றிதான் கேரளா முழுக்க பேச்சாக உள்ளது.. அத்துடன் இன்றைய இளைஞர்களிடமும் உருக்கமான வேண்டுகோளை மோகன்லால் முன்வைத்துள்ளார்.
Recommended Video
கடந்த ஒரே வாரத்தில் அடுத்தடுத்து மூன்று இளம்பெண்கள் இறந்துள்ளனர்.. இவர்கள் 3 பேருமே வரதட்சணை கொடுமையினால் உயிரிழந்துள்ளனர்.. இதனால் அதிர்ச்சியில் உறைந்துள்ளது கேரளா.
கொல்லத்தை சேர்ந்த மாணவி விஸ்மயா.. 22 வயது.. காலேஜ் படித்து கொண்டிருந்தார்.. படிக்கிற பெண்ணை திடுதிப்பென்று மாப்பிள்ளையை பார்த்து கல்யாணம் செய்துவைத்தனர்.. 100 பவுன் நகைகள், ஒரு ஏக்கர் நிலம், 11லட்சத்தில் கார் கொடுத்தும், இன்னும் வரதட்சணை கேட்டுள்ளார் மாப்பிள்ளை கிரண்குமார்...

இளம்பெண்
உடம்பெல்லாம் அடித்து காயப்படுத்தி உள்ளார்.. ஆணிகளை கொண்டு முகத்திலேயே குத்தி, கட்டையால் தாக்கியும் வந்துள்ளார். பிரச்சனையை பெற்றோரிடம் சொன்னபோது, நேரில் வந்து பேசுகிறோம் என்று சமாதானப்படுத்தி இருந்தனர்.. ஆனால், அதற்குள் தற்கொலை செய்து கொண்டார் என செய்தி வெளியானது.. ஆனால், இது தற்கொலை இல்லை, கொலை என்று தெரியவந்துள்ளது.

அர்ச்சனா
இதையடுத்து, திருவனந்தபுரத்தில் அர்ச்சனா என்கிற 24 வயது பெண் தற்கொலை செய்துகொண்டார்.. சுரேஷ் என்பவரை அர்ச்சனா காதலித்துள்ளார்.. 3 லட்சம் வரதட்சணை கொடுத்த பின்னரும், இன்னும் பணம் வேண்டும் என்று சுரேஷ் குடும்பத்தினர் பிரச்சனை செய்துள்ளனர்.. இதனால், கடந்த 21-ம்தி ராத்திரி அர்ச்சனா இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.. ஆனால் இதுவும் கொலை என்று அர்ச்சனாவின் பெற்றோர் கதறுகிறார்கள்.

மரணம்
அதேபோல, ஆழப்புழா வல்லிகுன்னத்தில் 19 வயதான சுசித்ரா என்ற இளம்பெண்ணும் உயிரிழந்துள்ளார்.. இவரும் வரதட்சணை பிரச்சனையால்தான் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.. 3 பெண்களுமே இளம்பெண்கள், 3 பெண்களுக்குமே வரதட்சணை பிரச்சனை இருந்துள்ளது.. 3 பெண்களின் மரணங்களும் சந்தேகத்தை கிளப்பி உள்ளன.. இந்த மரணங்களினால் நாடெங்கிலும் கண்டனம் எழுந்து வருகிறது.

இந்தியா
கனிமொழியும் இதற்காக கண்டனம் தெரிவித்திருந்தார்.. "இந்தியாவில் வரதட்சணை கொடுமைக்கு 1 மணி நேரத்திற்கு, 1 பெண் பலியாகிறார்... ஆனாலும் இந்தியக் குடும்பங்கள் இந்த வழக்கத்தை நிறுத்தியபாடில்லை... நம் மகள்களுக்கு திருமணம் செய்துவைக்கும் போது அவர்கள் சுயமரியாதையோடு பாதுகாப்பாய் இருப்பது முக்கியம் என்பதை உணரவேண்டும்' என்று பதிவிட்டார்.

ஆராட்டு
கனிமொழியின் இந்த ட்வீட்டுக்கு பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.. இந்நிலையில்தான், மோகன்லாலும் கண்டனம் தெரிவித்துள்ளார்.. தான் நடித்து வெளிவர உள்ள, ஆராட்டு படத்தில் இடம்பெற்றிருக்கும் வரதட்சணைக்கு எதிரான ஒரு சீனை பதிவிட்டுள்ளார்..

வரதட்சணை
அதில், "பெண்களுக்கு திருமணத்தைவிட சுயமரியாதைதான் முக்கியம். வரதட்சணை வாங்குவதும் தவறு கொடுப்பதும் தவறு.. வரதட்சணை வேண்டாம் என்று சொல்லுங்கள். பெண்களுக்கு நீதியும் சமத்துவமும் இருக்கும் ஒரு கேரளாவை உருவாக்குவோம்" என்றும் குறிப்பிட்டுள்ளார். மோகன்லாலின் இந்த ட்வீட் வைரலாகி உள்ளது.. இளம்பெண்கள் பலரும், இனிமேல் வரதட்சணை கொடுக்க மாட்டோம் என பதிவிட்டு வருகின்றனர்.
-
"Make Kerala Great Again.." கேரளாவில் வீதி வீதியாக வாக்கு கேட்கும் டிரம்ப்.. டிரெண்டாகும் வீடியோ -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல்












Click it and Unblock the Notifications