மண்டைக்கேறிய மதுபோதை.. வீட்டுக் பால்கனியில் வேட்டியை அவிழ்த்து.. ஜெயிலர் விநாயகனின் விபரீத வேலை!
திருவனந்தபுரம்: ஜெயிலர் படத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் அறியப்பட்ட நடிகராக மாறிய நடிகர் விநாயகன் மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார். விமான நிலையத்தில் தகராறு, கோவாவில் தெருவில் சண்டை என அடுத்தடுத்து போதையில் பிரச்சினை செய்த நிலையில், தற்போது கேரளாவில் தனது வீட்டின் பால்கனியில் அரைகுறை ஆடையில் ஆபாசமாக பேசியதாக வீடியோ பரவி சர்ச்சையான நிலையில், மன்னிப்பு கேட்டுள்ளார் விநாயகன்.
மலையாளத் திரையுலகம் மட்டுமல்லாது தமிழ் திரை உலகிலும் பிரபல நடிகராக அறியப்பட்டவர் விநாயகன். தமிழில் சிலம்பாட்டம், மரியான் ,காளை, திமிரு உள்ளிட்ட படங்களை நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.

குறிப்பாக திமிரு படத்தில் அவரது நடிப்பு பலரையும் கவனிக்க வைத்தது. அது மட்டுமல்லாமல் மலையாளத்திலும் பெயர் சொல்ல வைக்கும் பல படங்களை அவர் நடித்திருக்கிறார். குறிப்பாக 2016ல் அவர் நடித்த கம்மாண்டி படம் அவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது.
கங்கா எனும் கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு கேரளா அரசின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்று தந்தது. அடிப்படையில் நடன கலைஞரான அவர் தீ நடனத்தின் மூலம் பிரபலமாக அறியப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஆடு, ஒருத்தி, ஆடு 2, காசர்கோல்டு, தொட்டப்பன், டிரான்ஸ், ஆபரேஷன் ஜாவா உள்ளிட்ட பல படங்களில் நடித்ததன் மூலம் மலையாளத்தில் பிரபல நடிகர் அரியப்பட்டார். சிறிது காலம் தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் ஜெய்லர் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
சிலை கடத்தலில் ஈடுபட்டு இருக்கும் டான் கதாபாத்திரம் அவரை ரசிகர்களிடம் வெகுவாக கொண்டு சென்றது. குறிப்பாக மலையாளம் கலந்த அவரது தமிழ் பேச்சு வர்மன் என்ற கேரக்டரை ரசிகர்களை மிரட்டியது என்றே சொல்லலாம். அதே நேரத்தில் எந்த அளவுக்கு சினிமாவில் புகழ் பெற்றாரோ அதே அளவு சர்ச்சையிலும் சிக்குவது விநாயகனின் வழக்கம்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை ஒருவர் குறித்து ஆபாசமாக பேசியது, பல பெண்களுடன் தான் படுக்கையை பகிர்ந்து கொண்டதாக பேசியது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. மேலும் கேரளா முதலமைச்சர் உம்மன் சாண்டி மறைவு குறித்து பேசியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் பொது இடங்களிலும் அநாகரீகமாக நடந்து கொள்வதும் விநாயகனுக்கு வழக்கம்தான்.
ஹைதராபாத் விமான நிலையத்திற்கு சென்ற போது சோதனை செய்ய முயன்ற சிஐஎஸ்எஃப் காவலர்களை தாக்கியதாக புகார் எழுந்து விநாயகன் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து கோவாவில் பொது இடத்தில் அநாகரீகமாக குடிபோதையில் பேசிய வீடியோவும் வெளியாகி கடும் விமர்சனங்களை சந்தித்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் விநாயகன்.
கொச்சியில் உள்ள தனது வீட்டு பால்கனியில் அரைகுறை ஆடையில் குடிபோதையில் நின்று கொண்டிருந்த விநாயகன் பக்கத்து வீட்டுக்காரர்களையும் சாலையில் செல்பவர்களையும் மிகவும் தரக்குறைவாக ஆபாசமாக பேசி உள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து இதுபோன்று நடந்து கொள்ளும் விநாயகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் புகார் அளித்தனர்.
அதே நேரத்தில் இந்த சம்பவம் தொடர்பாக யாரும் புகார் அளிக்கவில்லை என்றும், புகார் அளித்தால் விநாயகர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என கொச்சி காவல் துறையினர் கூறியிருந்தனர். இந்த நிலையில் தன்னுடைய செயலுக்கு மன்னிப்பு கேட்டு இருக்கிறார் விநாயகன். இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அவர்," ஒரு திரைப்பட நடிகனாகவும் தனிமனிதனாகவும் தன்னால் பல பிரச்சனைகளை சமாளிக்க முடியாது. எதிர்மறையாக நடந்து கொண்டதற்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனது செயல் தொடர்பாக விவாதம் தொடரட்டும்" என பதிவிட்டுள்ளார்.
-
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு












Click it and Unblock the Notifications