நடிகையின் "விபச்சாரம்".. மீண்டும் போலீசில் சிக்கிய பிரபலம்.. நடுரோட்டில் நடந்த சேஸிங்.. என்ன நடந்தது

நடிகை அஸ்வதி பாபு காதலனுடன் கேரளாவில் கைதாகி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நடுரோட்டில் தாறுமாறாக காரை ஓட்டி, விபத்தையும் ஏற்படுத்திய பிரபல நடிகை அஸ்வதியை போலீசார் கைது செய்தனர்.. மின்னல் வேகத்தில் சேஸிங் செய்து, வாகன ஓட்டிகளே, நடிகையின் காரை மடக்கிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த நிகழ்வால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரளா திரையுலகம் மற்றும் சீரியல் தொடர்களில் நடித்து பிரபலமானவர் அஸ்வதி பாபு... மிக சிறந்த நடிகை.. இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே கேரளாவில் உண்டு..

அதிலும், சினிமாவை விட, இவர் சீரியலுக்கு வந்தபிறகுதான் நிறைய ரசிகர்களை சம்பாதித்தார்.. ஒருகட்டத்தில் இவரது நடிப்பை பார்த்துவிட்டு, அனைவரும் தங்கள் வீட்டு பெண் போலவே நினைக்கும் அளவுக்கு, திறமையான நடிகையாக ஒளிர்ந்தார்.

ஆனால், சில காலங்களிலேயே இவர்மீது நிறைய விமர்சனங்கள், சர்ச்சைகள், புகார்கள் ஒவ்வொன்றாக வெடித்தன.. முதன்முதலில் இவர் சிக்கியது ஒரு விபச்சார கேஸில்தான்.. கடந்த 2018-ம் ஆண்டு, இவர் ஒரு அப்பார்ட்மென்ட்டில் தங்கியிருந்தார்.. அந்த அடுக்குமாடி குடியிருப்பில், பெண்களை போதைக்கு அடிமையாக்கி பாலியல் தொழில் செய்ததாக புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.. அந்த புகாரின்பேரில் போலீசார் அதிரடி ரெய்டு நடத்தி, அந்த வீட்டில் விபச்சாரம் நடப்பதையும் உறுதி செய்தனர்.. பிறகு, நடிகை அஸ்வதியை கைது செய்து ஜெயிலிலும் அடைத்தனர்..

 ஃபுல் போதை

ஃபுல் போதை

அதற்கு பிறகும்கூட பல சர்ச்சைகளில் இந்த நடிகை சிக்கி கொண்டே வந்தார்.. இப்போதும் போலீசில் சிக்கி உள்ளார்.. இவருக்கு ஒரு காதலன் இருக்கிறார்.. அவர் பெயர் நவுபல்.. நேற்றிரவு 2 பேருமே ஃபுல்போதையில் இருந்துள்ளனர்.. அதே போதையில் காரை அதிவேகமாக ஓட்டி சென்றுள்ளதாக கூறப்படுகிறது... கொச்சி குசாட் சந்திப்பு சாலையில், தறிக்கட்டு சென்றதில், அந்த கார், பைக் மற்றும் சாலையோரம் தடுப்புகளில் உரசியபடி அதிவேகத்தில் சென்றுள்ளது... இதனால் சாலையில் சென்ற பொதுமக்களும், மற்ற வாகன ஓட்டிகளும் பதறிவிட்டனர்..

 நடிகையின் கார்

நடிகையின் கார்

வேறு எங்கும் சென்று அந்த கார் விபத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காக, வாகன ஓட்டிகளே போலீசுக்கு தகவல் தந்துவிட்டு, பின்னாடியே காரை விரட்டிக் கொண்டு சென்றார்கள்.. நடுரோட்டில் நடந்த இந்த சேஸிங்கை பார்த்தால், சினிமாவில் பார்ப்பதை போலவே இருந்தது.. அடுத்த கொஞ்ச நேரத்தில், அந்த காரை விரட்டி சென்ற வாகன ஓட்டிகள், நடிகையின் காரை முந்தி சென்று இடைமறித்துவிட்டனர்.. வாகன ஓட்டிகள் காரை வழிமறித்து விட்டதால், அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக, காரை அங்குள்ள ஒரு பகுதியில் கீழே இறக்கினார்.. ஆனால், கீழே கிடந்த பெரிய பெரிய கல் குத்தியதில், முன் பக்க டயர் வெடித்துவிட்டது.

 ஆவேசம் - ஆத்திரம்

ஆவேசம் - ஆத்திரம்

அதனால், அதற்கு மேல் காரை நகர்த்தி செல்ல முடியாமல், அங்கேயே வசமாக சிக்கிவிட்டார் அஸ்வதி.. அதற்குள் வாகன ஓட்டிகள் விரைந்து வந்து, காரை மடக்கிப்பிடித்தனர்.. காருக்குள் நடிகை இருப்பதை அறிந்ததுமே, கூட்டம் கூடிவிட்டது.. நடிகை அஸ்வதியையும், அவரது காதலனையும் சுற்றி சுற்றி வீடியோ எடுக்க ஆரம்பித்துவிட்டனர் ஒருசிலர்.. இதை பார்த்து ஆத்திரம் அடைந்த அஸ்வதி, காருக்குள் இருந்து கீழே இறங்கி வந்து, வீடியோ எடுத்தவர்களிடம் வாக்குவாதம் செய்தார்.

 கஸ்டமர்கள்

கஸ்டமர்கள்

இதனிடையே போலீசாருக்கு தகவல் சென்றிருப்பதை அறிந்ததும், அவர்கள் வருவதற்குள் அங்கிருந்து தப்பித்து செல்வதற்காக இருவரும் வேகமாக ஓட ஆரம்பித்தனர்.. அந்த பகுதியில் இருந்த ஒரு கடைக்குள், ஏதோ பொருட்களை வாங்க வந்த வாடிக்கையாளர் போல பதுங்கி கொண்டுவிட்டனர்.. ஆனால் அதற்குள்ளாகவே திருக்காக்கரை போலீசார் வந்துவிட்டனர்.. இருவரையும் கடைக்குள் நுழைந்து மடக்கிப்பிடித்து அழைத்து சென்றனர்... விசாரணையும் ஆரம்பமானது.. 2 பேருமே போதையில் இருந்தது தெரியவந்தது.. எனவே, இருவருக்கும் பரிசோதனை நடத்தி அதை உறுதிப்படுத்தியது போலீஸ்.

சேஸிங்

சேஸிங்

பிறகு, அஸ்வதி, அவரது காதலன் இருவரையும் கைது செய்து கோரட்டில் ஆஜர்படுத்தி உள்ளே தள்ளி உள்ளனர்.. இப்படி போலீசில் 2வது முறையாக சிக்கி உள்ளார் அஸ்வதி.. பாலியல் தொழில் செய்யும்போதே, போதை பொருள் இவருக்கு எப்படி கிடைத்தது? சப்ளை செய்வது யார் என்ற விசாரணை நடந்தது.. இப்போதும் அது தொடர்பான விசாரணையை அஸ்வதியுடம் மேற்கொண்டுள்ளனர்.. நடுரோட்டில் அஸ்வதி காரை சேஸ் செய்து பிடித்த நிகழ்வு, பெரும் பரபரப்பை கேரளாவில் ஏற்படுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+