காருக்குள் அசிங்கம்! 9 மாத கர்ப்ப வயிற்றில் உதைத்து! நடிகர் முகேஷ் முன்னாள் மனைவி சரிதா பேட்டி
திருவனந்தபுரம்: கேரள திரைப்பட உலகில் நடிகைகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து, ஹேமா கமிட்டி அறிக்கையை வெளியிட்டிருந்தது. இந்த விவகாரம் பெரியதாக வெடித்துள்ள நிலையில், பாலியல் புகாரில் சிக்கியுள்ள நடிகர் முகேஷ் குறித்து, அவரது முன்னாள் மனைவி சரிதா கூறியுள்ள குற்றச்சாட்டுகள் தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
மலையாள சினிமா துறையில், நடிகைகள் கடுமையான பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்று அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து விசாரிக்க நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. ஹேமா கமிட்டி, நடிகைகள் எதிர்கொள்ளும் பாலியல் தொந்தரவுகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தி, இதனை அறிக்கையாக கடந்த 2017ம் ஆண்டு தயார் செய்தது. இந்த அறிக்கை சமீபத்தில் வெளியாகியுள்ளது.

இதில், நடிகைகள் சினிமாவில் நடிக்க படுக்கைக்கு அழைக்கப்படுகிறார்கள், நிர்வாணமாக நடிக்க கட்டாயப்படுத்தப் படுகிறார்கள், மீறும் பட்சத்தில் அவர்கள் மிரட்டப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக மலையாள சினிமா சில மாஃபியாக்களின் கைகளில் சிக்கியுள்ளது என்பதையும் அறிக்கை தெளிவாக கூறியிருந்தது. கேரள மாநில அரசே இந்த விவகாரம் குறித்து விசாரித்து, தீவிர நடவடிக்கையை எடுக்க களத்தில் இறங்கியுள்ளது.
இதனையடுத்து பல்வேறு நடிகைகள் தாங்கள் எதிர்கொண்ட கசப்பான சம்பவங்கள் குறித்து புகார் அளிக்க தொடங்கியுள்ளனர். இது போன்ற பாலியல் புகாரில் சிக்கியவர்தான் நடிகர் முகேஷ். கேரள சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்து பிரபலமானவர்தான் முகேஷ். இவருக்கும், தமிழ் திரைப்பட நடிகை சரிதாவுக்கும் கடந்த 1988ம் ஆண்டு திருமனம் நடந்தது. ஆனால், அதன் பின்னர் 23 ஆண்டுகள் கழித்து இருவரும் பிரிந்துவிட்டனர்.
இந்த பிரிவுக்கு பின்னர், தான் எதிர்கொண்ட வன்முறை குறித்து நடிகை சரிதா கூறியிருக்கிறார். இப்போது ஹேமா கமிட்டி அறிக்கை மூலம், முகேஷ் பாலியல் புகார்களை எதிர்கொண்டுள்ள நிலையில், சரிதாவின் பேட்டியும் தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
சரிதா கூறுகையில், "முகேஷ் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தார். சினிமாவில் பெண்களை கொடுமைப்படுத்தும் காட்சிகளை பார்த்திருக்கிறேன். ஆனால் நிஜத்தில் அப்படி எனக்கு நடக்கும் என கனவில் கூட நினைக்கவில்லை. முகேஷால் நான் அனுபவித்த கொடுமைகள் குறித்து இதுவரை சொன்னதில்லை. முதன்முறையாக சொல்கிறேன்.
நான் கர்ப்பமாக இருந்த சமயத்தில் ஓணம் பண்டிகை வந்தது. பண்டிகை என்றாலே எல்லோரும் சந்தோஷமாக தானே இருப்போம். ஆனால் அப்போ கூட முகேஷ் என்னுடன் சண்டை போட்டு என் வயிற்றிலேயே எட்டி உதைத்தார். அப்போது வலியால் நான் கீழே விழுந்து கதறி அழுதேன். அதைப்பார்த்து நீதான் நல்ல நடிகையாச்சே நல்லா நடிக்கிறாய் என்று சொல்லி கொக்கரித்தார்.
நான் கர்ப்பமாக இருந்த 9வது மாதத்திலும் ஒரு சம்பவம் நடந்தது. நானும் அவரும் இரவு உணவுக்காக வெளியில் செல்ல திட்டமிட்டிருந்தோம். வீட்டிலிருந்து வெளியே வந்த என்னை அவர் காருக்குள் ஏறவிடவில்லை. என்னை வெறுப்பேற்ற வேண்டும் என்று.. காரை முன்னும் பின்னும் நகர்த்தி அதில் ஏற விடாமல் செய்தார். ஒரு கட்டத்தில் என்னால் அழுகையை தாங்க முடியவில்லை.
மறுசமயம் ஒருநாள் இரவில் குடித்துவிட்டு வீட்டுக்கு தாமதமாக வந்தார். ஏன் லேட்டா வந்தீங்கனு கேட்டேன். அதற்கு என் தலைமுடியை பிடித்து தரையில் தள்ளிவிட்டு அடித்தார். அதன்பின்னர் அவர் கொடுமை தாங்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறினேன்.
இந்த கொடுமையெல்லாம் அவர் தந்தையின் கண் முன்னேயே நடத்தது. அவரது தந்தை என்னை தேடி ஒருநாள் என் வீட்டிற்கு வந்திருந்தார். முகேஷின் நடவடிக்கைகள் சரியில்லை என்று கூறி, என்னிடம் மன்னிப்பு கேட்டார். மேலும் இது தொடர்பாக வெளியில் தெரிய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டு என்னிடம் சத்தியமும் வாங்கிவிட்டார். அவர் இப்போது உயிருடன் இல்லை. எனவே இந்த விஷயத்தை வெளிப்படையாக கூறுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications