முதல்வர் அதிரடி.. சபரிமலை ஐயப்பன் கோவிலில் தினசரி 25,000 பக்தர்களுக்கு அனுமதி.. வந்தது அறிவிப்பு
சபரிமலையில் 25 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று பினராயி விஜயன் அறிவித்துள்ளார்
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலில் தினசரி 25,000 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு வருகிறது.. எனினும், கட்டுப்பாடுகள் பல நடைமுறையில் உள்ளது.
அந்த வகையில், சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.. இதனால் வருடா வருடம் பக்தர்கள் செல்வது போல கடந்த முறை செல்ல முடியாத சூழலும் உருவானது.

சபரிமலை
கொரோனா பரவல் காரணமாக சபரிமலை அய்யப்பன் கோயிலில் தினசரி 2,000 பக்தர்களுக்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் 3,000 பக்தர்களுக்கும், மகர விளக்கு தரிசனத்துக்காக 5,000 பக்தர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு வந்தது... கடந்த சில மாதங்களாக மாதாந்திர பூஜைகளின்போது தினசரி 15,000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

பக்தர்கள்
இந்நிலையில், சபரிமலை அய்யப்பன் கோயிலில் மண்டல பூஜை, மகர விளக்கு ஜோதி விழா அடுத்த மாதம் 16ம் தேதி தொடங்கவுள்ளது. இதையொட்டி பக்தர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய வசதிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது... அப்போதுதான் ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்வதற்கு தினமும் 25,000 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தரிசனம்
இது தொடர்பாக பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: "மண்டல கால பூஜையின்போது, தரிசனத்துக்காக தினந்தோறும் 25,000 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும்... தேவைப்பட்டால் வரும் நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.. ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படும்.

தடுப்பூசிகள்
கோயிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக 2 டோஸ்களை செலுத்தியதற்கான சர்ட்டிபிகேட் அல்லது கொரோனா ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சர்ட்டிபிகேட்டை வைத்திருக்க வேண்டும்.. 10 வயதுக்குட்பட்ட மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட பெண் பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள்... பக்தர்கள் கொண்டு செல்லும் நெய், சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பிரசாதமாக வழங்கப்படும்.

பம்பை நதி
தரிசனம் முடிந்த பிறகு, சன்னிதானத்தில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை, அதனால், பக்தர்கள் பம்பைக்கு திரும்பிவிட வேண்டும்.. எருமேலியில் இருந்து பெருவழிப்பாதையில் நடந்து சபரிமலை வர அனுமதி கிடையாது.. கடந்த வருடம் பம்பை நதியில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டாலும், நதியோரம் ஷவர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. ஆனால், இந்த முறை பம்பை நதியில் நீராட பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications