திடீரென கேரளாவிலும் பரவும் ஆப்ரிக்க பன்றி காய்ச்சல்.. உத்தரப் பிரதேசத்திலும் பாதிப்பு.. ஆபத்தானதா?
திருவனந்தபுரம்: கேரளாவின் வயநாடு மாவட்டத்தின் மனந்தவாடி கிராமத்தில் உள்ள பன்றி வளர்ப்பு பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு விலங்கு நோய்களுக்கான தேசிய நிறுவனம் இதை உறுதிசெய்துள்ளது. இதனால் அங்கு வளர்க்கப்படும் பன்றிகள் அனைத்தையும் கொல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்த பன்றி வளர்ப்பு பண்ணையில் இருந்த பன்றிகள் தொடர்ந்து அதிக அளவில் உயிரிழந்தது. இதனையடுத்து உயிரிழந்த பன்றியின் உயிரி மாதிரிகள் போபாலில் உள்ள விலங்கு நோய்களுக்கான தேசிய நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. பரிசோதனை முடிவுகளில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலால்தான் பன்றிகள் உயிரிழந்துள்ளது உறுதிசெய்யப்பட்டது.
தொற்று பாதிப்பு பரவாமல் இருக்க அருகில் உள்ள மற்ற பன்றி பண்ணையில் உள்ள பன்றிகளை கொல்ல வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தொற்று பரவாமல் இருக்க போதிய நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் குரங்கம்மை நோய் தொற்று குறித்த அச்சம் மாநிலம் முழுவதும் ஆக்கிரமித்திருந்தது. அதேபோல 2 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்திலும் பாதிப்பு
கேரளாவை போலவே உத்தரப் பிரதேச மாநிலத்திலும் இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று (ஜூலை 21) இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் இணை இயக்குநர் டாக்டர் பி.சிங் இதை உறுதி செய்துள்ளார். பரேலி மாவட்டத்தில் உள்ள நவாப்கஞ்ச் கிராமத்தில் அனில் குமார் என்பவருக்கு சொந்தமான பன்றி ஒன்று உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தது.
உயிரிழப்பதற்கு முன்னர் அந்த பன்றி உணவையும், தண்ணீரையும் எடுத்துக்கொள்ளவில்லை. இதனையடுத்து பன்றியின் உயிரி மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. பரிசோதனை முடிவில் பன்றிக்கு ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சுற்றுப்புற கிரமங்கள் மற்றும் மாவட்டத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல மருத்துவக்குழு ஒன்று அனில் குமாரின் கிராமத்திற்கு சென்று மற்ற பன்றிகள் ஏதேனும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து வருகிறது.
இந்த தொற்று மனிதர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என்றாலும், விலங்கு பண்ணைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்ற பண்ணைகளில் தொற்றை எளிதாக பரப்பலாம் என்றும் சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். தற்போது உயிரிழந்த பன்றி இருந்த இடத்திலிருந்து சுமார் 1 கி.மீ தொலைவுக்கு பாதிப்பு பரவி இருக்கலாம் என்றும் அதிகாரிகள் கணித்துள்ளனர். இந்த தொற்று காரணமாக லக்னோ உள்ளிட்ட பகுதிகளில் பன்றி இறைச்சி விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மிசோரம்
கேரளா, உத்தரப் பிரதேசத்தைத் தொடர்ந்து தற்போது மிசோரத்திலும் இந்த ஆப்ரிக்க பன்றி காய்ச்சல் குறித்த அச்சம் மேலெழுந்துள்ளது. மிசோரத்தின் சாம்பை மாவட்டத்தில் உள்ள லீசென்சோ கிராமத்தின் வனப்பகுதியில் மூன்று காட்டுப் பன்றிகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளன. உடலில் வேட்டையாடப்பட்டதற்கான எந்த காயமும் இல்லாத நிலையில் பன்றிகள் இறந்துள்ளதால் ஆப்ரிக்க பன்றி காய்ச்சல் பாதிப்பு காரணமாக இவை உயிரிழந்திருக்குமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மியான்மரின் எல்லை பகுதியில் உள்ள இந்த கிராமத்தில் ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் பாதிப்பு எப்படி ஏற்பட்டிருக்கும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் குழம்பிப்போயுள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற மாநில கால்நடை மருத்துவ அதிகாரிகள் உயிரிழந்த பன்றியை உடற்கூறாய்வு செய்து உயிரி மாதிரிகளை சேகரித்துள்ளனர்.

பின்னணி
கடந்த செவ்வாய்க் கிழமையன்று 2 பெண் காட்டுப்பன்றியும் ஒரு குட்டி பன்றியையும் கிராமத்திலிருந்து 6 கிமீ தொலைவில் உள்ள வனப்பகுதியில் இறந்துகிடப்பதாக அந்த ஊர் மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். வனத்துறையினர் கால்நடை அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததன் பேரில் அதிகாரிகள் பன்றியை உடற்கூறாய்வு செய்தனர். பன்றிகள் மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறிய அவர்கள், சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்படும் என்று கூறியுள்ளனர். இதேபோல மாநிலத்தின் மற்றொரு வனப்பகுதியிலும் சில நாட்களுக்கு முன்னர் பன்றிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளன.
Recommended Video

தொடரும் பாதிப்புகள்
கடந்த இரு தினங்களில் மட்டும் மிசோரத்தில் உள்ள பன்றி வளர்ப்பு மையங்களில் சுமார் 267 பன்றிகள் இந்த ஆப்ரிக்க பன்றி காய்ச்சலால் உயிரிழந்தன. இது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது மாநில கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடைத் துறை வெளியிட்ட தரவுகளின்படி கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து தற்போது வரை ஆப்ரிக்க பன்றி காய்ச்சல் தொற்றால் சுமார் 8,539 பன்றிகள் உயிரிழந்துள்ளன.
மொத்தமுள்ள 11 மாவட்டங்களில் 10 மாவடங்களும் அதில் உள்ள 119 கிராமங்களும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே 8,539 பன்றிகள் உயிரிழந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 7,018 பன்றிகள் கொல்லப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் 33,417 பன்றிகள் இந்த தொற்றால் உயிரிழந்துள்ளன. இதனால் சுமார் ரூ.60.82 கோடி பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்?












Click it and Unblock the Notifications