ஹேமா கமிட்டி அறிக்கை.. வெளிப்படையாக பேச தொடங்கிய நடிகைகள்! சிக்கலில் மோகன்லால்
திருவனந்தபுரம்: மலையாள திரையுலகில் நிகழும் பாலியல் சுரண்டல் குறித்து ஆய்வு செய்து, நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கையை தொடர்ந்து நடிகைகள் பலரும், தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை குற்றச்சாட்டுகளாக முன்வைத்து வருகின்றனர். இது, மலையாள நடிகர்கள் சங்கத்தின் தலைவர் மோகன்லாலுக்கு நெருக்கடி அதிகரித்திருக்கிறது.
மலையாள சினிமாக்கள் சமீப காலமாக தேசிய அளவில் பெரும் கவனம் பெற்று வருகிறது. ஆனால் இந்த சினிமா துறையில், நடிகைகள் கடுமையான பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்று அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து விசாரிக்க நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. ஹேமா கமிட்டி, நடிகைகள் எதிர்கொள்ளும் பாலியல் தொந்தரவுகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தி, இதனை அறிக்கையாக கடந்த 2017ம் ஆண்டு தயார் செய்தது.

ஆனால், இந்த அறிக்கை வெளியானால் எங்கு தங்களுடைய பெயர் வெளி வந்துவிடுமோ என்று பயந்து, திரைத்துறையில் உள்ள பெரும் புள்ளிகள், நீதிமன்றத்தை அணுகி, அறிக்கையை வெளியிடாமல் பார்த்துக்கொண்டனர். ஆனால், சமீபத்தில் நீதிமன்றம் அறிக்கையை வெளியிட அனுமதி அளித்தது. இதனையடுத்து கடந்த 19ம் தேதி அறிக்கை வெளியானது.
இதில், நடிகைகள் சினிமாவில் நடிக்க படுக்கைக்கு அழைக்கப்படுகிறார்கள், நிர்வாணமாக நடிக்க கட்டாயப்படுத்தப் படுகிறார்கள், மீறும் பட்சத்தில் அவர்கள் மிரட்டப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக மலையாள சினிமா சில மாஃபியாக்களின் கைகளில் சிக்கியுள்ளது என்பதையும் அறிக்கை தெளிவாக கூறியிருந்தது. கேரள மாநில அரசே இந்த விவகாரம் குறித்து விசாரித்து, தீவிர நடவடிக்கையை எடுக்க களத்தில் இறங்கியுள்ளது.
இதனையடுத்து பல்வேறு நடிகைகள் தாங்கள் எதிர்கொண்ட கசப்பான சம்பவங்கள் குறித்து வெளிப்படையாக பேச தொடங்கியுள்ளனர். குறிப்பாக நடிகை ரேவதி சம்பத், தான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது குறித்து வெளிப்படையாக பேசியிருந்தது, மலையாள சினிமா உலகில் பெரும் பூகம்பத்தை கிளப்பியிருக்கிறது.
அதாவது நடிகரும், மலையாள நடிகர்கள் சங்கத்தின் (அம்மா) பொதுச்செயலாளருமான சித்திக் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று கூறியிருந்தார். அதேபோல மற்றொரு நடிகர் ரியாஸ் கானும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டையடுத்து, பொதுச்செயலாளர் பதவியை சித்திக் ராஜினாமா செய்தார்.
மறுபுறும் பெங்காலி நடிகையான ஸ்ரீலேகா மித்ரா, கலாச்சித்ரா அகாதெமியின் தலைவரும், பிரபல மலையாள சினிமா இயக்குநருமான ரஞ்சித் மீது பாலியல் புகாரை எழுப்பினார். இதனை தொடர்ந்து ரஞ்சித்தும் ராஜினாமா செய்தார். இப்படி பல முக்கிய நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் மீது, நடிகைகள் தொடர்ந்து புகார்களை எழுப்பி வருகின்றனர்.
இது மோகன்லாலுக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மோகன்லால் தற்போது மலையாள நடிகர்கள் சங்க தலைவராக இருக்கிறார். இதன் பொதுச் செயலாளர் நடிகைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது இவருக்கு தெரியாதா? அல்லது தெரிந்தும் நடிகர்களை இவர் காப்பாற்றுகிறாரா? அப்படி தெரியவில்லையெனில், சக நடிகைகள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்கள் கூட தெரியாமல் எதற்காக சங்க தலைவராக இருக்கிறார்? என்று கேள்வி எழுந்திருக்கிறது.
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications