கவனமா இருங்க.. அது இங்கயும் வந்துருச்சு! மாநிலங்களுக்கு பறந்த “அலர்ட்” கேரளா விரைந்த மத்திய குழு
திருவனந்தபுரம்: இந்தியாவில் முதல் முறையாக கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்துக்கு மத்திய அரசின் குழு விரைந்து இருக்கிறது. அனைத்து மாநிலங்களும் தயாராக இருக்க கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
Recommended Video
குரங்கம்மை நோய் உலகம் முழுவதும் பல நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவிலும் கடந்த சில மாதங்களாக குரங்கம்மை தொற்று குறித்து மத்திய மற்றும் அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சகங்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தன.

கேரளாவில் பாதிப்பு
இதுவரை இந்தியாவில் குரங்கு அம்மை நோயால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத நிலையில், தற்போது கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்து இருக்கிறார். கடந்த 12 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த நபருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என அவர் கூறி இருக்கிறார்.

11 பேரிடம் பரிசோதனை
குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட நபரின் உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவித்த அமைச்சர், அவருடன் தொடர்பில் இருந்த 11 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர் என்றார். கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு ஒருவருக்கு கண்டறியப்பட்டு உள்ளதை தொடர்ந்து அம்மாநிலத்துக்கு மத்திய சுகாதாரத்துறை குழு விரைந்து இருக்கிறது.

மத்திய குழு
குரங்கு அம்மை தொடர்பான வழிகாட்டுதலை வழங்கும் அந்த குழு, குரங்கு அம்மை தடுப்பில் கேரள அரசுடன் இணைந்து பணியாற்றும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இதற்கிடையே குரங்கு அம்மை தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் வழிகாட்டு நெறிகளுடன் கூடிய கடிதத்தை மத்திய சுகாதாரத்துறை அனுப்பி வைத்து இருக்கிறது. அந்த கடிதத்தில், குரங்கு அம்மை பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளை பரிசோதனை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

மாநிலங்களுக்கு கடிதம்
குரங்கு அம்மை பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நபர்களை கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், நோய்க்கான அறிகுறி இருந்தால் இணை நோய் இருப்பவர்கள் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் குரங்கு அம்மை நோய்க்கு தேவையான சிகிச்சைகளை வழங்குவதற்கான மருத்துவ கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications