அலறவிடும் நிபா வைரஸ்.. ஒரு வாரத்துக்கு கோழிகோட்டில் பள்ளிகள் அனைத்தும் மூடல்! கேரளாவில் என்ன நிலை
திருவனந்தபுரம்: கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள கல்வி நிறுவனங்கள் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நமது அண்டை மாநிலமான கேரளாவில் மீண்டும் இப்போது நிபா வைரஸ் பாதிப்பு மீண்டும் ஏற்பட்டுள்ளது. கொரோனாவை காட்டிலும் நிபா வைரஸ் பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் அதிகம் என்பதால் இது அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொதுவாகக் கேரளாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்வோரும் திரும்புவோரும் அதிகம். கொரோனா கூட இந்தியாவில் கேரளாவில் தான் முதலில் கண்டறியப்பட்டது.ந இதற்கிடையே இப்போது மீண்டும் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
முன்னதாக சமீபத்தில் கேரளாவில் இரண்டு பேர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தனர். கடந்த மாதம் 30ஆம் தேதி ஒருவர் உயிரிழந்த நிலையில், அதன் பிறகு இம்மாத தொடக்கத்தில் மற்றொருவர் உயிரிழந்தார். அவர்களுக்குக் காய்ச்சல் மற்றும் நிமோனியா பாதிப்பு இருந்துள்ளது. மேலும், அவர்களின் உடலில் நிபா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள் இருந்துள்ளதும்.. இதையடுத்து அவர்களிடம் இருந்த சேகரிக்கப்பட்ட மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டன.
மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்தோர் தனிமைப்படுத்தப்பட்டன. இதுவரை அங்கே மொத்தம் 6 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. நிபா தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதனால் நிபா வைரசால் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்த 800க்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் உள்ளனர். மேலும், ஏற்கனவே தமிழ்நாடு எல்லையிலும் கண்காணிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதுவரை அங்கே 6 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கே பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவல் காரணமாக, அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரை அனைத்து கல்வி நிறுவனங்களும் ஒரு வாரம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், டியூஷன் சென்டர்கள் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications