கேரளாவில் திடீரென பரவ தொடங்கிய.. "ஜிக்கா வைரஸ்"..கர்ப்பிணி உட்பட 10 பேருக்கு பாசிட்டிவ்.. சிகிச்சை!
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்னும் கொரோனா இரண்டாம் அலை முழுமையாக குறையாத நிலையில், அங்கு புதிதாக ஜிக்கா வைரஸ் தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளது. 10 பேருக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
கேரளாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு இன்னும் குறையவில்லை. அங்கு தினசரி கேஸ்கள் 13 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. ஆக்டிவ் கேஸ்கள் 1,10,137 ஆக உள்ளது.
கேரளாவில் இன்னும் இரண்டாம் அலை பாதிப்பு குறையாத நிலையில் அங்கு மூன்றாம் அலை வேகமாக ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இந்த நிலையில் அங்கு ஜிக்கா வைரஸ் தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளது.

பாதிப்பு
கேரளாவில் 10 பேருக்கு திருவனந்தபுரத்தில் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. காய்ச்சல் ஏற்பட்ட 19 பேரின் மாதிரிகளை தேசிய வைரஸ் ஆராய்ச்சி மையத்திற்கு சோதனைக்கு அனுப்பியதில்,10 பேருக்கு ஜிக்கா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 13 பேருக்கு இந்த பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

திருவனந்தபுரம்
இந்த 10 பேரில் பலர் சுகாதார பணியாளர்கள், மருத்துவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் நேற்று குழந்தை பிரசவித்த பெண் ஒருவருக்கும் ஜிக்கா வைரஸ் தாக்கி உள்ளது. காய்ச்சலோடு அனுமதிக்கப்பட்ட இவருக்கு நேற்று குழந்தை பிறந்தது. இந்த நிலையில் இவரின் ரத்த மாதிரியை சோதனை செய்ததில் ஜிக்கா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

நன்றாக உள்ளார்
அந்த பெண்ணின் உடல்நிலை தற்போது இயல்பு நிலையில் இருக்கிறது. இவருக்கு தமிழ்நாடு எல்லைக்கு அருகில் வசித்து வருகிறார். ஜிக்கா வைரஸ் கிட்டத்தட்ட டெங்கு வைரஸ் போன்றதாகும். இந்த வைரஸ் கொசுக்கள் மூலம் பரவ கூடியது. உடலில் தடிப்புகள், காய்ச்சல், தோல் சிவப்பது. எலும்பு வலி ஆகியவை ஜிக்கா வைரஸ் ஏற்பட்டால் உண்டாகும்.

உகாண்டா
உகாண்டாவில் 1947ல் குரங்குகளுக்கு இந்த வைரஸ் தாக்கியது. 1952ல் பின் மனிதர்களுக்கு தாக்கியது. பின்னர் பல்வேறு ஆப்ரிக்க, ஆசிய நாடுகளுக்கு கொசுக்கள் மூலம் பரவியது. இந்த ஜிக்கா வைரஸ் தாக்கும் பலர் அறிகுறியே இன்றி குணமடைவது உண்டு. 2-7 நாட்கள் வரை இதனால் சிலருக்கு காய்ச்சல் நீடிக்கும்.

என்ன கொசு
Aedes aegypti வகை கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் பரவும். இதே வகை கொசுக்கள்தான் டெங்கு, சிக்கன்குன்யா, மஞ்சள் காமாலை போன்றவற்றையும் ஏற்படுத்தும். இந்த வைரஸ் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாது என்றாலும் கர்ப்பிணிகள் இதனால் பாதிக்கப்பட்டால் கருவில் உள்ள குழந்தைகள் பாதிப்படைய வாய்ப்புள்ளது.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications