இந்தியாவில் இப்படி ஒரு கிராமமா.. ஆனந்த் மகிந்திராவை அசர வைத்த தென் இந்திய பகுதி எது தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா சமீபத்தில், கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள கடமாக்குடி கிராமத்திற்கு சென்ற ஆனந்த் மகிந்திரா, பூமியிலேயே மிக அழகான கிராமம் என்று சொல்வதற்கு உண்மையாகவே தகுதியான இடம்தானா என்பதை பார்க்க காரில் சென்றேன்.

அங்குள்ள இயற்கை காட்சிகள் தன்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டதாக ஆனந்த் மகிந்திரா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். கேரளாவின் தான் கண்டு ரசித்த இடங்களின் புகைப்படங்களையும் ஆனந்த் மகிந்திரா அதில் பதிவிட்டுள்ளார்.

நாடறிந்த தொழிலபதிர்களில் ஒருவர் ஆனந்த் மகிந்திரா. வாகன உற்பத்தி, ஐடி துறை, வங்கி என பல்வேறு துறைகளில் கோலோச்சி வரும் மகிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மகிந்திரா, சமூக வலைத்தளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருக்க கூடியவர்.

anand-mahindra-praises-kerala-village-for-its-stunning-cleanliness-and-beauty

சுத்தமான கிராமம் இதுதான்

நாட்டின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் பிசியான தொழிலதிபராக இருந்தாலும் கூட தனக்கு கிடைக்கும் நேரத்தில் சோஷியல் மீடியாக்களிலும் அடிக்கடி பதிவுகளை பதிவிட்டு வருவதை பார்க்க முடியும். தனக்கு பிடித்த மோடிவேஷன் பதிவுகள், நகைச்சுவை துணுக்குகள், தான் கண்டு வியந்த நபர்கள், இடங்களை பற்றிய பதிவுகள் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.

ஆனந்த் மகிந்திராவை அவரது எக்ஸ் தளத்தில் பல லட்சக்கணக்கானவர்கள் பாலோ செய்து வருகிறார்கள். இதனால், ஆனந்த் மகிந்திராவின் பதிவுகள் இணையத்தில் அவ்வப்போது வைரல் டிரெண்ட் ஆகும். அந்த வகையில்தான், உலகிலேயே நான் பார்த்த சுத்தமான கிராமம் இதுதான் என்று தென்னிந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தை ஆனந்த் மகிந்திரா பதிவிட்டுள்ளார்.

கடமாக்குடிக்கு சென்றேன்

அதோடு, தன்னை அந்த கிராமத்தின் இயற்கை அழகு மெய்மறக்க வைத்ததாகவும் பதிவிட்டுள்ளார். ஆனந்த் மகிந்திரா தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:- மகிந்திரா குழுமத்தின் M101 லீடர்ஷிப் கூட்டம் கொச்சியில் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை நான் கடமாக்குடிக்கு சென்றேன். பூமியிலேயே மிக அழகான கிராமம் என்ற பெருமைக்கு தகுதியான இடமா என்பதை பார்க்க சென்றேன். சுத்தமான மற்றும் தூய்மையான இடம்!

மெய்சிலிர்க்க வைக்கிறது

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நீண்டு கிடக்கும் அமைதியான கயல்கள் (பேக்வாட்டர்), நீர்பரப்பு முழுக்க ரசிக்க வைக்கும் காட்சிகள், கொக்குகள் மற்றும் கருப்பு நீர்க்காக்கைகள், தங்களைத் தாங்களே சுத்தம் செய்து வெயிலில் காயும் அழகு என மெய்சிலிர்க்க வைக்கிறது. சில நிலப்பரப்புகள் உங்களை கவருவது மட்டும் இன்றி உங்களை புதுப்பிக்க வைக்கும்" என்று வியந்து பதிவிட்டுள்ளார்.

நெட்டிசன்கள் கருத்து

தனது மகிந்திரா கார் நிறுவனத்தின் தார் காரில், சென்ற ஆனந்த் மகிந்திரா அது தொடர்பான காட்சிகளையும் பதிவிட்டுள்ளார். ஆனந்த் மகிந்திராவின் இந்த பதிவுக்கு ஆமோதித்து நெட்டிசன்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட பதிவில், கடவுள்தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளா உண்மையாகவே பூலோக சொர்க்கம்தான். சுற்றிலும் இயற்கை சூழ்ந்த பகுதி, சுத்தமான காற்று, நீர் நிலைகள் என நம்மை மெய் மறக்க வைத்துவிடும்" என்று பதிவிட்டுள்ளார். இன்னொரு நெட்டிசன், 'உலகிலேயே மிக சுத்தமான கிராமத்திற்கு தகுதியானது தான் இந்த இடம். பார்க்கவே மிகவும் கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும் இடமாக இது இருக்கும்" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+