‛‛ஏம்ப்பா குமாரு இவரு யாரு?’’.. பாஜகவின் அடுத்த ‛டார்க்கெட்’.. கேரளா போன அண்ணாமலை.. மேட்டர் என்ன?
திருவனந்தபுரம்: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் மேலிடம் கூறியதை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேராக கேரளாவின் கொல்லத்துக்கு விரைந்துள்ளார். வரும் 26ம் தேதி கேரளாவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால் அண்ணாமலை அங்கு சென்று பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 19ம் தேதி லோக்சபா தேர்தல் முடிவடைந்தது. அன்றைய தினம் மொத்தமுள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது. வரும் ஜுன் 4ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் போட்டியிட்டுள்ளார். கோவையில் கட்டாயம் வெற்றி பெறுவேன் என்று அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இருப்பினும் மக்களின் தீர்ப்பு என்னவாகும் இருக்கும்? என்பதை அறிய நாம் ஜுன் 4ம் தேதி வரை காத்திருக்க வேண்டும். இந்நிலைய் தான் தமிழகத்தில் லோக்சபா தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் அண்ணாமலை பிற மாநிலங்களில் பிரசாரம் செய்ய தொடங்கி உள்ளார். அதன்படி அவர் இன்று கேரளாவில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். கொல்லம் லோக்சபா தொகுதியில் பாஜக வேட்பாளராக கிருஷ்ணகுமார் போட்டியிடுகிறார்.
இதையடுத்து இன்று அண்ணாமலை பிரசார வாகனத்தில் கிருஷ்ணகுமாருடன் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அண்ணாமலை பேசியதாவது: கேரளாவில் ஆளும் இடதுசாரிகளும், காங்கிரஸ் கட்சிகளும் ‛இந்தியா' கூட்டணியில் இருந்தாலும் தனித்தனியாக போட்டியிடுகின்றனர். இந்த 2 கட்சிகளை பொறுத்தவரை கேரளா பார்டரை தாண்டிவிட்டால் நண்பர்கள். கேரளா பார்டருக்குள் நண்பர்கள் இல்லை என்று பொய் சொல்லி கொண்டு இருக்கிறார்கள். இந்த ஒரு காரணத்துக்காக நாட்டை அவர்களின் கைகளில் கொடுக்ககூடாது அன்பு சகோதர, சகோதரிகளே.
2004ல் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் ஒன்றாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் ஒன்றாக இருந்தனர். தேர்தல் நடந்து முடிந்து ரிசல்ட் வந்து 10 நாட்கள் ஆனபோதும் யார் பிரதமர்? என்பது தெரியவில்லை. 10 நாட்களாக நம் மக்கள் பிரதமர் யார்? யார்? என்று கேட்டனர். 10 நாள் கழித்து 10 பேர் வந்து நின்றனர். லாலு பிரசாத் யாதவ், கம்யூனிஸ்ட் கட்சியினர், பரூக் அப்துல்லா, கருணாநிதி, பிரகாஷ் காரத் உள்பட 10 பேர் நின்றனர்.
அப்போது பின்னால் திரும்பி இவர் தான் பிரதமர் என்று ஒருவரை கூறினார்கள். இந்த ‛காலா' படத்துல நடிகர் ரஜினி ஒரு வசனம் சொல்வார். ‛ஏம்ப்பா குமாரு இவரு யாரு?' என சொல்வார். அப்படி மன்மோகன் சிங் யாரென்று 90 சதவீத மக்களுக்கு தெரியவில்லை. 10 பேரை நிற்க வைத்து மன்மோகன் சிங்கை தேர்வு செய்தனர். அதன் விளைவு என்னவென்றால் இந்த நாடு குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் பின்நோக்கி சென்றது.
ரூ.12 லட்சம் கோடி ஊழல், ஒவ்வொரு அமைச்சரும் கூட எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்று அமைச்சர்களாக இருந்தனர். கேரளா மக்களிடம் நாங்கள் ஒன்றை கேட்கிறோம். மீண்டும் 2004ல் போன்ற நிலை ஏற்பட வேண்டும் என நினைக்கிறீர்களா?. ‛இந்தியா' கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? என்றால் தெரியாது. ‛இந்தியா' கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக யாருக்கு தகுதி இருக்கிறது? என்றாலும் தெரியாது.
ராகுல் காந்தி பிரதமரா? என்றால் இங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சியே ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படியென்றால் இந்திய மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள். அதனால் 2024 ஜுன் 4ம் தேதி மீண்டும் இதுபோன்று நடக்கக்கூடாது. இப்போது ஒரெயொரு பிரதமராகவும், பிரதமர் வேட்பாளராகவும் நரேந்திர மோடி மட்டுமே உள்ளார். வலிமையாக, பலமாக இந்த நாட்டை வழிநடத்தக்கூடிய தலைவராக நரேந்திர மோடி மட்டுமே இருக்கிறார். நரேந்திர மோடி தான் 3வது முறையாக பிரதமராக வர வேண்டும் என்று நாட்டின் அனைத்து பக்கங்களிலும் உள்ள மக்கள் முடிவு செய்துள்ளார்கள்.
இந்தியா கூட்டணி தலைவர்கள் செல்வாக்கு மற்றும் தங்களின் சொத்துகளை பாதுகாக்கவே ஒன்றிணைந்துள்ளனர். மற்றபடி அவர்களிடம் ஒருங்கிணைப்ப எதுவும் இல்லை. சீட்டுக்கட்டை குலுக்கிப்போட்டு தேர்வு செய்வது அல்ல பிரதமர் பதவி. கடந்த சில தேர்தல்களில் கேரளாவில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்து வருகிறது. இந்த முறை நிச்சயம் மக்கள் பாஜக வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பை தருவார்கள். கேரளாவும் கூட 2024ல் நரேந்திர மோடியின் கரத்தை வலுப்படுத்தும். குறிப்பாக கொல்லம் பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் கிருஷ்ணகுமார் உங்களுக்காக குரல் கொடுக்க தயாராக இருக்கிறார். அவருக்கு ஓட்டளிக்க வேண்டும்'' என பேசினார்.
கேரளாவை பொறுத்தமட்டில் மொத்தம் 20 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வரும் 26ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ‛இந்தியா' கூட்டணியில் இருந்தாலும் கூட காங்கிரஸ், கம்யூனிஸ் கட்சிகள் கேரளாவில் தனித்து களமிறங்கி உள்ளன. இதனால் கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி, கம்யூனிஸ்ட் கூட்டணி மற்றும் பாஜக என மும்முனை போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் தான் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேரளா பிரசாரத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை விமர்சனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ரூ.5.07 லட்சம் கோடி கடனில் கேரளா அரசு.. வெள்ளை அறிக்கையில் ‘திடுக்'.. தமிழகத்தை விட குறைவு தான் -
அண்ணாமலை கைகளை பிடித்த அஜித், ரஜினி.. மதுரையில் பரபரக்கும் போஸ்டர்களால் அதிரும் அரசியல் களம்! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா












Click it and Unblock the Notifications