கேரளாவில் மற்றொரு நபருக்கு மங்கி பாக்ஸ்.. உயிருக்கு ஆபத்தானதா.. எப்படி பரவும்? அறிகுறிகள் என்ன
திருவனந்தபுரம்: கொரோனா பாதிப்பே இப்போது தான் குறைந்து வரும் நிலையில், இந்தியாவில் ஏற்பட்டுள்ள குரங்கு அம்மை பாதிப்பு குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
கடந்த இரு ஆண்டுகளாக உலக நாடுகளை அலறவிட்ட கொரோனா பாதிப்பு இப்போது தான் வேக்சின் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் கட்டுக்குள் வந்துள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகளை உலக நாடுகள் மெல்ல நீக்கி வரும் நிலையில், பொதுமக்களும் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர்.
பெருந்தொற்று முடிந்துவிட்டது என மக்கள் நினைத்த நிலையில், இப்போது மீண்டும் மங்கி பாக்ஸ் பாதிப்பு பரவ தொடங்கி உள்ளது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த மங்கி பாக்ஸ் புதுவித நோய்ப் பாதிப்பு இல்லை. ஆப்பிரிக்காவில் இந்த வகை நோய் காணப்படும் என்றாலும் கூட ஆப்பிரிக்காவுக்கு வெளியே இந்த வைரஸ் இந்தளவுக்குப் பரவுவது இதுவே முதல்முறையாகும். இதற்கான காரணம் ஆய்வாளர்களுக்கும் தெளிவாகத் தெரியவில்லை.

முதல் பாதிப்பு
இந்தியாவில் கடந்த வாரம் வரை இந்த மங்கி பாக்ஸ் பாதிப்பு யாருக்கும் உறுதி செய்யப்படாமலேயே இருந்தது. இதற்கிடையே கடந்த வாரம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து கேரளா திரும்பிய ஒருவருக்கு மங்கி பாக்ஸ் உறுதி செய்யப்பட்டது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், வெளிநாட்டில் இருந்து திரும்பும் அனைவருக்கும் மங்கி பாக்ஸ் அறிகுறி இருந்தால் சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டது.

கேரளாவில் மற்றொருவருக்கு உறுதி
இந்நிலையில், கேரளாவில் மேலும் ஒருவருக்குக் குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவின் கன்னூர் மாவட்டத்தில் ஒருவருக்கு மங்கி பாக்ஸ் உறுதி செய்யப்பட்டு உள்ளதாகக் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். 31 வயதான அந்த நபர் துபாய் நாட்டில் இருந்து திரும்பியவர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உறுதி செய்யப்பட்ட மங்கி பாக்ஸ் பாதிப்பு கேஸ்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.

கர்நாடகா வழியாக
கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், கடந்த ஜூலை 13இல் துபாயிலிருந்து கர்நாடகாவில் உள்ள மங்களூர் விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அவருக்கு மங்கி பாக்ஸ் அறிகுறி இருந்ததைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மாதிரிகள் புனே தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில், அங்கு வைரஸ் பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அவர் கண்ணூரில் உள்ள பரியாரம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

குரங்கு அம்மை
ஆர்த்தோபாக்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த வைரசால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. ஏற்கனவே மங்கி பாக்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து வெளியேறும் நீர்த்துளிகள் வழியாகவே இந்த நோய் பரவுகிறது. காய்ச்சல், தசைவலி, கொப்பளங்கள், சளி ஆகியவை இந்த மங்கி பாக்ஸின் பொதுவான அறிகுறிகளாகும்.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications