கேரளா பாலக்காடு சட்டசபை இடைத்தேர்தல்: காங்கிரஸ் வெற்றி! 18,840 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக தோல்வி
திருவனந்தபுரம்: பாலக்காடு சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் மம்கூடதில் 58,389 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளரை விட 18,840 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். செலக்கரா சட்டசபை இடைத்தேர்தலில் சிபிஎம் வேட்பாளர் யூ ஆர் பிரதீப் 64,827 வாக்குகள் பெற்று 12,201 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பாலக்காடில் 5வது சுற்றில் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் முன்னிலை பெற்று இருந்த நிலையில் அடுத்தடுத்த சுற்றுகளில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை பெற்றார். தொடர்ந்து 9வது சுற்று முடிவில் 40126 வாக்குகள் பெற்று முதலிடத்தை தக்க வைத்தார். தொடர்ந்து முன்னிலை வகித்த நிலையில் தற்போது அவர் வெற்றி பெற்றுள்ளார்.

பாலக்காடு: தமிழ்நாட்டு எல்லையில் உள்ளது கேரளாவின் பாலக்காடு சட்டசபை தொகுதி. காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக அறியப்படும் இந்த தொகுதியியில் 2011 முதல் 2021 வரையில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் ஷாபி பரம்பில்தான் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றார். 2024 லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வென்றதால் பாலக்காடு தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொண்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் வடகரா தொகுதியில் சிபிஎம் மூத்த வேட்பாளர் சைலஜா டீச்சரை தோற்கடித்தவர் ஷாபி பரம்பில். தற்போதைய இடைத்தேர்தலில் காங்கிரஸ் முன்னணியின் வேட்பாளராக கேரள காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் ராகுல் மம்கூடதில் களம் காண்கிறார். காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு ஒருங்கிணைப்பாளராக இருந்த சரின், ராகுல் மம்கூடதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
பாலக்காடு சட்டசபை தொகுதி: இதனால் காங்கிரஸில் இருந்து சரின் வெளியேற்றப்பட்டார். இந்த சரின் தான் தற்போது இடதுசாரி முன்னணியின் வேட்பாளர். பாஜக வேட்பாளராக கிருஷ்ணகுமார் களத்தில் உள்ளார். இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து வெற்றி நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
5வது சுற்று நிலவரம்: பாலக்காடு சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்பட்ட நிலையில், தபால் வாக்குகளில் பாஜக முன்னிலை பெற்றது. தொடர்ந்து 5 சுற்று முடிவில் பாஜக வேட்பாளர் சி கிருஷ்ணகுமார் 21,613 வாக்குகள் பெற்று 1,015 வாக்குகள் முன்னிலையில் இருந்தார். காங்கிரஸ் வேட்பாளர் 20,598 வாக்குகள் பெற்று 2 ஆம் இடத்தில் இருந்தார். 3வது இடத்தில் ஆளும் இடதுசாரி வேட்பாளர் வேபாளர் (10,338 வாக்குகள்) இருந்தார்.
9வது சுற்று நிலவரம்: தொடர்ந்து 9வது சுற்று நிலரவரப்படி, காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் மம்கூடதில் 40126 வாக்குகள் பெற்று முதல் இடத்தில் இருந்தார். பாஜக வேட்பாளர் சி கிருஷ்ணகுமார் 29,887 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் இருந்தார். பி சரின் 20685 வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தில் இருந்தார்.
காங்கிரஸ் வெற்றி: தொடர்ந்து 14 வது மற்றும் கடைசி சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் மம்கூடதில் 58,389 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் சி கிருஷ்ணகுமார் 39,549 வாக்குகளை பெற்று 2ம் இடத்தை பிடித்தார். 18,840 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். பி சரின் 37,293 வாக்குகளை பெற்று 3 ஆம் இடத்தை பிடித்தார்.
காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவும் என கருத்துக்கணிப்புகள் கூறப்பட்டுள்ள நிலையில் அதற்கு ஏற்றார் போலவே இருகட்சிகளும் மாறி மாறி முன்னிலையில் வகித்தன. எனினும் இறுதியில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
செலக்கரா சட்டசபை தொகுதி: செலக்கரா சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்த கே ராதாகிருஷ்ணன், ஆலத்தூர் லோக்சபா தொகுதியில் எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. திரிசூர் மாவட்டத்தில் உள்ள செலக்கரா தொகுதியில் பாஜக மற்றும் காங்கிரஸ், ஆளும் சிபிஐ எம் உள்பட 6 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.
சிபிஎம் வேட்பாளர் வெற்றி: இந்த தொகுதியில் சிபிஐ (எம்) கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. சிபிஐ எம் வேட்பாளராக யு ஆர். பிரதீப், காங்கிரஸ் சார்பில் ரம்யா ஹரிதாஸ், பாஜக சார்பில் பாலகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில், செலக்கராவில் பிரதீப் முன்னிலையில் உள்ளார். காங்கிரசின் ரம்யா ஹரிதாஸ் இரண்டாவது இடத்திலும், பாஜகவின் பாலகிருஷ்ணன் மூன்றாவது இடத்திலும் உள்ளார்.
13வது சுற்று: 13வது சுற்று முடிவில், சிபிஎம் வேட்பாளர் யூ ஆர் பிரதீப் 64827 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். காங்கிரஸ் வேட்பாளர் ரம்யா ஹரிதாஸ் 52626 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் இருந்தார். வாக்கு எண்ணிக்கை முடிவில், சிபிஎம் வேட்பாளர் யூ ஆர் பிரதீப் 12,201 வாக்குகள் வித்தியாசத்தில் 64,827 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸின் ரம்யா ஹரிதாஸ் 52,626 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். பாஜகவின் கே பாலகிருஷ்ணன் 33,609 வாக்குகள் பெற்றும் 3 ஆம் இடம்பிடித்தார்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications