ஆட்டோவுல ஏறப் போறீங்களா.. கையைக் கழுவுங்க.. சோப்பு போட்டு கழுவுங்க.. அசத்தும் சேட்டன்.. ஆஹா!
திருவனந்தபுரம்: ஆட்டோவுல ஏற போறீங்களா, அப்போ கையை கழுவுங்க, அதுவும் சோப்பு போட்டு கை கழுவுங்க என திருவனந்தபுரத்தில் ஆட்டோ டிரைவர் கொரோனாவை ஒழிக்க ஒரு சிறு துரும்பாய் செயல்படுகிறார்.
Recommended Video
கொரோனா பாதிப்பு வடஇந்தியாவை போல் தென்னிந்தியாவிலும் பரவலாக பரவி வருகிறது. அதிலும் தென்னிந்தியாவில் கேரளாவில் அதிகமாக பரவியுள்ளது. ஆரம்பக் கட்டத்தில் 3 மாணவர்கள் பூரண குணமடைந்த போதிலும் தற்போது அங்கு நோய் தொற்று பரவி வருகிறது.

இதனால் கேரளா முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநில எல்லை மூடப்பட்டுவிட்டது.
Meanwhile in Kerala 😁@ShashiTharoor @PCvishnunadh pic.twitter.com/aPEhCkCKgj
— Lavanya Ballal | ಲಾವಣ್ಯ ಬಲ್ಲಾಳ್ (@LavanyaBallal) March 22, 2020
இதில் பறவைக் காய்ச்சல் வேறு பரவி இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் மாநில அரசு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு அளித்து வருகிறது.
அதன்படி திருவனந்தபுரத்தில் ஒருவர் ஆட்டோவை கைகாட்டி நிறுத்துகிறார். அப்போது அந்த நபர் ஆட்டோவில் ஏற முற்படுகிறார். உடனே அந்த ஆட்டோக்காரர் அவரிடம் கையை கழுவுமாறு கூறுகிறார். உடனே சோப்பும் தருகிறார். ஆட்டோவில் உள்ள சிறிய கேனில் பொருத்தப்பட்ட குழாயில் கை கழுவுகிறார். பின்னர் ஓட்டுநருக்கு வணக்கம் கூறி உள்ளே ஏறுகிறார்.












Click it and Unblock the Notifications