எகிறி எகிறி உதைத்த கணவர்.. "கருப்பா இருக்கியே, அழகாவே இல்லை".. பரிதாப பெண்.. கடைசியில் பார்த்தால்?
திருவனந்தபுரம்: தாய் - தகப்பன் இல்லாமல் 3 குழந்தைகளும் அழுதபடியே உள்ளனர்.. கேரளாவில் இந்த சம்பவம் துயரத்தை தந்து வருகிறது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே அரூர் பகுதியை சேர்ந்தவர் உண்ணி.. 40 வயதாகிறது.. மனைவி பெயர் நீது.. 33 வயதாகிறது..

கடந்த 2011-ம் வருடம்தான், 2 பேருக்கும் கல்யாணம் நடந்துள்ளது.. இவர்களுக்கு 3 குழந்தைகளும் இருக்கிறார்கள்..
தகராறு: ஆனால், தன்னுடைய மனைவியை தொடர்ந்து சித்ரவதை செய்து வந்திருக்கிறார் உண்ணி.. தேவையில்லாமல் தகராறு செய்வாராம்.. நீது அழகாக இல்லை என்ற சொல்லி, அடித்து உதைப்பாராம்.. இதனால், அழுதுகொண்டே பலமுறை தன்னுடைய அம்மா வீட்டுக்கு வந்துவிடுவாராம் நீத்து.. சிலநாட்கள் கழித்து, மாமியார் வீட்டுக்கு சென்று, மனைவியை சமாதானப்படுத்தி மறுபடியும் வீட்டுக்கு அழைத்து வருவாராம் உண்ணி.. மறுபடியும் அடித்து உதைத்து சித்ரவதை செய்வாராம்.
சமீபகாலமாக இந்த பிரச்சனை மேலும் அதிகமாகிவிட்டதாம்.. உண்ணியின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே போயுள்ளது.. கடந்த சில நாட்களாகவே, நீதுவுக்கு சாப்பிடுவதற்கு உண்ணி எதுவுமே தருவதில்லையாம்.. பட்டினி போட்டு சித்ரவதை செய்திருக்கிறார்..
ஸ்கூல்: இப்போது கோடை விடுமுறை முடிந்துள்ள நிலையில், குழந்தைகளுக்கு ஸ்கூல் திறக்க போகிறது.. ஆனால், ஸ்கூலுக்கு போவதற்கு, பாடப் புத்தகங்கள், யூனிபார்ம் என எதையுமே வாங்கி தரவில்லையாம்.. இதனால் மனமுடைந்துபோன நீது, தினமும் அடிவாங்கி சாவதைவிட, ஒரேடியாக இறந்துவிடுவதே மேல் என்ற முடிவுக்கு வந்தார்.. நேற்றைய தினம், பெட்ரூமிலேயே தூக்கிட்டு தற்கொலையும் செய்து கொண்டார்...
இந்த தகவல் அறிந்ததும் அரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.. நீதுவின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக பத்தனம்திட்டா அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.. மகளின் சடலத்தை பார்த்து நீதுவின் பெற்றோர் கதறி கதறி அழுதார்கள்.. பிறகு, அரூர் போலீசிலும் புகார் செய்தனர்.,.. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து, உண்ணியையும் கைது செய்தனர்.. இப்போது ஜெயிலில் இருக்கிறார் உண்ணி..
குழந்தைகள்: அம்மா - அப்பா இல்லாமல் அந்த 3 குழந்தைகளும் கதறி கொண்டிருக்கின்றன.. இதற்கெல்லாம் ஒரே காரணம், நீது அழகாக இல்லை என்பதுதானாம்.. இது ஒன்றையே சொல்லி சொல்லி காட்டி, துன்புறுத்தி வந்துள்ளார் உண்ணி.. கடைசியில் அந்த, பரிதாப ஜீவனின் உயிர் ஒரேடியாய் அடங்கி விட்டது...!!!
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications